வியாழன், 25 ஜனவரி, 2024

அயோத்தி ராமன்

  



    



   அயோத்தி ராமன் 

    ராமன் பிறந்ததும்  நவமியிலே 
   கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே ,
   இரண்டும் கடவுளின் அவதாரங்களே 
   இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே !

   ராமானயத்தின், காவியத் தலைவன் ராமனே 
   பிறன்மனை நோக்குபவனை தண்டித்தவனும் ராமனே 
   குணத்திற்கும் நட்புக்கும்  இலக்கணமாய்  இருந்தவர் ராமனே 
   ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே !

  ராம நாமமே  நலம் தரும் நாமமே ,
  அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே !
  யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே 
   ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே !

  புனர்பூசம்  நக்ஷத்திரத்தில் பிறந்தவனே  
  அகலிகைக்கு சாபவிமோசனம்  அளித்தவனே
   சபரிக்கு அருள் செய்தவனே,பொறுமை மிக்கவனே 
   அனுமனை ஏற்றுக்கொண்டவனே. வாலியை அழித்தவனே !

   விபீஷணனை தம்பியாக ஏற்றுக்கொண்டவனே !
   ராவணனை அழித்து, சீதையை மீட்டவனே !
   அயோத்தியில் சிறந்த  அரசனாய்  ஆட்சிப் புரிந்தவனே  !
    தசரதனின் மூத்த மகனே, குணத்தில் சிகரம் போன்றவனே !

    அயோத்தியின் சக்கரவர்த்தியாய் நீதி தவறாதவனே  !
    சீதாராமனாகவும் .சக்கரவர்த்தி திருமகனாய் முடிசூடியவனே!
    லவன், குசன் என இரு மகன்களைப் பெற்றவனே 
    இறுதியில் பலருடன் வைகுண்டம் சென்றவனே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக