திங்கள், 29 ஜூலை, 2013

உறவும் உலகமும்

                                       உறவும் உலகமும்

உறவாலே உலகம்  என்றும்  தொடர்கிறது ,
பகையாலே அவைகள் என்றும் அழிகின்றது!

ஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,
சுயநலங்கள்  எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே!

நல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,
மன்னிப்பு  கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை!

நல்லதையும், நன்மையே  செய்தாலும் பலர் நினைப்பதில்லை,
விட்டுகொடுக்கும் உறவுகள் என்றும்  கெடுவதில்லை !

உறவு என்னும்  சொல்லிருந்தால்  பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.
இரவு  என்னும்     சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.!

உலகில் பிரிகமுடியாதது   பந்தமும் பாசமும்,
உலகில் ஒதுக்க முடியாதது  நட்பும்,  உறவும் !

உறவாலே தொடர்வதும்  மனித இனமே ,
பிரிவாலே  பாழ்படுவதும்  மனித இனமே!

ஆலம் விழுதினைப் போல் மனைவி  தாங்கி நிற்பாள்,
கண்ணின்  இமையென கணவனை  காத்து  நிற்ப்பாள் !

ஆயிரம் உறவுகள்  உலகில்  இருந்திடுமே,
அன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே !

குடும்பத்தின்  ஆணிவேராய்  இருப்போர்  தாய்   தந் தைதானே, 
அன்பு,  பாசம்   இவையெல்லாம்   உறவின் எல்லைதானே !

.ரா.பார்த்தசாரதி

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக