காதலுக்கு மருந்து
காதலே உனக்கு மருந்து போடுகிறேன் ,
உன் காதல் வியாதி நீக்கத்தான் !
மொழிகள் பிறக்கும் முன் பிறந்தாய் ,
வர்ணிக்க முடியாதபடி என்னை திணறச் செய்தாய்!
வார்த்தைகளை சிலையாக்கி உன்னை நான் செதுக்குவேன்,
கடவுளும், காதலும் வேறில்லை என நினைதிடுவேன் !
உன் கைப்பட்டால் இதயம் படபடக்கும் !
உன் கைப்பட்டால் தொட்டாசிணுங்கிக்கும் வலிக்கும்!
உனது விழிகள் எனது பார்வைதானே ,
எனது மனதில் உன் உருவம்தானே !
வலியால் துடிக்கின்றது என் மனம்,
உன் விழிக்கு மருந்திடும் போதேல்லாம் !
வள்ளுவன் காதலுக்குள் காமம் வைத்தான்,
காதலன் காமதிற்குள் காதலை வைத்தான் !
ஆதாமும், ஏவாளும், ஆக்கி வைத்த கூட்டான்சோறுதானே,
அரை வடிவ ஆப்பிள் வடிவமாய் காட்சி தரும் சின்னம்தானே!
காதல் என்பது தெளிந்த நீரோடை அக்காலத்தில் ,
கலங்கிச் செல்லும் கழிவு நீரோடையானதே இக்காலத்தில்!
அடுத்த தலைமுறையிலும் உன்னை தீண்டுவேன்,
அதற்கான மருந்து ஒன்றினை கொடுத்திடுவேன்!
ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக