புதன், 31 ஜூலை, 2013

காலம் மாறிப் போச்சு







   காலம்   மாறிப் போச்சு

வேராக மறைந்து, தான் தனித்துவமின்றி
வேறாகிப் போகும் காலம், மாறிவிட்டது!

மழலையைக் காப்பகங்களில் விட்டுத் தம்,
மழலைப் பேச்சை ரசிக்காதவர், எத்தனை!

இருவர், பொருளீட்டச் செல்லும் காலமிது!
சிறுவர், பூட்டிய வீட்டை நாடும் காலமிது!

தாய்ப் பாசத்தை எதிர்நோக்கியே ஏங்காத
சேய்கள் பெருகினால், நாடு நலமாகுமே!

ஏங்கித் தவிக்கும் பிள்ளைகளையே எண்ணினே
காலத்தின் கொடுமையினை கண்டு  வருந்தம்மடைந்தேனே !

ரா.பார்த்தசாரதி

திங்கள், 29 ஜூலை, 2013

உறவும் உலகமும்

                                       உறவும் உலகமும்

உறவாலே உலகம்  என்றும்  தொடர்கிறது ,
பகையாலே அவைகள் என்றும் அழிகின்றது!

ஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,
சுயநலங்கள்  எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே!

நல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,
மன்னிப்பு  கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை!

நல்லதையும், நன்மையே  செய்தாலும் பலர் நினைப்பதில்லை,
விட்டுகொடுக்கும் உறவுகள் என்றும்  கெடுவதில்லை !

உறவு என்னும்  சொல்லிருந்தால்  பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.
இரவு  என்னும்     சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.!

உலகில் பிரிகமுடியாதது   பந்தமும் பாசமும்,
உலகில் ஒதுக்க முடியாதது  நட்பும்,  உறவும் !

உறவாலே தொடர்வதும்  மனித இனமே ,
பிரிவாலே  பாழ்படுவதும்  மனித இனமே!

ஆலம் விழுதினைப் போல் மனைவி  தாங்கி நிற்பாள்,
கண்ணின்  இமையென கணவனை  காத்து  நிற்ப்பாள் !

ஆயிரம் உறவுகள்  உலகில்  இருந்திடுமே,
அன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே !

குடும்பத்தின்  ஆணிவேராய்  இருப்போர்  தாய்   தந் தைதானே, 
அன்பு,  பாசம்   இவையெல்லாம்   உறவின் எல்லைதானே !

.ரா.பார்த்தசாரதி

   

ஞாயிறு, 28 ஜூலை, 2013

காதலே உன்னோடு வாழ்வேன்



காதலே உன்னோடு வாழ்வேன்


பட்டாம் பூச்சியாக  மனம்  இருந்தாலும், 
 மலர்விட்டு மலர்,  தாவ மாட்டேன் !


  தேனிருக்கும் மலராய் நீ இருந்தாலும்,
  காகித பூவினை நான் விரும்பமாட்டேன்!


   கங்கையாய்  நீ இருக்க  என்றும்
    நான் கானலை  தேடமாட்டேன்!


    உனக்காக  பாடலை எழுதிவிட்டு,
    ஊருக்காக அதனை  படிக்கமாட்டேன்!

    உன்னோடு வாழ முடியாமல் போனாலும்,
    உன் நினைவோடு வாழ்ந்திடுவேனே!

    துணையாக நீ  வராமல் போனால்
    என் மனதை விட்டுச்  செல்வேனே!
 
    காதலுக்கா கடல்கடந்து  வேலைக்கு சென்றாலும்,
    என் இதயத்தை உன்னை, நினைக்கச் செய்வேனே !

    காதலால் சிலரது  இதயம் பாதிக்கலாம் ,
    காலம் ஒன்று சேர்ந்தால்  எதையும் சாதிக்கலாம் !

    காதலுக்கு கண் இல்லை என்பான் கவிஞ்சன்
    காதலுக்காக என்றும் கவிதையும் பாடுவான்  காதலன் !

    ரா. பார்த்தசாரதி

உண்மையும், பேருண் மையும்

 உண்மையும், பேருண் மையும் 

அடுபங்கரையே  பள்ளியறை என்று 
அகிலமாய்  இருந்த பாட்டிமார்  காலத்தில் !

சமையல்வேளை , வீட்டுவேலையோடு 
அருகிலிருந்த பள்ளிக்கு  செல்ல 
முடிந்தது  அம்மா காலத்தில்!

கல்லூரியில் படித்து  அறிவைப் பெருக்கி 
அலுவகப்பணியும்  சாத்தியமானது  அக்காமார் காலத்தில் !

நாகரிகத்தின் மாற்றங்கள், நவீன உடைகள், அலைபேசி  காதல் 
என சுந்தந்திரம் கிடைத்தது தங்கைமார் காலத்தில்,

அலைபேசியால் அளவான பேச்சு, முகம் அறியாதவரோடு " சாட்டிங் "
என்பது சுதந்திரத்தின்  அம்சம்.!

 தானியங்கி வாகனங்களை தாமே இயக்குகின்ற பேத்தி  ககாலத்தில்,
தலைமுறைக்கு, தலைமுறை பெண் இனம் முன்னேறியதே,!

படிப்பு, பணம், என வளம் பெருகியதே ,
இது  உண்மையென  எல்லார்க்கும்  தெரிந்ததே!

பாட்டி, அம்மாக்கள்  இருந்த காலத்தே,
இருந்த அன்பும், பண்பும் சுருங்கி போனதே,
இதுவும் ஓர்  பேருண்மையாதே.!

இன்று பணம் எட்டிப் பார்க்கிறது  பாசம் விலகியே போகிறது.

 ரா. பார்த்தசாரதி

வேர்களை வெட்டிவிடா திர்கள்

 வேர்களை  வெட்டிவிடா திர்கள்

விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !

இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்
இருட்டறை தான்.

திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதை நிலம்தான் !

தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?

கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?

குடும்பத்தின் ஆணிவேராய்
இருப்பதும்  தாய்தானே !!
சற்றே  சிந்தியுங்கள்
பெருமையினை  எடுத்துரையுங்கள் !

ரா. பார்த்தசாரதி

ஊட்டி வரை உறவு

ஊட்டி வரை   உறவு

இயற்கையின்  எழில்  கண்டேன் ,
மலை அரசியின் அழகினைக் கண்டேன்,
எண்ணத்தில் எழுச்சி கொண்டேன்
வார்த்தைகளால் வர்ணிக்க முடிவுகொண்டேன்!

இயற்கையின் வனப்பு,  மனிதனின் செழிப்பு ,
மலர்களின் சிரிப்பு,  மனதினிலே பூரிப்பு,
மானிட மனதில் ஏழும் மகிழ்ச்சியாலே,
மனம் கண்டு மகிழ்ந்ததே  இயற்கையாலே!

பூத்து குலுங்கும் புது மலர்கள் அசைய ,
பூங்காற்று மெல்ல  மலர்களை தழுவ,
பரிதியும் பனிமூட்டத்துடன் காட்சியளித்ததே ,
மலையும் அதனுடன் கைகோர்த்து நின்றதே !

உதகையே  நீ ஒரு  அழுகு நங்கை ,
குன்னுரே  நீ ஒரு  அழகு  குமரி ,
மலர்களும், மலைகளும்  மனிதனுக்கு  இயற்கை காட்சி ,
இரண்டுமே மனிதனுக்கு இன்பகாட்சி!

அவனியில் இயற்கை அன்னை தந்ததெல்லாம்
உலகில்  எல்லார்க்கும்  என்றும் சொந்தமடா ,
எனது, உனது  என்று சொல்வதெல்லாம் ,
இடையில்  மாறும்  ஓர் பந்தமடா!

தமிழகத்தின்  மலைக்கெல்லாம்  ஓர்  மலை ராணியே ,
என்றும் இயற்கையோடு நடத்திடுவாய் உன் அரசாட்சியே
தமிழுனுக்கு  என்றும் உதகை  உறவானதே
உலகிற்கு  என்றும்  அதுவே நிலையானதே! 


ரா. பார்த்தசாரதி






siru kavithaigal

நல்வாழ்வுக்காக   ஏழு

1.   மகிழ்ச்சியாக  இருக்க வேண்டும்

2.    பரிசுத்தமாக சிரிக்க கற்றுக்  கொள்ளுங்கள்

3.     பிறருக்கு  உதவுங்கள்

4.     யாரையும் வெறுக்காதிர்கள்

5.   சுறு, சுறுப்பாக  இருங்கள்

6.  தினமும்  உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்

7.   மகிழ்ச்சியாக  இருக்க முயற்சி செய்யுங்கள்

---------------------------------------------------------------------------------------------------
"விடியும் வரை "

விடுயும் வரை தெரிவதில்லை
கண்டது  கனவு   என்று.

வாழ்க்கையும்  அப்படிதான்
முடியும்வரை தெரிவதில்லை,
வாழ்க்கை எப்படி என்று/?

நிலவை  நேசி,  மறையும்வரை
கனவை நேசி கலையும் வரை
இரவை  நேசி விடியும் வரை.
காதலை நேசி, கல்யாணம் முடியும் வரை !
 ----------------------------------------------------------------------------------------------------------

வழி காட்டும் ஏழு

சிந்தித்து பேசுதல் வேண்டும்
உண்மையே பேச வேண்டும்.
அன்பாக பேச வேண்டும்.
மெதுவாக பேச வேண்டும்
சமயம் அறிந்து பேச வேண்டும்
இனிமையாக பேச வேண்டும்
பேசாதிருக்க பழக வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------


திங்கள், 8 ஜூலை, 2013

penn viduthalai





பெண்  விடுதலை 



எங்கே போயிற்று பெண் விடுதலை?
அது...
தொலைந்து போன அந்த பெண்ணிடமே
கேட்டேன்

* நாகரிக மோகத்தில்
நம்முடைய
கலாசாரத்தை அழித்த
நங்கைகளிடமே கேட்டேன் !

* நெற்றி திலகமிட்டு
கருங்கூந்தல் சீவி
மலர் சூட்டி
அழகு பார்த்த தாயின் எதிரில்,
கருங்கூந்தல் கத்தரித்து
நாகரிக உடையில்
நளினமாய் திரியும்...
நங்கைகளிடம் கேட்டேன்,
அறிவைதானே  வளர்க்கச் சொன்னேன்,
ஆடையை   நானா குறைக்கச் சொன்னேன்,  


* அதிகாலையில்
புதுப்புனலாடி
நளினமாய் மாக்கோலமிட்டு
வீட்டில் குத்து விளக்கேற்றும்
நிலைமாறி...
அதிகாலையிலிருந்து
இரவு வரை
அலைபேசியும், கையுமாகத்
திரியும்
நங்கைகளிடம் கேட்டேன் !

* வேறு ஆடவர் முகம் பார்க்க
நாணி கோணி
கால்களால் கோலம் வரையும்
நிலைமாறி...
நட்பு எனும் பெயரில்
ஆடவர்களுடன் ஊர் சுற்றும்
நங்கைகளிடம் கேட்டேன் !

* "இவர் தானடி
உன் மணாளன்'
என்று கூறிய நிலைமாறி...
கல்விச் சாலை
செல்லும் போது திருமணம்
முடிவதற்குள் விவாகரத்து
என்று திரியும்
நங்கைகளிடம் கேட்டேன்  !

* ஐயகோ...
பாரதியே இதை பார்த்தால்
கொதித்தெழுவார்...
உனக்கேனடி விடுதலை;
உனக்கா நான் வாங்கித் தந்தேன் விடுதலை...
என்று பித்தானக மாறி பிதற்றுவான்!

* பெண்ணே...
வாங்கித் தந்த விடுதலை
தன்னம்பிக்கையை உயர்த்தி
வீட்டில் குத்து விளக்கு ஏற்றத்தானே
ஒழிய...
வீட்டை கொளுத்தும்
கொள்ளியாக்க அல்ல!

* வாங்கிய விடுதலையை
வீணாக்காதே...
மீண்டும்
மூலையில் முடங்காதே!

சனி, 6 ஜூலை, 2013

srikanth kadaisee Aasai.

              கடைசி  ஆசை

நானோ  ஆயுள்  கைதி,
நாளை  காலை  முடியபோகுது  என் விதி,
நான் பார்க்கவேண்டும் என் திருமதி,
நான் அடைவேன்  மனநிம்மதி

  எழுதிய  தேதி - 06-11-2006