தொடரும் இனிய தலைமுறை
பெயர் சொல்லும் பெயரன்(பேரன்)
நம் பெயரை வைத்துக்கொள்ளும் பெயரன்
பெருமை பேசும் பேத்தி
கூடிவாழும் குலத்தின் குலக்குறியீடு
மகனுக்கு நடைபயில்வித்த கால்களுக்கு
நடை தளர்ந்த வயதில்
நடைவண்டிகளாய்ப் பேரன்கள்
ஓடியாடும் சிறுபிள்ளையின் பேச்சு
ஒடிந்த மனதிற்கு ஒத்தடம் போடும்
[…]
தலையெடுக்கும் தலைமுறையினரைத்
தடத்தில் அழைத்துச்செல்லும் கரங்களாக
ஆச்சி …தாத்தா… அய்யா…அப்பத்தா… ஆயா…
பாட்டி…பாட்டையா…. மாமை…
விரல் பிடித்து வழிகாட்டும் பருவம் முதிர்ந்தபின்
தாவி ஓடும் இளையதலைமுறையைத்
தன் பாசவேர்களால் கட்டிப்போடுவார்
கைநீட்டிக் கதைபேசும் மழலைகளை
கைகாட்டி வழிநடத்துவார்
ஒவ்வொரு வீட்டிலும் வாழும் குலதெய்வங்கள்
நம் பெற்றோரும்
பெற்றோரின் பெற்றோரும்
ஆலமரங்களாய் முன்னைய தலைமுறையினர்
ஆதாரமாய் நம்மைக் காப்பர்.
”தாவி ஓடும்
இளைய தலைமுறையைத் தம் பாசவேர்களால் வீழாது காப்போர் பெற்றோரும்,
பாட்டன்மார்களும், அவர்களையொத்த பிற உறவுகளுமே! கைநீட்டிக் கதைபேசும்
மழலைகளைக் கைகாட்டி வழிநடத்தும் வித்தகர்கள் அவர்கள்” என்று முதுமையைப்
போற்றும் புதுமைக் கவிதையிது! இதனை இயற்றியிருக்கும் முனைவர். மா. பத்மபிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்கிறேன். பாராட்டுக்கள்!
=========================================================================
=========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக