வாலி
புவியில் புனைபெயர் கொண்ட வாலியே ,
நின் புகழ் திரைஉலகில் ஓங்கியே !
உனது பாட்டெல்லாம் பாரினில் பரவியே,
உன்னால் பின்னணி பாடகர்களுக்கும் பெருமையே !
பதினைந்தாயிரதிற்குமேல் பாடல் எழுதிய பாடலாசிரியனே,
திரையுலகில் நீ ஒரு சகாப்தம்தானே !
இன்று நீ இல்லா தமிழ் நாடு
இன்று நிழல் இல்லாத வீடு !
நந்தா விளக்கே கவிஉலகின் ஒளிவிளக்கே!
உயர்ந்த சிந்தனை, அஞ்சாமை இவ்வுருவமே வாலி !
உன் திரைபட பாடல்கள் தலைமுறைக்கும் அவணி ஆளுமே!
உன் பாட்டென்றால் பாமரனின் நெஞ்சத்தையும் அள்ளுமே !
உன்னோடு முடிந்ததோ காதல் காவியம்
இனி எவர் படைப்பார் கவிதை ஓவியம் !
நீ கல்லறையில் தூங்கினாலும், உன் பாடல்கள் தூங்காது,
உன் பாடலின் இன்னிசையே என்றும் ஓயாது !
வாழ்க! வாலியீன் புகழ்!
ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக