புதன், 24 ஜனவரி, 2024

என் தாய்

 

                                                             சரோஜா - என் தாய் 

வாழ்வின் ஏட்டினை திருப்பிப்  பார்த்தேன்,
வலிதாங்கா இளமைபருவத்தை  எண்ணிப் பார்த்தேன் ,
எழுதுகோலை  துணிவுகொண்டு கைய்யில் எடுத்தேன்,
அன்னை சரோஜாவின் அருமையினை எழுத துணிந்தேன்.!

மக்களைப் பெற்ற மகராசியே   தாய்தான் ,
குடும்பத்தின் ஆணிவேராய் இருப்பதும் தாய்தான்,
ஞானியும், துறவியும்  போற்றும் தெய்வம்,
ஞாலம்   புகழ்ந்திடும் சிறந்த தெய்வம் !

ஏழு பிறவி எடுத்து  ஏழு பிள்ளைகள் பெற்றாய்,
ஏழு ஏழு ஜென்மத்திற்கு ஒர்  தொடர்பு வைத்தாய்,
ஏழுலே  ஒன்றே  ஒன்று  பெண் ஆனாலும் ,
எல்லோரிடத்திலும் மாறா அன்பும், பாசமும் வைத்தாய் !.

ஓய்வின்றி, உறக்கம்மின்றி,  உன் உயிரைக் கூட,
 ஒவ்வொர்  பிறவிக்கும் பணயம் வைத்தாய்.,
உன்னை வையகம் எந்நாளும் போற்றுமே,
உன் அருமை அறியா பிள்ளைகளை  தூற்றுமே.!

பாசமுள்ள   வேளையிலே, காசு பணம்  கூடலியே,
காசு வந்த   வேளையிலே.  பாசம் வந்து சேரலியே ,
பருவத்திலே நாங்கள் பட்ட  வலி தாங்கலியே ,
வார்த்தையிலே  வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லையே.!

பாசத்தோடு வாழ்வதுதான் தாயின் குணமே,
பாசத்துடன்  இருப்பதுதன் பிள்ளைகளுக்கும்  நலமே.
எனக்கென்று  துன்பம் வந்தால் உனக்கென்று வேறு பிள்ளையுண்டு ,
உனக்கென்று துன்பன் வந்தால் எனக்கென்று வேறு தாயுண்டோ ?

தாயைவிடச்  சிறந்த தெய்வம்  இல்லை ,
திசை நான்கும்  அவள்போல் எவரும் இல்லை,
தாயின் பெருமையினை சொல்ல வார்த்தையில்லை,
தியாகச்சுடரே  தாயுருவம், மனதினின்றும் மறைவதில்லை !

இளமையில் ஸ்பரிசம்,  முதுமையில் பாசம்,
என்றும் உறவின்  சிறந்த பந்தபாசம்,
இளமையில்  நான் உனக்கொரு குழந்தை,
முதுமையில் எனக்கு    நீயொரு   குழந்தை !

வாழ்க்கை  படகினிலே  நீயொரு  துடுப்பு 
எங்கள்         பிறப்பே  உன் படைப்பு 
எங்கள்         வளமே உன் சிறப்பு ,
எங்கள்   நினைவே  பாசத்தின் பிணைப்பு !

பூமியைவிடச்   சிறந்தவள்   தாய் ,
ஆகாயத்தை  விடச்  சிறந்தவர்  தந்தை.,
பூவிலே  சிறந்தது  மல்லிகை     ரோஜா,
எங்கள்   தாயின்   பெயரோ         சரோஜா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக