திங்கள், 28 ஜூன், 2021
Kadalmangalam Venugopalan
கடல்மங்கலம் வேணுகோபாலஸ்வாமி
த்ராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம் !
வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !
தாயாரை தரிசித்து வேங்கடவனை தரிசிப்போம் !
தரணியில் யாவரும் நலம்பெற யாசிப்போம் !
மனிதனை புனிதம் ஆக்குவது தெய்வ தரிசினம் !
மனதில் சலனம் போக்குவது தெய்வ தரிசினம் !
திருமலைவாசா என்று அழைத்தாலே குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும் நினைத்தாலே நல்வழி காட்டும் தெய்வம் !
கோவிந்தா, கோவிந்தா, என்றாலே பரவசம் !
கோவிந்தன் அருளும் கிடைத்திடுமே நம்வசம் !
என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம், திருமலை தெய்வம் !
திங்கள், 21 ஜூன், 2021
Manja Niraatu vizha
மஞ்சள் நீராட்டு விழா
ஞாயிறு, 20 ஜூன், 2021
Father's day
தந்தையர் தின விழா
எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவிய நாடு ,
அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற நாடு ,
தாயை விட சிறந்த கோவில் இல்லை,
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை !
தாயிடம் அன்பும், தந்தையிடம் அறிவும்,
அவர்களால் கல்விமானாய் உலகில் திகழவும்,
பணம் ஒன்றினால் பாகுபடுத்த தெரிந்தவனாய்,
ஏன் பாசத்தை மட்டும் காட்ட தயங்குகின்றாய் !
அன்று அவர்கள் கொடுத்த முகவரிதான்,
இன்று உன்னை அடையாளம் காட்டுகின்றதே,
பழையதை மறந்து, புதியதில் என்றும் திளைக்காதே,
வந்த வழினையும், பாதையினையும் என்றும் மறக்காதே!
தந்தையே உன் பிறப்பிற்கு காரணம் ,
தந்தையே உன் அறிவிற்க்கு ஆதாரம்,
பணம் என்றும் எட்டிப் பார்க்கும்,
பாசம் என்றும் பக்கத்தில் நிற்கும் !
வாழ்கை முழதும் குடும்பத்தின் தூணாய் ,
உன் ஆண்மைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாய்,
உலாவி வரும் தந்தையே இடிதாங்கி,
ஏன் எனில் நல்லது கெட்டதெல்லாம் அவர்மேலே!
தந்தைக்கும், தாய்க்கும் ஊன்று கோலாய் இருந்திடு ,
அவர்களே கண்கண்ட தெய்வமென நினைத்திடு,
தரணியில் என்றும் சிறந்து விளங்கிடு,
எல்லோர்க்கும் நல்லவனாய் என்றும் திகழ்ந்திடு !
ரா.பார்த்தசாரதி
சனி, 19 ஜூன், 2021
உலக யோகா தினம் ஜூன் 21ம் தேதி
ஆய கலைகள் அறுபது நான்கு கலையே
யோகாவும் இதனில் அடங்கும் கலையே
யோகிகளும், துறவிகளும் தொன்றுதொட்டு வளர்த்த கலையே
நமது நாட்டினில் தோன்றிய பழம் பெரும் கலையே !
உடலும்,மனதும் ஒன்று கூடி, உணர்ச்சிகளை அடக்கும்
மூச்சு பயிற்சியினால் பலவித நோய்கள் ஒடுங்கும்
யோகப் பயிற்சியும் , நடை பயிற்சியும் அனுதினம் செய்யுங்கள்,
அது இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !
யோகாசனங்களில் பல வகைகள் உண்டு
சில யோமற்றும் காசனங்களுக்கு மிகுந்த சிறப்புண்டு
சிறுவர் முதல், முதியோர்கள் வரை யோகா பழகலாம்
அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !
யோகா கலை நமது நாட்டில் தோன்றியதே
பழம் பெரும் கலையானாலும் ,எல்லோர்க்கும் உகந்ததே
இதன் அருமை, பெருமை அறியாத மனித வாழ்வே வீணாகும்
நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,
யோகாசனங்களை செய்து உடல் நலனை பேணுங்கள்
யோகாசனங்களின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள்
உலக யோகா தினம் அறிவுறுத்தும் கருத்தென உணருங்கள் !
ரா.பார்த்தசாரதி
நிச்சியதார்த்த வாழ்த்து மடல்
வெள்ளி, 18 ஜூன், 2021
Thirumana thirnam
திருமண தினம்
திங்கள், 7 ஜூன், 2021
ஓவியமா ! காவியமா!
ஓவியமா ! காவியமா!