வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கவனமாய் இருப்போம்

கவனமாய் இருப்போம் 

வெள்ளிச்சம்  வந்தால், இருள் விலகும் ,
தர்மம் செய்வதால், வந்திடும் இன்பம் !

இதயத்தில், அன்பு நிறைந்தால் , வன்மம் வெளியேறும்,
இரக்கம் நிரம்பினால் கோபம் வெளியேறும் !

பொறுமை நிரம்பினால், பொல்லாங்கு வெளியேறும் ,
பிறர்நலம், பேணினால், தன்னலம்  வெளியேறும்  !

இன்மொழி நிரம்பினால், வசைமொழி வெளியேறும்,
துணிவு ஏற்பட்டால்  அச்சம் வெளியேறும்! ,

நேர்மை நிரம்பினால், கயமை வெளியேறும்,
திருப்தி அடைந்தால், பொறாமை வெளியேறும்!

முயற்ச்சி  செய்தால், தடைகள் வெளியேறும்,
தோழமை கொண்டால், பகைமை வெளியேறும் 1

 வெளியேற்றபட   வேண்டியதை கணக்கில் எடுத்து,
நிரப்புவதிலே    என்றும்    கவனமாய்   இருப்போம்!

ரா. பார்த்தசாரதி
 



திங்கள், 26 ஆகஸ்ட், 2013

வாலி

                                                                         வாலி

புவியில்  புனைபெயர்  கொண்ட  வாலியே ,
நின் புகழ்  திரைஉலகில்  ஓங்கியே !

உனது பாட்டெல்லாம் பாரினில் பரவியே,
உன்னால் பின்னணி பாடகர்களுக்கும் பெருமையே !

பதினைந்தாயிரதிற்குமேல்   பாடல் எழுதிய பாடலாசிரியனே,
திரையுலகில்  நீ  ஒரு  சகாப்தம்தானே !

 இன்று   நீ   இல்லா   தமிழ்  நாடு
 இன்று     நிழல்    இல்லாத வீடு !

நந்தா விளக்கே  கவிஉலகின்  ஒளிவிளக்கே! 
உயர்ந்த சிந்தனை, அஞ்சாமை இவ்வுருவமே  வாலி !

உன் திரைபட    பாடல்கள்  தலைமுறைக்கும் அவணி  ஆளுமே!
உன் பாட்டென்றால் பாமரனின் நெஞ்சத்தையும் அள்ளுமே !

உன்னோடு முடிந்ததோ  காதல் காவியம்
இனி  எவர் படைப்பார்  கவிதை ஓவியம் !

நீ  கல்லறையில் தூங்கினாலும், உன் பாடல்கள் தூங்காது,
உன் பாடலின் இன்னிசையே  என்றும் ஓயாது !

   வாழ்க! வாலியீன் புகழ்!

ரா.பார்த்தசாரதி

 

 

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சுதந்திர சிறகுகள்

     
                                                சுதந்திர சிறகுகள்


மனிதனே,  நம்  சுதந்திரம்  பிறர்  பறப்பதற்கா 
நம் சுதந்திரம்,     நம்மை  பிறர்  ஆள்வதற்கா ?

இளைஞ்ர்களே   சிந்தனைச்  சிறகுகள் பறக்கவா 
காதல் சிறையினில் உன்னை  பூட் டிடவா

சிறுவர்களே, வசந்த சிறகுகள்  பறக்கவா, 
திரை அரங்கிலே  என்றும் தொலைத்திடவா?

வாக்களர்களே,   உங்கள் வாக்குசீட்டு எனும் அட்சயபபாத்திரத்தை ,
அரசியில்வாதியிடம்    இலவசமாக கொடுத்துவிட்டிர்களா ?

பாட்டாளி, தோழனே  உன் உழைப்புச் சிறகுகளை,
பண முதலைகளிடம்  சேர்ந்தே அடகு வைத்துவிட்டிர்களா ?

இன்னும், இன்னும், உதிர்ந்திடாத சிறகுகளோ,
நம்  நாட்டில்,  ஏராளம் , ஏராளம்!

இனியாவது, பெற்ற சுதந்திரந்திற்கான  இனிப்போடு ,
பெறவேண்டிய சுதந்திரத்திற்கான  கண்ணீரை பிரசிவிப்போம்!


ரா.பார்த்தசாரதி


.

புதன், 21 ஆகஸ்ட், 2013

காதல் உள்ளங்கள்

                                                             காதல் உள்ளங்கள்

உன்னாலே  உயிர்  வாழ்கின்றேன் ,
உன்  நினைவாலே துடிக்கின்றேன் ,
உன்னை  சந்திக்க  விரும்புகிறேன் ,
முடியாவிடில், கனவில் சந்திக்கின்றேன் !

வானமெனும்  வீதியிலே  வரவேற்றேன்  கனவிலே,
நிலவை, மறைத்தேன்  உன்னை நினைத்தேன் நெஞ்சினிலே ,
தென்றலாய் வந்து என்னை அணைப்பாயா?
என் மனதினிலே வந்து கலந்துவிடுவாயா?

உன் விழிகளின் படபடப்பில் என் இதயம் சிறகடிகும்,
உன் பார்வையால் என்  உயிர் துடிதுடிக்கும் ,
என் மனம் கடல் அலைப் போல் மோதுதே,
காதலால் நம் பார்வை ஒன்றோடுஒன்று உறவாடுதே!

காதல் அழகாய் பூக்குதே , சுகமாய் தாக்குதே,
நம்  உள்ளங்கள் , சொல்லாமல்,கொள்ளாமல் பந்தாடுதே !

ரா.பார்த்தசாரதி

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இதுதான் சுதந்திர தினமா ?

                                  

                                             இதுதான்   சுதந்திர  தினமா  ?

கைபேசி மூலம் ஏற்படும் காதல்  சுதந்திரம்,

ஊழலையும், கொடுமைகளையும் கண்டு கொள்ளாத  சுதந்திரம்,

பெண்மையை  மதியாமல், கற்பை சூறையாடும்  சுதந்திரம்,

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நினைப்பதில் சுதந்திரம்,

ஆடை மாற்றுவதுபோல், திருமண முறிவில்  சுதந்திரம்,

தேசியகீதம்  கேட்டும் அரை மனதுடன் நிற்கும் சுதந்திரம்,

மாநிலத்திற்கு, மாநிலம்  சுய ஆட்சி  சுதந்திரம்

கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், தொலைத்த சுதந்திரம்,

நாட்டின்  எதிர்காலத்தைப் பற்றி கவலைபடாத சுதந்திரம்,

சுதந்திரத்திற்காக  பாடுபட்ட தியாகிகளை மறந்த சுதந்திரம்.

அறுபத்தெட்டு   ஆண்டுகள் ஆனாலும், பொருள் காணமுடியாத சுதந்திரம்.

ஜனநாயகமே,  இதுதான்   சுதந்திர  தினமா  ?

ரா.பார்த்தசாரதி