பெண் விடுதலை
எங்கே போயிற்று பெண் விடுதலை?
அது...
தொலைந்து போன அந்த பெண்ணிடமே
கேட்டேன்
* நாகரிக மோகத்தில்
நம்முடைய
கலாசாரத்தை அழித்த
நங்கைகளிடமே கேட்டேன் !
* நெற்றி திலகமிட்டு
கருங்கூந்தல் சீவி
மலர் சூட்டி
அழகு பார்த்த தாயின் எதிரில்,
கருங்கூந்தல் கத்தரித்து
நாகரிக உடையில்
நளினமாய் திரியும்...
நங்கைகளிடம் கேட்டேன்,
அறிவைதானே வளர்க்கச் சொன்னேன்,
ஆடையை நானா குறைக்கச் சொன்னேன்,
* அதிகாலையில்
புதுப்புனலாடி
நளினமாய் மாக்கோலமிட்டு
வீட்டில் குத்து விளக்கேற்றும்
நிலைமாறி...
அதிகாலையிலிருந்து
இரவு வரை
அலைபேசியும், கையுமாகத்
திரியும்
நங்கைகளிடம் கேட்டேன் !
* வேறு ஆடவர் முகம் பார்க்க
நாணி கோணி
கால்களால் கோலம் வரையும்
நிலைமாறி...
நட்பு எனும் பெயரில்
ஆடவர்களுடன் ஊர் சுற்றும்
நங்கைகளிடம் கேட்டேன் !
* "இவர் தானடி
உன் மணாளன்'
என்று கூறிய நிலைமாறி...
கல்விச் சாலை
செல்லும் போது திருமணம்
முடிவதற்குள் விவாகரத்து
என்று திரியும்
நங்கைகளிடம் கேட்டேன் !
* ஐயகோ...
பாரதியே இதை பார்த்தால்
கொதித்தெழுவார்...
உனக்கேனடி விடுதலை;
உனக்கா நான் வாங்கித் தந்தேன் விடுதலை...
என்று பித்தானக மாறி பிதற்றுவான்!
* பெண்ணே...
வாங்கித் தந்த விடுதலை
தன்னம்பிக்கையை உயர்த்தி
வீட்டில் குத்து விளக்கு ஏற்றத்தானே
ஒழிய...
வீட்டை கொளுத்தும்
கொள்ளியாக்க அல்ல!
* வாங்கிய விடுதலையை
வீணாக்காதே...
மீண்டும்
மூலையில் முடங்காதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக