வியாழன், 14 ஜூன், 2018

டி .ஜே ஸ்ரீதரன் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா





                                              

டி .ஜே  ஸ்ரீதரன் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா 
Awarded by Indian Virtual Academy for peace and Education

கவிபரணி ஏறி, கலிங்கத்து பரணி கூறுகிறேன்
கேளுங்கள், கேளுங்கள் 

மூன்றெழுத்திற்கு  ஓர் சிறப்புண்டு 
முத்தமிழ் எனும் பெயருண்டு 

தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
                       தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
               குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
                                     வாசமுள்ள  மலர்களின் சிரிப்பே மணம்
                             கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பே மழலை 
                     மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
                  மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
   நல்வழிக்கும் , அமைதிக்கும், மக்கள் சேவையில் ஈடுபடும்  
                                                நம் தலைவர்  காண்பதோ  வெற்றி
    ஆம் நம் விஷ்ணுசஹஸ்ரநாம  மண்டலியின்  தளபதி 
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற  மூன்றெழுத்து   ஸ்ரீதர்
ஆம், ஸ்ரீதர் என்ற பெயரும் மூன்றெழுத்து 
================================ரா.பார்த்தசாரதி 
ஜே .பி .என் விஷ்ணுசஹஸ்ரநாம மண்டலி  


ஞாயிறு, 10 ஜூன், 2018

ஸ்ரீ கிருஷ்ணர் vananguvathu




ஸ்ரீ கிருஷ்ணர் யார் யாரை வணங்குகிறார் ?


                     1.            நித்ய அன்னதானம் செய்பவன்

                    2.             இளம் வயதில் திருமணம் எல்லா கர்மாக்களையும்
                                    ச்ரத்தையுடன் தவறாமல் அனுஷ்டிப்பவன்

                    3.            வேதம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவர்கள்

                    4.             கற்புடைய உத்தம ஸ்தி

                   5.              காயத்ரி, சந்தியாவந்தனம் மற்ற தேவ பூஜாக்களை
                                    ச்ரத்தையுடன் அனுதினம் அனுஷ்டித்து அதன் பின்
                                   அதிதிகளுக்கு அன்னம்மிடுபவன்.

                  6.             ஆயிரம் பௌர்ணமி கண்ட, இல்லற தம்பதிகளையும்
                                  நான் வணங்குகிறேன்.
                                  ------------------------------------------------------------------------------------

வியாழன், 7 ஜூன், 2018

தலையாட்டும் நாட்டிய பொம்மை



                            தலையாட்டும் நாட்டிய பொம்மை


      நாடகமே உலகம், ஆடுவதோ ஓர் பொம்மலாட்டம்
       உடம்பின் பல பாகங்கள் அசைந்தாடும் தோற்றம்
       அழகாக தலையசைத்து ஆடும், மனதில் மகிழ்வூட்டும்
       தொட்டுவிட்டால் தானே ஆடி அபிநயம் காட்டிடும் !

        இன்றைய அரசியல் வாதிகளோ தலையாட்டும் பொம்மைகள்
         தன்னாட்சி கவிழாமல் இருக்க, மேலிடத்து அடிமை பொம்மைகள்
         கொடுமைகள் புரிந்துவிட்டு பூசி,மழுப்பி நிற்கும் ஊமைகள்
         ஜனங்களை ஆட்டுமந்தையென நினைத்து செய்யும் கொடுமைகள்

         தன் பதவி நிலைக்க தன்மானத்தை அடகு வைக்கும் கூட்டம்
          மக்கள் நலனை துன்பத்தையும் கண்டும் காணாத ஆட்சிக் கூட்டம் !
          பணத்தை சுரண்டி அதனை மறைக்க, எடுபிடி செய்யும் கூட்டம்
          மக்கள் குறைகளை தீர்ப்பதுபோல், பொய்ப்பிரச்சாரக் கூட்டம் !

           பணத்திற்காக வோட்டு போட்டு மண்டியிடும் ஒரு கூட்டம்
            அக்ஷிய பாத்திரத்தை கொடுத்து பிச்சை எடுக்கும் கூட்டம்
           

         
         




செவ்வாய், 5 ஜூன், 2018

உலக சூற்று சூழல் தினம்




                    உலக  சூற்று  சூழல்  தினம் 


                 நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக  வை           
                 தேவை இல்லாத பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்து  வை
                 காய்கறி கழிவு களையும் பிரித்து தனியாக வை.
                 வருடம் ஒரு முறை மனித கழிவை வெளியேற்ற வை

                இன்று தண்ணீரும்,  காற்றும் மாசு படுகின்றதே
                இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கின்றதே
                கழிவு நீர் கலப்பதால் கடல்வாழ்  இனங்கள் இறக்கின்றதே
                காற்று மாசு பாட்டால் நாட்டின் தலைககரமே  தவிக்கின்றதே  !

                சுற்றுப்புறம் தூய்மையாய்  இருப்பதற்கு உதவுங்கள்
                தனிமனிதா,  தூய்மையை அன்றாடம் கடை பிடியுங்கள்
                வீட்டின் சுத்தமே , நாட்டின் சுத்தம் என  எண்ணுங்கள்
                குழந்தைகள், முதியோர்கள் நலனை கருத்தில்கொள்ளுங்கள் !

                அழகாக வீடு கட்டினால்  மட்டும் போதாது
                அழகாக தோட்டம் அமைத்தால் மட்டும் போதாது
                வீட்டைச் சுற்றி  குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
                மக்களுக்கு  மாசு கட்டுப்பாடின் மாண்பினை எடுத்துரையுங்கள் !

               வானத்தைப்போல் பரந்த மனமும் உயர்ந்த லட்சியம்   கொள்
               கடல் அலைபோல் சுறுசுறுப்பினை கற்றுக்கொள் ,
               கண்ணுக்கு தெரியாத உயிரூட்டும் காற்றுபோல் உதவ கற்றுக்கொள்,
               உலகின்  சுற்றுசுழலையும்     பாதுகாக்க   எண்ணம்கொள் !


                ரா.பார்த்தசாரதி
           


திங்கள், 4 ஜூன், 2018

Abijith Neram




அபிஜித் நேரம் என்றால் என்ன ?


தாரபலம் என்றால் என்ன என்பதை அறிந்திருப்பீர்கள்.
இந்த தாரபலத்தைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி என அமைத்துக்கொள்ள எல்லாம் நன்மையாகும். எல்லாம் நன்மைக்கே!
நான் 28 வதாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா! அதன் பெயர் என்ன? அது எந்த ராசியில் இருக்கிறது? என பார்ப்போம்.
அந்த நட்சத்திரத்தின் பெயர் “அபிஜித்” நட்சத்திரம்.
இது மகர ராசியில் அமைந்திருக்கிறது.
இல்லையே ... மகரத்தில் உத்திராடம் 2,3,4, பாதங்கள்,திருவோணம் 1,2,3,4 ஆகிய பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள் மட்டுமே இருக்கிறது என்கிறீர்கள்தானே...
இந்த அபிஜித் நட்சத்திரம் சூட்சும நட்சத்திரம் ஆகும்.
இது மகர ராசியில் உத்திராடம் 4 ஆம் பாதம், திருவோணம் 1 ம் பாதத்தில் உள்ளது,
எனவே உங்களில் யார் உத்திராடம் 4, திருவோணம் 1 என்ற நட்சத்திரப் பாதங்களில் பிறந்திருக்கிறீர்களோ அவர்கள் அபிஜித் நட்சத்திரகாரர்கள் ஆவார்கள்.
சரி என்ன செய்யும் இந்த அபிஜித்?
வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை சந்திக்காதவர்கள் என எவருமே இல்லை. இதில் துயரங்களைக் கண்டு துவண்டு விடுபவர்கள் பலர் உள்ளனர்.
துன்பமோ , துயரமோ எது வந்தாலும் அதன் பாதிப்பை சிறிதும் உணராதவர்கள், இந்த அபிஜித் நட்சத்திரக்காரர்கள்.
ஆக, துன்பத்தை மனம் உணராவிட்டாலே நோய் முதற்கொண்டு எந்த பாதிப்பும் நம்மை அணுகாது.
இந்த உத்திராடம், திருவோணத்தில் பிறந்த தெய்வங்களைப் பாருங்களேன்.
உத்திராடத்தில் கணபதி...
இவரை மஞ்சளிலும் பிடித்து வணங்கலாம், மண்ணிலும் பிடித்து வணங்கலாம், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்.
திருவோணத்தில் பிறந்தவர் மகாவிஷ்ணு. இவரையும் நீங்கள் அறிவீர்கள்.
சதா சயனத்தில் இருப்பவர், எதைப்பற்றியும் கவலைப்படாத தோற்றம், ஆனால் உள்ளுக்குள் அனைத்தையும் அசைபோட்டுக் கொண்டிருப்பவர்.
ஆக... இந்த அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதைபற்றியும் கவலைபடத்தேவையில்லை,
இவர்களுக்கு அனைத்தும் தேடாமலே கிடைக்கும்.
எனவே எல்லாம் இறைவன் செயல் என்று இருந்தாலே சகல காரியங்களும் நன்மையாகவே நடந்தேறும்.
இந்த அபிஜித்தை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.
ஏதோ ஒரு சூழ்நிலை, திடீர்த் திருமணம், வீடு குடிபோகுதல், பதவி ஏற்பு போன்ற சுப காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.
அந்த நாள், தோஷமுள்ள நாளாக இருந்தாலும் இந்த அபிஜித் நட்சத்திரநாள் அந்த தோஷங்களைக் களைந்துவிடும்.
ஆனால் இது மாதத்திற்கு ஒருமுறைதானே வரும். அதுவரை காத்திருக்க வேண்டுமா?
இல்லை... ஒவ்வொரு நாளும் அபிஜித் நேரம் என்ற ஒரு சுப நேரம் உண்டு.
அது எந்த நேரம் என்றால் .. மதியம் 12 மணி முதல்12-30 மணிவரை உள்ள நேரமே அபிஜித் நேரம் ஆகும்.
இந்த அபிஜித் நேரத்திற்கு எந்த தோஷமும் இல்லை. எந்த தோசமும் இந்த நேரத்தை கட்டுப்படுத்தாது,
ராகுகாலம், எமகண்டம்,கரிநாள், பிரதமை, அஷ்டமி, நவமி, செவ்வாய்க்கிழமை,சனிக்கிழமை என எதுவும் இந்த அபிஜித்தை கட்டுப்படுத்தாது.
எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த அபிஜித் நேரத்தையும், அபிஜித் நட்சத்திர நாளையும் பயன்படுத்தி வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள். எடுத்த செயல்கள் யாவும் வெற்றிபெறும் என்பது உறுதி!
ஜோதிடரைத் தொடர்பு கொள்ள: 98841 60779
அடுத்த அத்தியாயம் வரும் 7.5.18 திங்கட்கிழமை அன்று வெளிவரும்.
- தெளிவோம்

புதன், 30 மே, 2018

பெண் பிள்ளை



                                                        

                                                      பெண் பிள்ளை 

     பெண் மனம் மகிழ பெண்ணைப் பெற்றாள் 
    ஆண்  மனம் மகிழ்   ஆனைப்  பெற்றாள் 
     ஏனோ உலகில் பாசத்தை பிள்ளைகளிடம் வைத்தான் 
     பெண்ணும், ஆணும் சமம்  என உலகில் உணரவைத்தான் !

    மகளின் பாசம் என்றும் தந்தையிடத்திலே 
    மகனின்  பாசம் என்றும்  தாயினிடத்திலே 
     இதுவே  இன்றைய பாசவலையாய் தொடர்கிறது 
     தாய்தந்தையின்  நேசக்கரங்கள்  உதவுகிறது ! 

     மகளே, உன் பிஞ்சு கால்களால் என்னை உதைக்கின்றாய்  
     என் நெஞ்சத்தையும், இதயத்தையும் நெகிழச்செய்கின்றாய் 
    உன் பிஞ்சு கால்கள் என்  மார்பில் நடனமாடுதே 
     என் உள்ளம் மகிழ்ந்து  திளைக்குதே !

    களைப்புடன் நான் வரும்போது உன் கண் என்னைத் தேடுதே  
    உன்னை தூக்கச் சொல்லி என் கைகளை அழைக்கின்றதே  
    உன் கைகள் சாமரம் வீசி, என் களைப்பினை  நீக்குதே 
   உன் கருவிழிக் கண்கள்  என்னை  அடிமையாக்குதே  !

   உன்னை உயரே தூக்கும்போது சிரித்து என்மேல் உமிழ்கின்றாய் 
   அதனை உமிழ்நீரை அமிர்தமாய் என்மேல்  தெளிக்கின்றாய் 
   உன் தண்டைக் கால்களை என் முகத்தின் மேல் பதிக்கின்றாய் 
   என் வஞ்சிக்க கொடியே, உன் பிஞ்சு காலால் மகிழ்வூட்டுகின்றாய் !

   பெண் மகள்  என்றும் செல்ல மகள்  ஆவாள் 
   திருவிழா காலங்களில் மஹாலக்ஷ்மியாய் உலா வருவாள் 
   தந்தைக்கு  என்றும்  தாதியாய்  இருந்திடுவாள் 
   தரணியிலே  மகளே  என்றும்  போற்றப்படுவாள் !

   

   ரா.பார்த்தசாரதி