காதல் நாடகம்
உன் அன்பும் நேசமும் என்னை உன் வசமாக்குமே
எல்லை மீறும் அன்பே என் செல்வம் ஆகுமே !
நான் உன்னை பார்க்கும் போது விண்ணை பார்கின்றாயேநான் மண்ணை பார்க்கும் போது நீ என்னை நோக்குகின்றாயே !
ஒரு முழம் பூவிற்குள் உன்னை களிப்புற செய்தேன்
என்னருகில் நீ இருந்தால் உலகமே சுழல்வதேன் !
உன் கள்ளவிழி பார்வையில் மயங்கினேனே
என் இதயத்தை உன்னிடம் பறிகொடுத்தேனே !
உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே ,
கொள்ளும் இன்பமே, சொர்க்க வாழ்வினிலே !,
திருமணம் எனும் பந்தலில் அன்புக்கைகள் சேருமே
மகிழ்ச்சி வெள்ளத்தில் இரு உள்ளங்கள் துள்ளுமே !
இரவில் சிந்தும் தேனும் வாய்ச் சொல்லில் ஊறுமே
தென்றல் வீசியே நம் வாழ்வில் இன்பம் காணுமே
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக