வெள்ளி, 21 ஜனவரி, 2022
திங்கள், 3 ஜனவரி, 2022
பொங்கல் பண்டிகை
தையிலே உத்திராயணம் உதித்து வரும் காலம்
உதய சூரியனை வழிபடும் சங்கராந்தி காலம்
உழவர்கள் விளைச்சலை கொண்டாடும் காலம்.
தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக் காலம் !
உழவர்கள் உவகையுடன் கொண்டாடும் பண்டிகை
விவசாயமும், உழவர்களும் பாதிப்பு அடைந்தது வெள்ளத்தாலே,
திறமும், உறுதியும், கொண்டு வெற்றி காண்போம் உழைப்பாலே,
இயற்கை உரமும், புதுமை புகுத்தி வெற்றி காண்போம் விவசாயத்திலே!
உழவன் சேற்றினிலே இறங்கினால்தான் நமக்கு சோறு
நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு
விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு என நினைத்திடுவோமே,
விவசாயி நலனில் அக்கறை கொண்டு உதவி செய்துடுவோமே!
கரும்பின் கணுவில் கரும்பு துளிர்த்து வளர்ந்திடுமே !
உழவன் உழைப்பாலே விவசாயம் வளர்ச்சி அடைந்திடுமே !
விவசாயிக்கு முக்கிய பண்டிகை பொங்கல் திருவிழா !
சூரிய பகவனை நினைந்து கொண்டாடும் திருவிழா !
பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப்பண்டிகை,
பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கணுப் பொங்கல்,
கால்நடைகளுக்காக கொண்டாடும் மாட்டுப் பொங்கல்,
உறவும், நட்பும், பரிமாற்றம் கொள்ள காணும் பொங்கல்!
உழவர்களின் உரிகைக்காக கைகோர்த்து நிற்போமே!
வெள்ளத்தால் ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுசெய்ய வேண்டுவோமே !
கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே !,
குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே !
ரா.பார்த்தசாரதி
கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே !,
குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே !
ரா.பார்த்தசாரதி
Ruthran and varichaa moonrezhuthu
மூன்றெழுத்து
கவிபரணி ஏறி கலிங்கத்து பரணி பாடுகின்றேன்
கேளுங்கள், கேளுங்கள் !
ஆடிடும் அலையினில் எரிடும் நுரையென
பாடிடும் இசையினில் பண் என விளங்கிடும் முத்தமிழே !
மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு
முத்தமிழ் எனும் பெயருண்டு
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம்
குழந்தையின் சிரிப்பே மழலை
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதேவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம். ழுது
நாடு நலம் பெற பெயரும் வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
திரு. ருத்ரன், திருமதி வாரிசா மகனின் பெயரும்
மூன்றெழுத்து கொண்ட விஜய் !
விஜய்யின் அருமை புதல்வியின் பெயரோ மூன்றெழுத்து உள்ள கயல் !
திரு விஜய், திருமதி சாந்தியின் அருமை புதல்வன் பெயரும் கவின் !
நான்கில் ( ருத்ரன் ) என்றும் மூன்று (வாரிசா ) அடங்கும்
கயல், கவின் இருவரும் ருத்ரன்,வரிச்சா பேத்தி , பேரனாகும் !
குடும்பத்தில் நாம் காணும் நல்லவை எல்லாம்
மூன்றெழுத்து உடைய வெற்றி என்பதாகும் !
ரா.பார்த்தசாரதி
வெள்ளி, 31 டிசம்பர், 2021
புத்தாண்டே வருக 2022
கதிரவன் குணதிசையில் பன்முகமாய் உதித்தான் ,
புலரும் புத்தாண்டை புதிதாய் உருவமெடுதான் 1
பூமியெங்கும் அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும்
யாவருக்கும் பொதுதானே புத்தாண்டே !
நதியால் இணைந்த மாநில மக்கள்
அவலம் அழிந்து போகாதோ புத்தாண்டே !
எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !
தீவிரவாதமும், லஞ்சமும், கருப்பு பணமும் ஒழியாதோ
மக்கள் மனதில் நிம்மதி ஏற்படாதோ !
மக்களை அச்சுறுத்தும் நோய்கள் முடிவுக்கு வராதா
அதனை தடுத்து நிறுத்த ஆவண செய்யாதா !
சுயநலங்கள், சூழ்ச்சிகள் சுவடு தெரியாமல்
அவனியில் அழிந்து போகாதோ புத்தாண்டே !
நாட்டுக்கு நாடு, சமாதனம் மட்டும் ,
தானமாய் கிடைக்காதோ புத்தாண்டே !
ஆட்சியும் அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை தீர்காதோ புத்தாண்டே !
சுயநலமற்ற ஆட்சியாளர்களும்,அரசியல்வாதிகளும் தோன்றமாட்டார்களா !
நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தமாட்டார்களா!
பூமியெங்கும் அமைதி மட்டும்
சுயநலங்கள், சூழ்ச்சிகள் சுவடு தெரியாமல்
அவனியில் அழிந்து போகாதோ புத்தாண்டே !
நாட்டுக்கு நாடு, சமாதனம் மட்டும் ,
தானமாய் கிடைக்காதோ புத்தாண்டே !
ஆட்சியும் அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை தீர்காதோ புத்தாண்டே !
சுயநலமற்ற ஆட்சியாளர்களும்,அரசியல்வாதிகளும் தோன்றமாட்டார்களா !
நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தமாட்டார்களா!
பூமியெங்கும் அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ புத்தாண்டே
சனி, 18 டிசம்பர், 2021
ananya manjal neerattu vizha
அனன்யா மஞ்சள் நீராட்டு விழா
நட்டு வாய்த்த ரோஜா
மொட்டு விட்டு சிரிக்குதம்மா
மஞ்சள் நீரில் குளித்துவிட்டு ஒரு
தங்கச்சிலை நனையுதம்மா !
பட்டுச்சேலை கட்டி ஒரு
பட்டாம்பூச்சி பறக்குதம்மா !
வானத்து நிலவு இன்று
வையகம் வந்தது போலே
குயிலின் குரலாய் உன் குரல்
என்றும் ஒலிக்குதம்மா 1
பாவையருள் ஒரு பூவையாக
பூமியில் பிறப்பெடுத்தாய்
. சிரித்தாள் முத்து உதிரும்
எங்கள் செல்வா மகளே !
பொன்னாலே நிறமெடுத்தாய்
பூவாலே முகம் வடித்தாய்
தந்தையின் சாயல் உள்ள
அதிஷ்டம் மிக்க புதல்வியே
நீ, பல்லாயிரம் ஆண்டுகள்
பதினாறும் பெற்று பெரு வாழ
எங்கள் அன்பு ஆசீர்வாதங்கள் !
ரா.பார்த்தசாரதி
யேசுநாதர் ஒரு தேவமைந்தன்
உங்கள் பாவங்களை எல்லாம்
நானே சுமக்கிறேன் என்றான்
மனிதகுலத்தின் மாபெரும்
பெருந்தகையாளன் தேவமைந்தன்
நானே சுமக்கிறேன் என்றான்
மனிதகுலத்தின் மாபெரும்
பெருந்தகையாளன் தேவமைந்தன்
முள்ளில் ஓர் கிரிடம்
முதுகிலோர் சிலுவை அறைந்து
உண்மையை மெளனிக்க வைக்க
உன்மத்தர் செய்த சித்திரவதைகள்
முதுகிலோர் சிலுவை அறைந்து
உண்மையை மெளனிக்க வைக்க
உன்மத்தர் செய்த சித்திரவதைகள்
அறியாமல் செய்கின்றார் மூடர்
ஆண்டவரே அவரை மன்னித்து விடும்
அன்பின் புதல்வன் அன்போடு வேண்டினான்
அண்டசராசரத்தின் ஆண்டவனிடத்தே
ஆண்டவரே அவரை மன்னித்து விடும்
அன்பின் புதல்வன் அன்போடு வேண்டினான்
அண்டசராசரத்தின் ஆண்டவனிடத்தே
தம்மைத் தாமே அறிந்திட வேண்டித்
தன்னைத் தானே மெழுகாய் உருக்கிய
தனியொரு தேவ மைந்தன்
தவப்புதல்வனாய் மண்ணில் உதித்திட்டான்
தன்னைத் தானே மெழுகாய் உருக்கிய
தனியொரு தேவ மைந்தன்
தவப்புதல்வனாய் மண்ணில் உதித்திட்டான்
நல்லதோ மக்களாய் நாளும் வாழ்ந்து
நன்மைபல புரிந்திட்டே வையகத்தில்
வேதநாயகன் இயேசு உரைத்திட்ட
அருள்மொழிகளை உள்ளத்தே நிறுத்திட்டு
நன்மைபல புரிந்திட்டே வையகத்தில்
வேதநாயகன் இயேசு உரைத்திட்ட
அருள்மொழிகளை உள்ளத்தே நிறுத்திட்டு
நத்தார் புனிததினமதில் அனைவரும்
நலமாய் வாழ்ந்திட அன்பு வாழ்த்துக்கள்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
புனித நத்தார் வாழ்த்துக்கள் ஆயிரம்!
ரா.பார்த்தசாரதி
நலமாய் வாழ்ந்திட அன்பு வாழ்த்துக்கள்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
புனித நத்தார் வாழ்த்துக்கள் ஆயிரம்!
ரா.பார்த்தசாரதி
புதன், 15 டிசம்பர், 2021
என் தங்கை ஜெயஸ்ரீ
மலர்களைப்போல் தங்கை சிரிப்புடன் ஊஞ்சலாடுகிறாள்
இரு அன்னான் இடையே அமர்ந்து பெருமை கொள்கிறாள்
கலைந்திடும்\ கனவுகள் அவள் காண்பாள்
கற்பனைத் தேரில் அவள் மிதந்திடுவாள்
அன்பு மகன் ஜெயந்திற்கு திருமணம் நிச்சியம் செய்தாள்
குடும்ப விளக்காய் காயத்ரி வந்தாள் !
மகனும், மருமகளும், மணிவிழாவை இன்று இனிதே
தலைமை ஏற்று நடத்தினரே !
உற்றாரும், உறவினரும் நன்மனத்துடன் வாழ்த்தினரே !
ரா.பார்த்தசாரதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)