பொங்கல் பண்டிகை
தையிலே உத்திராயணம் உதித்து வரும் காலம்
உதய சூரியனை வழிபடும் சங்கராந்தி காலம்
உழவர்கள் விளைச்சலை கொண்டாடும் காலம்.
தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக் காலம் !
உழவர்கள் உவகையுடன் கொண்டாடும் பண்டிகை
விவசாயமும், உழவர்களும் பாதிப்பு அடைந்தது வெள்ளத்தாலே,
திறமும், உறுதியும், கொண்டு வெற்றி காண்போம் உழைப்பாலே,
இயற்கை உரமும், புதுமை புகுத்தி வெற்றி காண்போம் விவசாயத்திலே!
உழவன் சேற்றினிலே இறங்கினால்தான் நமக்கு சோறு
நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு
விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு என நினைத்திடுவோமே,
விவசாயி நலனில் அக்கறை கொண்டு உதவி செய்துடுவோமே!
கரும்பின் கணுவில் கரும்பு துளிர்த்து வளர்ந்திடுமே !
உழவன் உழைப்பாலே விவசாயம் வளர்ச்சி அடைந்திடுமே !
விவசாயிக்கு முக்கிய பண்டிகை பொங்கல் திருவிழா !
சூரிய பகவனை நினைந்து கொண்டாடும் திருவிழா !
பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப்பண்டிகை,
பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கணுப் பொங்கல்,
கால்நடைகளுக்காக கொண்டாடும் மாட்டுப் பொங்கல்,
உறவும், நட்பும், பரிமாற்றம் கொள்ள காணும் பொங்கல்!
உழவர்களின் உரிகைக்காக கைகோர்த்து நிற்போமே!
வெள்ளத்தால் ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுசெய்ய வேண்டுவோமே !
கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே !,
குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே !
ரா.பார்த்தசாரதி
கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே !,
குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக