உறவுப் பூக்கள்
அரைமூடடை நெல் சுமந்து
ஆற்றைக்கடந்து அரைத்து வருவாளாம்
ஆத்தா !
நான்கு பேர் நடும் சேற்றை
ஒற்றையாய் நின்று நட்டு முடிப்பாளாம்
அம்மா !
ஊற ஊற காத்திருந்து நீரை வடிகட்டி
சோற்றாக்கிய பின் வேலைக்கு போவாள்
சித்தி !
தலைசால் ஓட்டி விதை விதைத்து
பரம்படிப்பாராம் அப்பா !
நீர் சோற்றை, பானையில் சுமந்து
வரப்பின் கரையில் நின்று சோற்றுக்காக
அழைப்பாள் மனைவி !
வெட்டிய விறகிலிருந்து கிளைகளை
வெட்டி ஒரே கட்டாக சுமந்து வந்து
போடுவாள் அத்தை !
இரட்டை குடம் எடுத்து தண்ணீரை
இடுப்பிலும், தலையிலும் சுமந்து கொண்டு
வருவாள் அக்கா !
குடத்து நீரை இறக்கி வைக்க
தன் கைக்கொண்டு உதவும் தங்கை !
உண்கின்ற வீட்டில் ஆளுக்கு ஒரு வேலை
செய்தாலே குடும்பம் ஒரு கதம்பமாகும் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக