புதன், 15 ஏப்ரல், 2015

ஒரு பேருந்தின் கதறல்






                                                   ஒரு பேருந்தின் கதறல்

                        மூலை  முடுக்கெல்லாம் ஏற்றிச் செல்கின்றேன்
                        ஏழைக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் சிறந்த வாகனம்
                        ஓய்வின்றி எந்நாளும் உங்களுக்கு உதவுகிறேன்
                         மாணவர்களை , இலவசமாக ஏற்றிச்செல்கின்றேன்!


                        நான் சுமக்கும்போது  ஜாதி மதம் பார்ப்பதில்லை
                        தடவழி பலகையும், திருக்குறளையும் சுமக்கின்றேன்
                        நடத்துனரும், ஓட்டுனரும்  என்னை  ஆளுபவர்களே 
                       இடை இடையே ஏறி இறங்கும் பயணிகளும் நண்பர்களே !


                        என் அருமையும், சிறப்பும், பொது மக்களுக்கு தெரிவதில்லை ,
                        பொதுநல  போராட்டத்திற்கும்,மொழி போராட்டத்திலும்
                         உங்கள் நண்பன் என்று நான் கூறிக் கொண்டாலும்
                        கோபம் கொண்டு, உடைக்கவும்,தீயும் வைக்கிறார்கள் !


                        உங்கள் சொத்தினை  நீங்களே  அழிக்கலாமா
                        நான் கதறினாலும், கண்டுகொள்ளாமல் இருக்கலாமா.
                       என்னை உங்கள் நண்பனாய்  கருதுங்கள் 
                        நான் உங்கள் நாட்டின்  சொத்தாக நினையுங்கள் !


                     ரா.பார்த்தசாரதி
                       

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக