செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உலக தொழிலாளர் தினம்

                                                உலக தொழிலாளர் தினம்

தொழில் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தொழிலாளியின் பங்குண்டு,
அவர்கள் உரிமைகளையும், நலனையும் காக்க பல சங்கங்கள் உண்டு
தொழிலாளர்களின் நலமும், உரிமையும்,சரிவர காக்கப்படவில்லை ,
அரசாங்கமும், முதலாளிகளும், இதனை சரிவர நிறைவேற்றுவதில்லை !

முதலாளி,  தொழிலாளியை கைப்பொம்மையாக ஆட்டி வைப்பதும்
தொழிலாளியை  அடிமையாக எண்ணும்  எண்ணம்
ஏன் நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம்
இம்மனப்பாங்கே தொழிலாளர்கள் துன்பம்  அடைவது திண்ணம் !

தன் முன்னேற்றமே பெரிதென நினைக்கும் முதலாளி
தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் தன்மை
ஏனோ தொழிலாளர்களிடத்தில்  ஏற்படும் வன்மை,
இதனால் தொழிலாளி வர்க்கம் அடைவதோ தீமை!

சட்டங்களும், நலச்சங்கங்களும் தொழிலாளியின் நலன் காக்கவே,
அங்கேயும்  அரசியல் நுழைந்து  அவைகளை கெடுக்கவே
காலத்திற்கேற்ப சட்டதிடங்களை தங்கள் விருப்பதிற்காக வலைப்பதுண்டு
இதனால் தொழிலாளர்களும் பாதிப்பு  அடைவதுண்டு !


தொழிலாளர்களின்  சிலை கடற்கரையில் அமைந்ததுள்ளதே
அவர்களின் கண்ணீரோ கடலில் கரைகின்றதே
உரிமைக்கும், நலனுக்கும், நீதி கிடைக்க போராடுவோம்
சபதம் ஏற்போம்    உலக தொழிலாளர்  தினத்தன்று !


ரா.பார்த்தசாரதி





புதன், 15 ஏப்ரல், 2015

ஒரு பேருந்தின் கதறல்






                                                   ஒரு பேருந்தின் கதறல்

                        மூலை  முடுக்கெல்லாம் ஏற்றிச் செல்கின்றேன்
                        ஏழைக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் சிறந்த வாகனம்
                        ஓய்வின்றி எந்நாளும் உங்களுக்கு உதவுகிறேன்
                         மாணவர்களை , இலவசமாக ஏற்றிச்செல்கின்றேன்!


                        நான் சுமக்கும்போது  ஜாதி மதம் பார்ப்பதில்லை
                        தடவழி பலகையும், திருக்குறளையும் சுமக்கின்றேன்
                        நடத்துனரும், ஓட்டுனரும்  என்னை  ஆளுபவர்களே 
                       இடை இடையே ஏறி இறங்கும் பயணிகளும் நண்பர்களே !


                        என் அருமையும், சிறப்பும், பொது மக்களுக்கு தெரிவதில்லை ,
                        பொதுநல  போராட்டத்திற்கும்,மொழி போராட்டத்திலும்
                         உங்கள் நண்பன் என்று நான் கூறிக் கொண்டாலும்
                        கோபம் கொண்டு, உடைக்கவும்,தீயும் வைக்கிறார்கள் !


                        உங்கள் சொத்தினை  நீங்களே  அழிக்கலாமா
                        நான் கதறினாலும், கண்டுகொள்ளாமல் இருக்கலாமா.
                       என்னை உங்கள் நண்பனாய்  கருதுங்கள் 
                        நான் உங்கள் நாட்டின்  சொத்தாக நினையுங்கள் !


                     ரா.பார்த்தசாரதி
                       

 

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

Inrum ulagam maaravillai



                                              இன்றும் உலகம் மாறவில்லை 



     பிள்ளை  பிறந்தால் என்றும் பேரின்பம் 
     குலம் தழைக்க வந்த  திருமகன் 
      பெண் பிறந்தால்  ஏனோ பெருமூச்சு 
      பெற்றோர்கள் வெளிபடுத்தும் ஓர் தனிப்பேச்சு!

     இன்றும் பெண் சிசுவதை நடக்கின்றது 
    இதனை அரங்கேற்றுவதும்  பெண் இனமே,
    குழந்தையும், தெய்வமும்,  ஒன்றுதானே 
    பெண் குழந்தைகளை புறக்கணிப்பதும் ஏனோ?

    தன்னைப் போல் பிறரையும்  நினை 
     ஆண் , பெண் பாகுபாடின்றி  நினை 
    பெண்ணே  உன் வீட்டின் செல்வம்,
    உன் குடும்பத்தில் அவளொரு பல்கலைகழகம்  !

    பெண்ணை  ஆணுக்கு நிகர் என நினை,
    தங்கமென  தன்  பெண்ணை வளர்த்தான் 
    தங்கத்தை திருமண பந்தத்தில் தொலைத்தான் 
    பிறந்த வீடு விட்டு, புகுந்தவீடு புகுந்தாள்!

    பிரித்து, பாகுபடுத்தும் பெண்ணின் வாழ்க்கை,
    எதிர்காலம், எப்படியோ என் நினைக்கும் வாழ்க்கை,
   தன்னலம்மின்றி  பிறர் நலனுக்காக புகுந்தாள் 
   தன்  முன்னேற்றத்தை காணத் துடித்தாள் !

   பிறந்த வீட்டில் கொடிகட்டிப்   பிறந்தாள்,
   இன்று கொம்பைச் சுற்றிப் படரும் கொடியானாள்,
  இன்று உரிமைக்காக சிலவற்றை விட்டுகொடுக்கிறாள்
  விட்டுகொடுக்கும் வாழ்கையே உயர்வென நினைக்கிறாள் !

 பிள்ளை வீட்டில் பிச்சை எடுக்கும்  பெற்றோர் 
 பெண் வீட்டில் மரியாதையாக நடத்தப் பட்டாலும் 
 பழமை பேசி, தன்னுக்குள் போட்டுக்கொண்ட வேலி ,
 என்று மாறுமோ இந்த தேவையற்ற வேலி !

மருமகனை, மகனாக நினைக்கத் தெரிந்தாலும்,
மருமகளை, மகளாக நினைக்கத் தெரிந்தாலும்,
பழமை நீக்கி, காலத்திற்கேற்ப வாழத் தெரிந்தாலும்,
பெண்ணே ! இன்றும் உலகம் மாறவில்லை !


ரா.பார்த்தசாரதி 


  
      

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

தாய்மை என்னும் தூய்மை

                                                   தாய்மை என்னும் தூய்மை


  மலையிலிருந்து நதிகள்  பல  பிறக்கின்றன
 நதிகளை  அன்னைக்கு  நிகர்  என சொல்கிறோம்! 
  நன்முறையில் அணை போடுவது நல்லதே,
  கழிவுநீரை கலக்குவது என்றும் தீமையானதே!

  வாழும் உயிரினம்  வாழா  வேண்டுமே
  நீரை குடிபவர்களுக்கும், கேடு விளையுமே
  பயிர்களை  அழிப்பதா , மக்கள்நலம்கெட வைப்பதா ! 
 தெரிந்தும்  தண்ணீரை அசுத்தபடுத்துவதா !

 இன்று நதி நீரை மனசாட்சியின்றி கலங்கப்படுத்துகிறோம் ,
 தூய்மை  என்பது  தாய்மையின்  வடிவமே
 தாய்மை  என்னும் தூய்மை  காக்கபடவேண்டுமே
 இதனை நன்முறையில் அரசாங்கமே  நிறைவேற்றவேண்டுமே !


 ரா.

  

ஆரோக்கிய தினம்





                                                   ஆரோக்கிய தினம்


        உலகில், அனைவரும் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் நல்லது,
        நல்ல உணவும்,உடற்பயிற்சியும்  ஆரோக்கியத்திற்கு நல்லது ,
        சோம்பேறித்தனமும், முயற்சியின்மையும் ஆரோக்கியத்திற்கு கேடாகும்,
         தீய பழக்கங்கள் என்றும் ஆரோக்கியத்திற்கு  கேடாகும்!

         உடலில் ஆயிரம் வியாதி, பெயரோ ஆரோக்கியசாமி,
        நோயின்றி வாழ நல்ல ஆரோக்கியம்  தேவை,
        உடல்  ஆரோக்கியம் பெற சத்துணவு  தேவை,
        உடல் வலிமை பெற  நல்ல உடற்பயிற்சி  தேவை !

       சுவர் இருந்தால்தான், சித்திரம் எழுத  முடியும்
       ஆரோக்கியமாய் இருந்தால்தான் வாழ்க்கை வளர்சியடையுமே 
        நல்ல உணவும், உடற்பயிற்சியும் மேற்கொள்வோமே ,
       மனதில் இறுக்கம் இன்றி, ஆரோக்கியத்தை பேணுவோமே  !
       

      ரா.பார்த்தசாரதி

திங்கள், 6 ஏப்ரல், 2015

படக்கதை -7

                                                              படக்கதை -7

                                                          தந்தையும்  மகனும்

                   சுமப்பதும், தாங்குவதும் தாய் தந்தையே
                   தாய் உன்னை வயிற்றில் சுமக்கிறாள் 
                   தந்தையோ உன்னை தோளில் சுமக்கின்றான்
                  காதலியோ உன்னை  கண்ணில் சுமக்கிறாள் !


                 தோளில்  தாங்கி  உனக்கு  உலகை காட்டுகின்றேன்
                  தாயோ  அன்பும்,  பாசமும் உன்னிடம் காட்டுகிறாள்
                  அறியாப்   பருவத்தில் உனக்கு நான்  வழிகாட்டி
                   முதுமைப் பருவத்தில் நீதான் என் வழிகாட்டி !

                  ஒன்றை மட்டும் உனக்கு  உணர்த்துகின்றேன்
                   பணம்  எட்டிபார்க்கும், பாசம் பக்கத்தில் நிற்கும் ,
                   பணத்திற்காக  பாசத்தை தொலைத்து விடாதே
                   பாசத்தை விலைகொடுத்து  என்றும் வாங்கிடமுடியாதே!
 



சனி, 4 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டே வருக 2015





மன்மத  ஆண்டே  வருக  2015

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் மன்மத ஆண்டை  புதிதாய் உருவமெடுதான்,
தமிழ் வருடங்கள் அறுபது என சொல்வோம் 
அழகிய மன்மத வருடம் உதித்ததே என கூறுவோம் 



பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே தமிழ் புத்தாண்டே !
நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

கடல் கடந்து தொழில் செய்தாலும்,  கைது செய்தாலும்,
பிறர் நம் பொருளை  கைப்பற்றினாலும், யாருக்கு  இழிவு, 
எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல தீர்மானத்துடனே, 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் தமிழ் புத்தாண்டே !


சுயநலங்கள்,  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல் 
அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே !
ஜாதிப்  பிரிவினைகள்  மாறி என்றும் 
வேற்றுமையில் ஒற்றுமை ஒங்காதோ புத்தாண்டே !


நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு,மாநிலம் சமாதனம்  மட்டும் ,
தானமாய்   கிடைக்காதோ புத்தாண்டே !
ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின் 
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !
பூமியெங்கும் அமைதி மட்டும் 
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே

ரா.பார்த்தசாரதி 

.