ஞாயிறு, 28 ஜூலை, 2013

ஊட்டி வரை உறவு

ஊட்டி வரை   உறவு

இயற்கையின்  எழில்  கண்டேன் ,
மலை அரசியின் அழகினைக் கண்டேன்,
எண்ணத்தில் எழுச்சி கொண்டேன்
வார்த்தைகளால் வர்ணிக்க முடிவுகொண்டேன்!

இயற்கையின் வனப்பு,  மனிதனின் செழிப்பு ,
மலர்களின் சிரிப்பு,  மனதினிலே பூரிப்பு,
மானிட மனதில் ஏழும் மகிழ்ச்சியாலே,
மனம் கண்டு மகிழ்ந்ததே  இயற்கையாலே!

பூத்து குலுங்கும் புது மலர்கள் அசைய ,
பூங்காற்று மெல்ல  மலர்களை தழுவ,
பரிதியும் பனிமூட்டத்துடன் காட்சியளித்ததே ,
மலையும் அதனுடன் கைகோர்த்து நின்றதே !

உதகையே  நீ ஒரு  அழுகு நங்கை ,
குன்னுரே  நீ ஒரு  அழகு  குமரி ,
மலர்களும், மலைகளும்  மனிதனுக்கு  இயற்கை காட்சி ,
இரண்டுமே மனிதனுக்கு இன்பகாட்சி!

அவனியில் இயற்கை அன்னை தந்ததெல்லாம்
உலகில்  எல்லார்க்கும்  என்றும் சொந்தமடா ,
எனது, உனது  என்று சொல்வதெல்லாம் ,
இடையில்  மாறும்  ஓர் பந்தமடா!

தமிழகத்தின்  மலைக்கெல்லாம்  ஓர்  மலை ராணியே ,
என்றும் இயற்கையோடு நடத்திடுவாய் உன் அரசாட்சியே
தமிழுனுக்கு  என்றும் உதகை  உறவானதே
உலகிற்கு  என்றும்  அதுவே நிலையானதே! 


ரா. பார்த்தசாரதி






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக