ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

Inrum ulagam maaravillai



                                              இன்றும் உலகம் மாறவில்லை 



     பிள்ளை  பிறந்தால் என்றும் பேரின்பம் 
     குலம் தழைக்க வந்த  திருமகன் 
      பெண் பிறந்தால்  ஏனோ பெருமூச்சு 
      பெற்றோர்கள் வெளிபடுத்தும் ஓர் தனிப்பேச்சு!

     இன்றும் பெண் சிசுவதை நடக்கின்றது 
    இதனை அரங்கேற்றுவதும்  பெண் இனமே,
    குழந்தையும், தெய்வமும்,  ஒன்றுதானே 
    பெண் குழந்தைகளை புறக்கணிப்பதும் ஏனோ?

    தன்னைப் போல் பிறரையும்  நினை 
     ஆண் , பெண் பாகுபாடின்றி  நினை 
    பெண்ணே  உன் வீட்டின் செல்வம்,
    உன் குடும்பத்தில் அவளொரு பல்கலைகழகம்  !

    பெண்ணை  ஆணுக்கு நிகர் என நினை,
    தங்கமென  தன்  பெண்ணை வளர்த்தான் 
    தங்கத்தை திருமண பந்தத்தில் தொலைத்தான் 
    பிறந்த வீடு விட்டு, புகுந்தவீடு புகுந்தாள்!

    பிரித்து, பாகுபடுத்தும் பெண்ணின் வாழ்க்கை,
    எதிர்காலம், எப்படியோ என் நினைக்கும் வாழ்க்கை,
   தன்னலம்மின்றி  பிறர் நலனுக்காக புகுந்தாள் 
   தன்  முன்னேற்றத்தை காணத் துடித்தாள் !

   பிறந்த வீட்டில் கொடிகட்டிப்   பிறந்தாள்,
   இன்று கொம்பைச் சுற்றிப் படரும் கொடியானாள்,
  இன்று உரிமைக்காக சிலவற்றை விட்டுகொடுக்கிறாள்
  விட்டுகொடுக்கும் வாழ்கையே உயர்வென நினைக்கிறாள் !

 பிள்ளை வீட்டில் பிச்சை எடுக்கும்  பெற்றோர் 
 பெண் வீட்டில் மரியாதையாக நடத்தப் பட்டாலும் 
 பழமை பேசி, தன்னுக்குள் போட்டுக்கொண்ட வேலி ,
 என்று மாறுமோ இந்த தேவையற்ற வேலி !

மருமகனை, மகனாக நினைக்கத் தெரிந்தாலும்,
மருமகளை, மகளாக நினைக்கத் தெரிந்தாலும்,
பழமை நீக்கி, காலத்திற்கேற்ப வாழத் தெரிந்தாலும்,
பெண்ணே ! இன்றும் உலகம் மாறவில்லை !


ரா.பார்த்தசாரதி 


  
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக