பெண்ணே நீதான்
ஒரு உயிரைப் படைத்த கடவுளும் நீதான்
பாலுட்டி, சீராட்டி வளர்த்தவளும் நீதான்,
என்னை வயிற்றிலும், தோளிலும் , மடியிலும் சுமந்தவள் நீதான்
என் தகப்பனை அடையாளம் காட்டியவள் நீதான்
என் தாய் மொழியை கற்று கொடுத்தவள் நீதான்
அன்பு, பாசம், நேசம் என்னவென்று கற்றுக்கொடுத்தாய நீதான்
என்னோடு விளையாடி, அன்புகாட்டியவளும் நீதான்.
திருமணப் பந்தலில், கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்
நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால் ஆலோ சனை கூறுபவளும் நீதான்
நான் மூப்பு அடைந்தால், என்னை மடியில் சுமப்பவளும் நீதான்
மானிட சக்தியின் மறு அவதாரமாய், பராசக்தியாய் இருப்பவளும் நீதான்
குடும்பத்தில் மந்திரி, காதலி, தாய், மனைவி, ஆகிய பல பதவிகளும் நீதான்,
குடும்பத்தின் பல்கலைகழகமாய் திகழ்பவளும் நீதான் ,
பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் நீதான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக