சனி, 27 ஜனவரி, 2024

முகவுரை - 2

                                                    

                                     முகவுரை 

          கவிதை என்பது கண்ணாடியின் ப்ரதிபிம்மமே .  எண்ணத்திலே 
          எழும்   வார்த்தைகளை கொண்டு சொல்லோசையுடன் வடிப்பதே 
         கவிதையாகும்.   ஒன்றை பற்றி எழுதும் போது அவற்றை பற்றி 
          மனதிலே நினைவு கொண்டு அதற்காக எழும் வார்த்தைகளே 
          கவிதையாக உரு பெரும்.  கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை
          நடையும்,  சொல்லோசையுமே அதற்கு சிறப்பாக அமையும்.
         
          எல்லா கவிஞ்சர்களும் தனது மனதில் தோன்றியதையே
          வார்த்தைகளாக வடித்து கொடுப்பர்.   அந்தந்த சந்தர்ப்பத்திற்கு 
          ஏற்றவாறு, மனதிற் தோன்றியதையே பாடலாக எழுதுவதுண்டு !
         சினிமாப்பாடலுக்கும், நாடக பாடலுக்கும் வித்தியாசமுண்டு,
          கிராமங்களில் பாடும் கிராமிய பாட்டுக்கும், கூத்து பாட்டுக்கும் 
         வித்தியாசம் உள்ளது.  சிலது வசனநடையிலும், கிராமிய பாட்டு 
          அவர்களின் பண்பாடு, தொழில், விவசாயம் இவற்றை சார்ந்தே 
          வாய்ப்பாட்டாகவே பாடப்படும்,  இவற்றிக்கு அகராதிகள் 
          கிடையாது .  

          சினிமா பாடல்கள் படத்தின் கதைக்கு ஏற்றவாறும், கதா நாயகன் 
          கதா நாயகியை  தொடர்படுத்தி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாடல்கள் 
          அமையும்.  அன்றைய பாடல்களில் கருத்தும், பொருளும் நன்கு 
          புரியும்.  இன்றைய பாடல்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்து 
          பாடல்கள் அமைத்துள்ளன . அன்று தூய தமிழில் பாடல்கள் 
          அமைந்தன . இன்று தமிழ் மொழியில் கலப்படங்கள் உள்ளன.

          என் கவிதைப்பூக்கள் அல்லது கவிதை திரட்டு என்று கூறலாம்
          இதன்  ஆசிரியர் ரா. பார்த்தசாரதி ஓர் இளநிலை பட்டதாரி. 
          பொருளாதாரத்தில்பட்டம் பெற்றாலும், தமிழில் ஆர்வம் உள்ளவர்.
          கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலின் 
          கடைசி பாகத்திற்கு அவருடன் இருந்து உதவி புரிந்து அந்நூல் 
          பூர்த்தி செய்வதற்கு காரணமாய் இருந்தார் . பூவுடன் கட்டிய 
          நார் மனப்பதை  போல அவருடன் இருந்த சில நாட்கள் என்னை 
          கவிதை எழுத என் மனம் தூண்டியது.  தினமலர் கவிதை உறவு  
          வல்லமை போன்றவற்றில்  பல கவிதைகள் எழுதியுள்ளார் 
          திரு.ரா. பார்த்தசாரதி (புனைப் பெயர், பாலா, இனியவன் என்ற 
          பெயரில்  சிறு கதைகள் கவிதைகள் எழுதியுள்ளார் . இந்நூலில்
          ஏதேனும்  தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்.  இருந்தால் திருத்தி
         அமைத்துக்கொள்கிறேன் . ஆசிரியர் முடிவே தீர்மானிக்கப்படும்.
          என் கவிதைப்பூக்கள் என்கிற வலைத்தளத்தில், பல கவிதைகள் 
          திருமண வாழ்த்து மடல்கள்,காவியாஞ்சலி எழுதியுள்ளார்.  என் 
          கவிதைப் பூக்கள், இந்நூலை என்தாயின் ஆசியுடன் அவர் 
          பாதத்தில் வீழ்ந்து வணக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன்!

          நன்றி .                                               
                                                                                         இப்படிக்கு 

                                                     கடல்மங்கலம், வங்கிபுரம் ரா.பார்த்தசாரதி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக