இதுதான் சுதந்திர தினமா ?
கைபேசி மூலம் ஏற்படும் காதல் சுதந்திரம்,
ஊழலையும், கொடுமைகளையும் கண்டு கொள்ளாத சுதந்திரம்,
பெண்மையை மதியாமல், கற்பை சூறையாடும் சுதந்திரம்,
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நினைப்பதில் சுதந்திரம்,
ஆடை மாற்றுவதுபோல், திருமண முறிவில் சுதந்திரம்,
தேசியகீதம் கேட்டும் அரை மனதுடன் நிற்கும் சுதந்திரம்,
மாநிலத்திற்கு, மாநிலம் சுய ஆட்சி சுதந்திரம்
கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், தொலைத்த சுதந்திரம்,
நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி கவலைபடாத சுதந்திரம்,
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை மறந்த சுதந்திரம்.
அறுபத்தெட்டு ஆண்டுகள் ஆனாலும், பொருள் காணமுடியாத சுதந்திரம்.
ஜனநாயகமே, இதுதான் சுதந்திர தினமா ?
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக