வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வாழநினைத்தால் வாழலாம்




                                               வாழநினைத்தால்  வாழலாம்

வாழ்க்கையில்  ஏற்படும்  எதிர்பாராத  திருப்பங்கள் ,
மனிதனின் மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்
ஏன் நடந்தது என்று தெரியாத ஒரு   மன வருத்தம்
மனதினில் சத்தம்  போடாமல் எழும்   ஆசைகள் !

எதை கண்டும் நெஞ்சினுள் ஏற்படும் ஒரு ஏக்கம்
கெட்டதை நினைத்து மனதினில் வேதனை கலந்த துக்கம் ,
யார் மீதோ ஏற்படும் காரணம்மில்லாத  கோபம் !
வெற்றி பெற முடியாமல், கண்ணீர் சிந்தும் தோல்வி !

வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்,
வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத உறவுகள்
மனிதனின் மனதினில்  அலைபாயும் பாச உணர்வுகள்
அவன் முன்னேற்றத்திற்காக செய்யும் செயல்கள்!

மனித வாழ்க்கையில், விட முடியாத  தொடர்புகள்
வாழ்க்கையில் விட்டொழிக்க முடியாத தொல்லைகள்
வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும்   அவமானங்கள்
உறங்கும்போது கலைய மறுக்கும் கனவுகள் !

நிலையில்லாத வாழ்க்கையில் நிரந்தரத்தை நினைப்பதும்,
வாழ்க்கையில், இன்ப, துன்பங்களை  சமமாக நோக்காமலிருப்பதும்  ,
ஆறடி நிலமே சொந்தம் என அறியாமல் இருப்பதும்,
உன்னுடன் வருவதோ நீ செய்த பாவ புண்ணியங்கள் என தெரிந்தும் !

இன்றைய ஆடம்பரமும்,கலாசாரமும், மனிதனை வாழ விடுவதில்லை
ஆண், பெண்  இருவர் சம்பாதித்தாலும்,  நிம்மதி என்பது இல்லை ,
ஒருவக்கொருவர்  புரிதலுடன் , விட்டுக்கொடுத்தால் துன்பம்மில்லை
மனிதனே, வாழ நினைத்தால் வாழலாம், வழியாய்  இல்லை !


ரா.பார்த்தசாரதி









.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக