திங்கள், 24 ஏப்ரல், 2023

சீமந்த வாழ்த்து மடல்

 




                             

                                              சீமந்த  வாழ்த்து மடல் 

இடம்: அபிராமி மினி ஹால்                               தேதி: 04-05-2023
              கிழக்கு தாம்பரம், சென்னை -59.

சிறப்புமிகு  சீமந்தம்  திங்கள் ஆறிலும், எட்டிலும், அமைவதே 
 அருமை பூச்சூடலோ  திங்கள் ஐந்திலும் ஏழிலும் அமைவதே 
பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே!


ஜெயந்தின் மனைவி காயத்ரிக்கு  சீமந்தம் ! 
ஜெயந்தின்  அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
வண்டலூரில்  இனிதே ஜெயந்துடன்   வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !


மல்லிகை, முல்லை, தாழம் என பல மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனமும்,  பன்னீரும்  தெளித்து,
 வண்ண வளையல்களை கைய்யிலே அணிவித்து,
வலையோசை அவள் பிள்ளைக்கும், கணவனுக்குமே சொந்தம் 
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகளை   பெற்று தர,
காயத்ரியை  நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் ( காயத்ரி ) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள் என(காயத்ரியை ) வாழ்த்திடுவோம்  அன்பாலே !

ரா.பார்த்தசாரதி

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

thamizh puththaande

 




     தமிழ்ப்புத்தாண்டே  வருக ! இன்பத்தை தருக !

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் புத்தாண்டை சோபக்ருது  எனப்  பெயரிட்டான் 1

பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே புத்தாண்டே !

நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !

வஞ்சத்தையும், வன்மத்தையும் அகற்றிவிடு 
மன்னிக்கத்தெரிந்த  மனிதனாய் மாறிவிடு 

நாட்டுக்கு நாடு, சமாதனத்தை  போற்றிடு 
வேற்றுமையில் ஒற்றுமை காண வெற்றிக்கொடி  காட்டிட்டு  !


ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !

பூமியெங்கும் அமைதி மட்டும் 
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே !

ரா.பார்த்தசாரதி 

----------------------------------------------------------------------------------------------------------------------------------


                                 

*

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

Thirupuppugazh Anbargal

 


                   பெறுநர்: திருப்புகழ்  அன்பர்கள்  குழுமம் - Mrs. Uma Balaji

                                         குருவே வழிகாட்டி, குருவேத்துணை 

        திருப்புகழைப்  பாட . பாட  வாய் மணக்கும்,  செந்தூர் முருகனால் 
        வாழ்க்கை  என்றும் சிறக்கும் .  திருபுகழனை வாரம்தோறும் 
       ஒவ்வொரு  மேட்ரோசோன் இல்லங்களிலும்  இனிதே நடைபெறுகிறது.

      மனிதர்களில் மூன்று வகையுண்டு .  முதல்வகை மனிதனாய் பிறந்து 
       தவறே செய்யாதவர். இரண்டாம் வகை  தவறே செய்பவர். மூன்றாம் 
      வகை  தவறு செய்துவிட்டு பின் திருந்தியவர்கள் .

     மேற்கூறிய  மூன்றாம் வகையை சேர்த்தவர்கள் வால்மீகியும், 
     அருணகிரிநாதரும். இருவரும் இறைவன் அருளால் ஆட்படுத்தப்பட்டு 
    செயற்கரிய  செயலை  செய்தனர் .  வால்மீகி, வால்மீகி ராமாயணமும் 
    அருணகிரி நாதர் முருகன் மீது பாடிய  திருப்புகழ் எல்லோராலும் 
    பாடப்பெற்று  எல்லோர் உள்ளத்திலும்  நீங்கா இடம் பெற்றுள்ளது .\
     சைவம், வைணவம்  இரண்டிற்கும் பொது தன்மை உடையதாக 
    திருப்புகழ்  விளங்குகிறது  என்றால் அது  மிகையாகாது 
   
   குருவே வழிகாட்டி, குருவேத்துணை,  என்பதற்காகவே நம்மாழ்வார்க்கு 
   ஒரு  மதுரகவி ஆழ்வார் சீடராய் இருந்து  பக்தி பாடல்களையே 
  இயற்றினார்.  முருகன்  அருளாலும், அவரையே வழிகாட்டியாக 
  கொண்டு அவர் அருளால்  அருணகிரிநாதர்  மூவாயிரம் பாடல்களுக்கு 
  மேல்   பாடினார் . ஒரு சில  பாடல்களே  நமக்கு   கிடைக்கப்பெற்றது .

   திரு  A.S, ராகவன்  ( திருப்புகழ்  குருஜீ )  திருப்புகழ் பாடல்களை செவ்வனே
    சீரமைத்து  உள்ளம் உருகும்படி  பாடியும். மற்றவர்களுக்கு கற்பித்தும் 
   பல இடங்களில் திருப்புகழ்  அன்பர்கள் குழு  அமைத்து, பாராயணம் 
   செய்வதற்க்கு காரணமாய்   இருந்தார் . வடக்கேயும், தெற்கேயும்  மற்றும் 
  அயல் நாட்டிலும் திருப்புகழ் அன்பர்கள் பரவியுள்னனர் .சுருங்க கூறின் 
   திரு. ஏ' எஸ் . ராகவன் வாழ்நாள் முழுதும் திருப்புகழ் தூதுவராகவே 
   செயல்பட்டார் .

  திருப்புகழ்  அன்பர்கள் குழுமத்திற்கு  உறுதுணையாக திருமதி  சுதா  
மற்றும்  உமா பாலாஜியும்  சென்னை மெட்ரோசோன்  திருப்புகழ்  அன்பர்கள் என்கிற குழுமத்தின் மூலம் செவ்வனே   திருப்புகழ் வகுப்பு  நடத்தப்படுகிறது .

             குரு என்ற  சொல்லே  திருவின்  அடையாளம் !
             குருவின் துணையே வாழ்வின் சிறப்பாகும் !
            குருவின் நல்லாசியே  நமக்குத்  துணையாகும் !
             குருஜி  ஏ .எஸ். ராகவன் திருப்புகழின் தூதுவராகும் !

இதனை எழுதி முடிக்கும் போது  இரவு  ஒன்பது மணி. எழுதி 
முடித்ததும் நான் கேட்ட பாடல்,
              
             மண்ணானாலும்  திருச்செந்தூர்   மண்ணாவேன் 
              ஒரு மரமானாலும் பழமுதிர்சோலையின் மரமாவேன் 
              கருங்கல்லானாலும்  தணிகைமலையின் கல்லாவேன் 
              பசும்  புல்லானாலும் முருகன் அருளால்  பூவாவேன் !
-------------------------------------------------------------------------------------------------------------
   தொகுத்தவர் : ரா. பார்த்தசாரதி 

      

வியாழன், 26 ஜனவரி, 2023

kudiyarasu 2023

 

                                                   

                                                          இந்தியக் குடியரசு 

              இந்திய குடியரசின் 74 ஆம் ஆண்டினை கொண்டாடுகிறோம் 
             ஆங்கிலேயர்களிடமிருந்து  அஹிம்சை என்னும் அறவழியில
             வெற்றி வாகை சூடியதால் இக்குடியரசு தினத்தை நாம் 
             கொண்டாடுகிறோம் 
              உடல்களை வருத்தி தாயகத்திற்கு  தன உயிரை 
             அர்ப்பணித்த  வீரர்களின் தினம்
              தன சுகங்களையெல்லாம்  தூக்கி எறிந்த தியாகிகளின் 
             தியாக   தினம் 
             எந்த நோக்கத்தில் நமக்காக சுதந்திரத்தை வாங்கி 
              தந்தார்களோ அதை கண்ணியத்துடன் காப்பது 
              நம் கடமையன்றோ ?
             இன்றைய  நிலை என்ன !
            நாட்டுக்கு நாடு சமாதானம் தானமாய் கிடைக்காதா ?
            நம்பிக்கை இன்மையும்  நயவஞ்சகமும் கலந்த ஆட்சி 
             மாறாதா   இக்குடியரசு நாட்டில் !
            இந்தியர்  பல நாடுகளிலபெரும் பதவி வகித்தாலும் 
           இக்குடியரசு நாட்டின் நிலைமை கண்டு மனம் கலக்கமுற்றதே 
            எங்கு சட்டம் முடிகிறதோ அங்கேதான் கொடுங்கோல் 
            ஆரம்பம், என்கிறார் ஒரு எமர்சன் எனும் எழுத்தாளன்.
            டாக்டர் அம்பேத்கார்  அரசு சாசனங்களையம், சட்டங்களையும் 
            இயற்றி   மாநிலங்கள ஒரு குடைக்கீழ் கொண்டுவந்து 
            அதன் மூலம்  இந்தியா மாநிலங்கள்  எல்லாம் ஆட்சி   
            உட்பட்டு நடத்தப்படுகிறது 
            
              உலகளவில்  நாம்   இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம் 
             வேற்றுமையில்  ஒற்றுமை  என்பதை  காண்கிறோம் 
             இயற்கை  சீற்றம்  அடைந்து   வெள்ளம்  பெருகினாலும் 
              நாடுக்கு  நாடு  உதவிக்கரம்  நீட்டியதே,
             இந்தியன்  என்று  பெருமிதம் கொள்வோமே 
              நாட்டு  நலனில்  அக்கறை கொள்வோமே!
             குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
              நாட்டின் முன் னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே 
              ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே ,
              மொழிகள் பலவாயினும் ஒற்றுமை   ஓங்குதே !

              நாடு  உனக்கு என்ன செய்தது என  கேட்காதிர்கள் 
              நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் ,
             நாடு வளம்பெற  ஒற்றுமையுடன்  பாடுபடுவோமே,
             பிற  நாட்டிற்கு  எடுத்துகாட்டா  என்றும் விளங்குவோமே !
             ஜனநாயகத்தின்  குடைகீழ்   வளரும்  நாடு ,
              கலாசாரத்திலும்,  ஆன்மிகத்திலும்,  சிறந்த நாடு ,
           பழமையும், பண்பாடும் மிக்க நாடு .
              பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
              ணையற்ற  சந்ததியுடன் திகழும்  இந்தியா  எனும் நாடு!  


             ரா.பார்த்தசாரதி 

சனி, 21 ஜனவரி, 2023

 


                                                   பொங்கலின்  வண்ணக்கோலங்கள்

                                புள்ளியிலே  ஆரம்பித்து  புள்ளியிலே        
                                முடியும்    புள்ளிக்  கோலங்கள்,
                                
                                கோடுகளை  இணைத்துப்  போடும் கோலங்கள்,
                                புதுமையாக  நாம் காணும்  வடிவங்கள் !
                              
                                கோலங்கள்   பண்டிகைகளுக்காக மாறும் வண்ணங்கள்,
                                அதுவே  பெண்களுக்குரிய  கை  வண்ணங்கள் !

                                இதயத்தையும் , மனதையும் கவர்ந்திடும் கோலங்கள்,
                                மகாலட்சுமி அழைப்பதர்கான விடியற்காலை கோலங்ககள் !

                                காலங்களும், கோலங்களும் என்றும் மாறும்,
                                கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

                                இல்லத்தில்  கோலம்  போடுவதே மகாலக்ஷ்மியின் தரிசனம்
                               மனித  வாழ்கையில் சலனம் போக்குவதே  தெய்வதரிசனம் ! 

                                வெள்ளிகிழமை. விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்,
                                இறைவன் பெயரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்!

                                பொங்கலன்று  மெட்ரோஸ்னில் பல வண்ண கோலங்கள,
                                மனிதனின்  மனதில் தோன்றிடுமே  நல்ல  எண்ணங்கள் !

                             கோலத்திற்கு ஓர் அரசியாம்,பல வண்ண கோலங்களே  காட்சியாம் 
                                    அருமையும், அற்புத கோலங்களுக்கு தமிழரசியே சாட்சியாம் !


                                 ரா. பார்த்தசாரதி

                                 

செவ்வாய், 17 ஜனவரி, 2023

  

                                                    

                                                                   உறவுப் பூக்கள் 

                                        அரைமூடடை  நெல் சுமந்து 
                                        ஆற்றைக்கடந்து  அரைத்து வருவாளாம் 
                                        ஆத்தா !

                                        நான்கு பேர் நடும் சேற்றை 
                                        ஒற்றையாய் நின்று நட்டு முடிப்பாளாம் 
                                        அம்மா !

                                        ஊற  ஊற காத்திருந்து நீரை வடிகட்டி 
                                        சோற்றாக்கிய பின் வேலைக்கு போவாள் 
                                        சித்தி !

                                        தலைசால் ஓட்டி விதை விதைத்து 
                                        பரம்படிப்பாராம்   அப்பா !

                                        நீர் சோற்றை, பானையில் சுமந்து 
                                        வரப்பின் கரையில் நின்று சோற்றுக்காக 
                                        அழைப்பாள்  மனைவி !

                                        வெட்டிய விறகிலிருந்து கிளைகளை 
                                        வெட்டி ஒரே கட்டாக சுமந்து வந்து 
                                        போடுவாள் அத்தை !

                                        இரட்டை குடம் எடுத்து தண்ணீரை 
                                       இடுப்பிலும், தலையிலும் சுமந்து கொண்டு 
                                       வருவாள் அக்கா !

                                       குடத்து நீரை இறக்கி வைக்க 
                                       தன்  கைக்கொண்டு உதவும் தங்கை !

                                       உண்கின்ற வீட்டில் ஆளுக்கு ஒரு வேலை 
                                       செய்தாலே குடும்பம் ஒரு கதம்பமாகும் !

                                       ரா.பார்த்தசாரதி            

                                      
                                        
                                        

                                          

                                         


                                      

திங்கள், 9 ஜனவரி, 2023

manithaa ! manithaa !

                                                             


                                                                  மனிதா ! மனிதா !

                            மரம் போல் ஏன்  நிற்கின்றாய் ?
                           என மனிதனை ஏசாதே ?

                           மனிதா ! அதன் பணி உன்னால் செய்ய முடியுமா ?
                          ஆணிவேறாக நின்று மரத்தையும், இலை, கிளை 
                           தாங்குவதை உன்னால் மறக்கமுடியுமா ?

                         வெய்யிலில்   காய்ந்தாலும் இலைகள் 
                          நிழலை பரப்புவதற்கு  நன்றி சொல்ல முடியுமா?

                         மலர்தால்  வாடிவிடுவோம் எனத் தெரிந்தும் 
                        இதழ்விரித்து மகிழ்ச்சியோடு மகரந்தம் 
                        அளிப்பதை தவிர்ர்க்க முடியுமா ?

                       வெட்டுப்படுவோம், கடித்து  உண்ணப்படும் 
                       காலம்,காலமாய்,கவரும் வண்ணத்தில் 
                       நம்  கைக்கு  கிடைக்கும் கனிகள் !

                       மரத்திலிருந்து விழும் சரகுகள் உரமாவதையும் 
                       உயிர் வளி அளிப்பதால்தான் மழை உண்டாவதை 
                      யார் அறியார்?

                     ஒற்றைப் பண்புடைய வெற்று மனிதன் 
                     ஆடி அடங்கும் வாழ்க்கையில் ஆறடியே 
                     சொந்தமடா  மண்ணுக்கும், புழுவிற்குமே 
                     சொந்தம் என தெரிந்தும் ஆர்ப்பாட்டம் ஏனோ 

                      நீ மரத்தை விட  தாழ்ந்தவனே என அறியாயோ 

                      ரா.பார்த்தசாரதி