மனிதா ! மனிதா !
மரம் போல் ஏன் நிற்கின்றாய் ?
என மனிதனை ஏசாதே ?
மனிதா ! அதன் பணி உன்னால் செய்ய முடியுமா ?
ஆணிவேறாக நின்று மரத்தையும், இலை, கிளை
தாங்குவதை உன்னால் மறக்கமுடியுமா ?
வெய்யிலில் காய்ந்தாலும் இலைகள்
நிழலை பரப்புவதற்கு நன்றி சொல்ல முடியுமா?
மலர்தால் வாடிவிடுவோம் எனத் தெரிந்தும்
இதழ்விரித்து மகிழ்ச்சியோடு மகரந்தம்
அளிப்பதை தவிர்ர்க்க முடியுமா ?
வெட்டுப்படுவோம், கடித்து உண்ணப்படும்
காலம்,காலமாய்,கவரும் வண்ணத்தில்
நம் கைக்கு கிடைக்கும் கனிகள் !
மரத்திலிருந்து விழும் சரகுகள் உரமாவதையும்
உயிர் வளி அளிப்பதால்தான் மழை உண்டாவதை
யார் அறியார்?
ஒற்றைப் பண்புடைய வெற்று மனிதன்
ஆடி அடங்கும் வாழ்க்கையில் ஆறடியே
சொந்தமடா மண்ணுக்கும், புழுவிற்குமே
சொந்தம் என தெரிந்தும் ஆர்ப்பாட்டம் ஏனோ
நீ மரத்தை விட தாழ்ந்தவனே என அறியாயோ
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக