திருமண வாழ்த்து மடல்
1. ஆற்காட் ரோட்டில் உள்ள பத்மாராம் கல்யாணமண்டபத்தில் ஓர் மேடை ,
வஷிஷ்ட்க்கும், காவ்வியாவிற்கும் எழுதிவைத்த கல்யாண மேடை,
2. இருவீட்டாரும் இணைந்தே நடத்திடும் திருமண விழா ,
உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும் விழா !
3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர் ஆசியே
அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர் ஆசியே !
என்றும் சென்னையில் வாழ்ந்திடுவாய் சிறப்புடனே!
5. காதல் என்பது எது வரை? திருமணத்தில் முடியும் வரை,
திருமணம் என்பது எது வரை? இருமனம் ஓன்றாகி இல்வாழ்கையில்
இணைந்திடும் வரை!
6. திருமதி என்பது ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம்
திருமதியின் பெயரோ காவ்வியா என்று அழைப்பது பழக்கம் !7. காலங்களும், கோலங்களும், என்றும் மாறும்
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்
8. பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும் ,
புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும் !
9. .கணவன் என்றாலே, கண்ணைப் போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !
10.. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!
14.. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, விருந்துண்போம்
மணமக்கள் வாழ்வில் வளம்பெற வாழ்த்துவோம்!
15. அன்பும், அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
பண்பும், பயனும் அது. என்பது வள்ளுவர் வாக்கு.
