சனி, 4 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டே வருக 2015





மன்மத  ஆண்டே  வருக  2015

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் மன்மத ஆண்டை  புதிதாய் உருவமெடுதான்,
தமிழ் வருடங்கள் அறுபது என சொல்வோம் 
அழகிய மன்மத வருடம் உதித்ததே என கூறுவோம் 



பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே தமிழ் புத்தாண்டே !
நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

கடல் கடந்து தொழில் செய்தாலும்,  கைது செய்தாலும்,
பிறர் நம் பொருளை  கைப்பற்றினாலும், யாருக்கு  இழிவு, 
எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல தீர்மானத்துடனே, 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் தமிழ் புத்தாண்டே !


சுயநலங்கள்,  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல் 
அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே !
ஜாதிப்  பிரிவினைகள்  மாறி என்றும் 
வேற்றுமையில் ஒற்றுமை ஒங்காதோ புத்தாண்டே !


நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு,மாநிலம் சமாதனம்  மட்டும் ,
தானமாய்   கிடைக்காதோ புத்தாண்டே !
ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின் 
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !
பூமியெங்கும் அமைதி மட்டும் 
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே

ரா.பார்த்தசாரதி 

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக