வெள்ளி, 6 ஜூன், 2014

பெயரிடாத ஆண், பெண் உறவு




                                     பெயரிடாத  ஆண், பெண் உறவு

        தர்ம சிந்தனை,  நல்லெண்ணம்  கொண்டு  உதவுபவன் ,
        செய்யும்  உதவிக்கு,  எந்த கைம்மாறு  எதிர்பாரான்,

        வேலைக்காரியின்,  மகள் படிப்பிற்கு ஏன் உதவவேண்டும்?
        கார் டிரைவரின் தாயாரின் மருத்துவத்திற்கு ஏன் உதவவேண்டும் ?
        மாதம்  ஒரு முறை அநாதை  குழந்தைகளுக்கு ஏன் உதவவேண்டும் ?
        இவர்கள்  எனது   பெயரிடப்படாத  உறவுகள் என சொல்லவேண்டும் 

        உறவுகளின்  பெயர் இருந்தும்,  உறவு  மறந்துபோகும் !
        பெயரே  இல்லாத  ஆண், பெண்  உறவுகள் வந்து போகும் !            

        பாசமும், பந்தமும், கொண்ட உறவுகள் நிலைக்குமா?
        நாம்  செய்யும்  நல்லவைகள் என்றாவது பிரதிபலிக்குமா!

        ஒழுக்கம்  மாறாத  அன்பும்,  பழகும்  விதமே  உறவின் எல்லை !
        இதனை  அறிந்த  மனித இனத்திற்கு  என்றும்  கவலை இல்லை !

        நான்  நோய்வாய்பட்டு  இருந்தேன்   சில  நாட்கள் !
        என்னை  காண வந்ததே அந்த பெயரிடப்படாத  உறவுகள் !

        ரா. பார்த்தசாரதி

         
 


வியாழன், 5 ஜூன், 2014

உலக சுற்றுசூழல் தினம்

   



                                                      உலக  சுற்றுசூழல் தினம் 
                  

                 சுற்றங்கள்  சூழ  வாழும்   மனிதனே !
                 சற்றே சுற்றுப்புற  சூழலை  கவனிக்காமல்  இருப்பது  ஏன்?
                 பிற நாட்டினை மேற்கோள் காட்டும் உன் வார்த்தைகள் 
                 ஏன்  உனது  நாட்டிற்கு  செய்ய கழிவிரக்கம் கொள்கிறாய்!

                 மனிதனே !   உன் சுற்றுப்புற  சூழலையினை  பார் !
                 இதற்க்கெல்லாம்  நாமேதான்  காரணம்,
                 வீட்டின்  சுத்தம் ,   நோயின்  ஓட்டம்,
                 நாட்டின்  சுத்தம், சுகாதாரத்தின்  ஏற்றம் !

                 வீட்டிற்கு  ஓர் மரம், தெருவிற்கு பல மரம்',
                 வீட்டினை சுத்தமாக்கு , நாட்டினை பசுமையுடன் வளமாக்கு,
                 மனித வாழ்க்யினை . பொன்மயமாக்கு 
                 நமது  நாட்டினை பலவகையில் ஏற்றமுடியதாக்கு !

                 நமக்கு நாமே  சூளுரை  எடுத்துகொள்வோமே !
                 நமக்கு நாமே  தூய்மை எனும் விதையினை விதைத்துகொள்வோமே,
                 நாட்டிலும்  பசுமை புரட்சி  ஓங்க   பாடுபடுவோமே!
                 உலக  சுற்றுசூழல் தினத்தை  பயனுற செய்வோமே !

               ரா. பார்த்தசாரதி




        
 

உலக சூற்று சூழல் தினம்



     

                உலக  சூற்று  சூழல்  தினம் - 05-06-2014


                   வானத்தைப்போல்   பரந்த  மனம்  கொள்,

                   மலையின்  உயரம்போல்  லட்சியம் கொள்,

                  கடல் அலைபோல் சுறுசுறுப்பினை கற்றுக்கொள் ,

                 கண்ணுக்கு தெரியாத உயிரூட்டும் காற்றுபோல் உதவ கற்றுக்கொள்,

                 உலகின்  சுற்றுசுழலையும்     பாதுகாக்க   எண்ணம்கொள் !

புதன், 4 ஜூன், 2014


                                       நீ  இருந்தால்  என்னோடு

                நினைப்பது   நிறைவேறும்   நீ  இருந்தால்  என்னோடு,
                நடப்பது  நலமாகும் நான் இருந்தால்  உன்னோடு ,
                இருவரும்  சேர்ந்திருப்போமே  என்றும் அன்போடு,
                இன்றுபோல்  என்றும்  வாழ்ந்திடுவோம்   பண்போடு!

                ஒருவரின்  இதயத்தில்  ஒருவர்  குடியிருந்தால் 
                ஒருவரில் இருவரையும், ஓருடலாய் கண்டிடலாம் 
                கண்களின்  பார்வையாலே  உன்னை கண்டிடலாம் ,
                இருவிழி  நேசத்தாலே  உன்னை  அறிந்திடலாம் !

               தனிமை  உனக்கேது,  தாங்கும் இதயம்  எனக்கேது,
               தனிமையில்  என்றும்  நாம் இனிமை காண முடியாது,
               உலகத்தை மறந்து,  உறவு சொல்லி  விளையாடு,
               உள்ளத்தை  அறிந்து  எனக்காக  வாழ்ந்திடு!

               காதல்   கவிபாடு, காலமெல்லாம்   விளையாடு ,
               காதல் ஒன்றே  காதலர்களின்  வழிபாடு 
               மனதை  பறிகொடுத்தபின்  வாழ முடியாது 
               உன்னை என்  நினைவில்  இருந்து மாற்ற  முடியாது !
 
               உன்  இருவிழிகளின்  நேசம், அதுவே காதல் தேசம்
               அதுவே  நான் சரண் புக  தேடும் காதல்  தேசம்
               நினைப்பது நிறைவேறும்  நீ இருந்தால் என்னோடு,
               நடப்பது  நலமாகும்  நான் இருந்தால்  உன்னோடு !

              ரா.பார்த்தசாரதி

                 

செவ்வாய், 3 ஜூன், 2014

தாயும் சேயும்


                                              தாயும்  சேயும்

                1.  தாயே  விலைநிலமாம்,  தந்தையே வித்தாம்,
                    குலம்  தழைக்க  வந்த  ஓர்  சொத்தாம் !


               2.  பெண்  முழுமை  அடைவதும்  தாய்மையாலே,
                    தாயாக  மாறுவதும்  அந்த தாய்மையாலே !.

              3.  கருவறையில்  உன்னை  வைத்து  பாதுகாத்தேன்,
                    எனக்கென்று  உண்ணாது  உனக்காக  உண்டேன் ! 

     
                4.  பிறந்த  மேனியுடன்  வெளியுலகில்  வந்தாய் 
                     தாய் தந்தையர்க்கு  மட்டற்ற  மகிழ்ச்சி தந்தாய் !


                5.  உனக்காக  கண்விழித்து  தூக்கத்தினை  மறந்தேன்,     
                     உனக்காக  பாசத்தையே பாலாக  பொழிந்தேன் !

               6.  எனது  அணைப்பே  உனக்கு அடைக்கலம்,     
                     எனது  மடியே  உனக்கு  தொட்டில் !.

              7.   உன்  பசி, தூக்கத்தை அழுகையால் வெளிப்படுத்துகிறாய்,        
                    உன்  கள்ளமில்லா  சிரிப்பால் கவலைகள்  போக்குகின்றாய் !

              8.   தோளையே தூளியாக்கி  உன்னைச்  சுமக்கின்றேன்,
                     உன்னை  வயிற்றில்  சுமந்ததை  விட  பாரமா ?


             9.  அன்னைக்கு    ஆயிரம்   பிரச்சனை  இருப்பு,
                  உன்னைக்  கட்டியணைப்பதில்தான் ஆனந்த களிப்பு.!


           10. எங்கள்  இல்வாழ்க்கையே  உன் படைப்பு ,
                 எங்கள்  வாழ்கையில்  நீ ஒரு Yenkal  துடுப்பு  !


           11. உன்  வளமே  எங்கள்   சிறப்பு ,
                 உன்  நினைவே  பாசத்தின்   பிணைப்பு  !


           12. குழந்தையின்  வளர்ப்பு  தந்தையின்  கடமையே
                 அன்னையின்  வார்த்தைகள் அன்பின் இனிமையே !

          13.   அன்னையைப் போல  ஒரு  தெய்வம்  இல்லை,
                  திசை  நான்கும்  அன்னையைப் போல் எவரும்மில்லை !.       
              

L Murali Manivizha



மணிவிழா / சஷ்டி  அப்தபூர்த்தி வாழ்த்து மடல்
எல். முரளிதரன்                                                                            தேதி : 17-07-2013

சாஸ்திரி ஹால் சமுக கூடத்தில்  இன்று ஓர் கல்யாணமேடை ,
முரளிதரன், பிருந்தா முரளிதரன், தம்பதிகளின் மணிவிழா மேடை!

கல்யாணம் என்றாலே வைபோகமே,
வாரணமாயிரம்  பாடி வாழ்த்துவோமே !

ஆயிரம்  நிலவு (பௌர்ணமி) கண்ட இல்லற தம்பதிகளே,
என்றும் வாழ்வாங்கு வாழ்வீ ர்கள்  வையத்திலே !


அகவை அறுபது என்றும், அருமையும்  பெருமையும் உடையதன்றோ,
 தலைமையேற்று நடத்தும் மகளும்,மகனும் பெருமைக்குரியவர்கள் அன்றோ! ,

கணவன் என்றாலே  (கண் + அவன் ) என்பதாகும்.,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !

திருமதி ஓர் வெகுமதி என்று கூறுவது பழக்கம் 
திருமதியின்  பெயரே பிருந்தா என்று அழைப்பது பழக்கம்!

கல்யாணம் என்றாலே உற்றார் , உறவினர்ககளின் , ஆசிர்வாதமே,
அகிலத்தில் சிறந்தது , தாய், தந்தையின்  ஆசிர்வாதமே !

ஆறு எழுத்தில் ( முரளிதரன் )   என்றும் நான்கு அடங்கும் ,
பிருந்தா எனும் பெயர் விளங்கும்.


காலமும் , காட்சிகளும்  என்றும் மாறும்,.
 உறவே என்றும் நிலைத்து வாழும்.!

அன்பும்  அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை 
பண்பும் பயனும் அது.   என்பது  வள்ளுவன் வாக்கு 








ரா. பார்த்தசாரதி , கமலா பார்த்தசாரதி

திங்கள், 2 ஜூன், 2014



                                      நினைக்கத் தெரிந்த மனமே


* தாயின் ஸ்பரிசத்தை
உன்
அரவணைப்பில் கண்டேன்!


* தந்தையின் நேசத்தை
உன்
கரம் பற்றி
நடக்கையில் கண்டேன்!


* காதலனின் மோகத்தை
உன் காதல் மொழிபேசும்
கண்களில் கண்டேன்!


* கணவனின் கரிசனத்தை
உன்,
"அடியேய்' எனும் ஒற்றை
வார்த்தையில் கண்டேன்!

* யாதுமாகி நின்றாய்!


* கண்ணீருடன்...
கண்ணியத்துடன்...
ஏற்கிறேன் உன்னை...
என்
உயிர் தோழனாய்!


* மீண்டும் பிறப்பெடுப்பேன்!
தாயாய்...
தந்தையாய்...
காதலனாய்...
கணவனாய்...
நீ காட்டும் அன்பினை
தனித்தனியாய் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்


ரா. பார்த்தசாரதி