திங்கள், 21 நவம்பர், 2016



                                                       வழி தவறிய பயணங்கள்

        வாழ்க்கை  என்பதை ஒரு பயணத்தின் தொடர்கதை
         பிறப்பு முதல் இறப்பு வரை தொடராத ஓர் விடுகதை
         ஒருவனின் கெட்ட எண்ணங்களே வழி தவறி நடக்கச்செய்யும்
          அவனது வாழ்வின் செயல்களும் வழி தவறிய பயணங்களாகும்!

           படித்தவர்களும், படிக்காதவர்களும் வாழ்க்கையில் வழி தவறலாம்
           தவற்றை உணர்பவன் படித்தவன், விதி என்பான் படிக்காதவன்
           விதியை  மதியால் வெல்பவனே அறிவாளி,மற்றவர்கள் ஏமாளி !
           குறிக்கோள் இல்லாத படிப்பும்,வாழ்க்கையும், பாலைவனமாகும்!

           

          

வியாழன், 10 நவம்பர், 2016




                                                                 குழந்தைகள் தினம்


       கள்ளமில்லாச் சிரிப்பும், தளிர் நடையுமே குழந்தையின் உருவமே
       சிரிப்பினை கண்டு சிரித்து வெகுளிதனத்தை வெளிப்படுத்தும் முகமே
       எந்த வித எதிர்பார்ப்பின்றி , நம்மை கண்டு ஓடி வரும் குழந்தைகளே
       அன்பிற்கும், தாய் பாசத்திற்குமே கட்டுப்படும் பாசமுள்ள குழந்தைகளே!

         குழந்தையின் மழலைச் சொல் யாழையும் குழளையும் விடச் சிறந்தது
         மழலைச் சொல் கேளாதவர் பெருன்செல்வம் பெற்றிடினும்
          
 

வெள்ளி, 28 அக்டோபர், 2016

Deepavali 2

மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,
எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை
வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,
சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,
மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,
பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று
ஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி 
வடக்கே விளக்கு பூஜை என் கொண்டாடும் தீபாவளி,
இல்லறத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி,
புன்சிரிப்புடன், மன நிறைவாய்  , வாழ்த்து பெரும் தீபாவளி !

வெடியும், சரமும், மத்தாப்பும் கையில் ஏந்துவோமே 
வெடியின் சப்தமும், சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பினை காண்போமே,
மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே,
சங்கு சக்கரம், புஸ்வாணப்  பூக்களின் சிதறலை கண்டு களிப்போமே !

அசுரன்  நினைவாக  நாம்   தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றோம் 
மனித உருவில் உள்ள அசுரர்களை  அழிக்க நாம் திட்டமிடுவோம்,
பார்வையற்றவர்கள் விடுதிக்கும், முதியோர் இல்லத்திற்கும்   செல்வோமே 
அவர்களுடன் இனிப்பினை பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!


ரா.பார்த்தசாரதி

Deepavali




விடியலிலே துயிலெழுந்து சடுதியில் நீராடிக்
கடையினிலே வாங்கிவந்த புத்தாடை உடுத்துப்
படையலிட்ட பண்ணியத்தைப் பக்குவமாய்த் தின்னக்
கிடைத்திடுமே இன்பமது இனிதாக நமக்கு!  
படபடவென் றேவெடிக்கும் பட்டாசைக் கண்டால்
கிடுகிடுவென் றேமகிழ்ச்சி மனவானில் ஏறும்!
விடுவிடுவென் றேயதனை வாசலிலே வைத்து
வெடித்திடவே உள்ளமதில் உற்சாகம் ஊறும்!
நரகனவன் மரணித்த நன்னாள் இந்நாளில்
சரவெடிகள் வெடித்திடுதல் மட்டும் போதாது!
மதவாதம் இனவாதம் பிடிவாதம் தவிர்த்தே
இதமான மொழிபேசி இணக்கமொடு வாழ்வோம்!
நாம்பெற்ற நன்மைதனை நானிலமும் காணக்
கூம்பாத உளம்கொண்டு ஈகைசெயல் வேண்டும்!
தாம்வாழ வழியற்று மனம்வாடு வோரைத்
தேம்பாது காத்திடுதல் செல்வத்துப் பயனே!
அண்டைஅயல் வீட்டிலுள்ளோர் நல்லுறவைப் பேணப்
பண்டிகைகள் நல்லதொரு வாய்ப்பெனவே கொள்வோம்!
தொண்டுள்ளம் கொண்டஉயர் மாந்தருமே அன்பாய்
உண்டிகொடுத் தேழைகள்தம் பசிப்பிணியைக் கொல்வோம்!

ஞாயிறு, 23 அக்டோபர், 2016



                                                                  ஜன்னல் நிலா

             பௌணர்மி    நிலவே     வானில்   தவழ்ந்து வருகின்றாய்
              எங்கள் காதலுக்கு முகவரி தந்து காட்சியளிக்கின்றாய்
              நான் உன்னைப்  பார்க்கும்போது அவள் என்னை பார்க்கின்றாள்


புதன், 19 அக்டோபர், 2016

மனம் எனும் பேய்



                                                          மனம் எனும் பேய்

        மனம் ஒரு கண்ணாடி ,
                 நமது எண்ணங்களை பிரதிபலிக்கும்,

       மனம்  ஒரு குரங்கு
                  அது எண்ணங்களை தாவ வைக்கும்

       மனம் ஒரு  நீர்க்குமிழி
                   அது  எண்ணங்களை உருவாக்கி அழிக்கும்

      மனம்  ஒரு கடல் அலை
                   அது  மாறி, மாறி  எண்ணங்களை மோத விடும்

      மனம் ஒரு அணையா நெருப்பு
                    அதில் பொறாமை என்பது கொழுந்துவிட்டு எரியும்

      மனம் ஒரு குப்பைத்தொட்டி
                    அதில் தேவையில்லாத கெட்ட எண்ணங்களை சேர்த்துவைக்கும்

      மனம் ஒரு  கடிவாளம் இல்லா குதிரை
                    அது தன்  விருப்பப்படியே  பறந்தோடும்

      மனம்  ஒரு கனவு உலகம்
                       கனவு உலகத்தில் அடிக்கடி சஞ்சரிக்கும்

      மனம்   ஒரு அழகின்  அடிமை
                    அழகான காட்சிகளுக்கு சரணடையும்

      மனம்  எனும் பேய்
                     மனிதனை  சுயநலமாய், தீயவற்றிற்கு அடிமையாக்கும்


     ரா.பார்த்தசாரதி

        

செவ்வாய், 18 அக்டோபர், 2016

நிலையாமை

நிலையாமை


நிலையாமை!

சொந்த, பந்தங்கள் யாவும் ,நன்மைக்காக  ஏற்பட்ட உறவுகள் 
 அந்தந்த நேரத்தில் முகம் காட்டும் அடையாளங்கள்
உடன் வருவோரெல்லாம் ஊர் வரைக்கும் வருவதில்லை!
துன்படும்போது, உறவும், நட்பும்  கண்டுகொள்வதில்ல
.நேற்று இருந்தவன்  இன்று இல்லை 
என்ற பெருமைதான் மனித வாழ்க்கை 
நிலையாய் வாழ்ந்து அனுபவிக்க பேராசை படுபவன் 
வள்ளுவனின் நிலையாமை நினைக்க தவறலாமா ?

பத்து  தலைமுறைக்கு  கட்டிக்காத்த செல்வங்கள் யாவும் 
சல்லடையில் தேங்கிய நீர்போல  ஆகவும் 
போகும்போது கொண்டு செல்ல முடியுமா 
யார்  அனுபவிக்கிறார்கள்  என பார்க்கமுடியுமா ?

வளர்பிறை காலமும், தேய்பிறை காலமும் உண்டு,
உயர்வு,தாழ்வு  பகலிரவு போல் இருப்பதுண்டு 
.தாமரை இலை தண்ணீர் போல் நிலையில்லாமல்  ஆனதே
தண்ணீர் மட்டத்துக்கு மேல் வந்து மறையும் நீர்குமிழி போல் ஆனதே

 பழமையும், சிறப்பும் வாய்ந்த அரண்மனைகள், கோட்டைகள் 
இவை எல்லாம்  காலம் தின்று  அழித்த  இடங்கள் 
மிஞ்சியவைகள்  இன்று சுற்றுலா  தலங்களே 
நமது சிறப்பைக்  காக்கும் அடையாள ஏடுகளே !

இறைவா புகழ்  பெற்று வாழ்பவர்கள்  உண்டு 
செருக்கடைந்தவர்கள்  சேற்றில் புதைந்தவர்களுண்டு 
மாற்றங்கள் நிகழ்வதில்லை  என்றும் மாற்றமேயில்லை 
நிலையானது எதுவெனில், நிலையாமையை என்றறிக 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
.
.
இரவாபுகழ் பெற்று இன்னமும் வாழ்பவர்கள் 
புகழ் போதைச் சேற்றில் புதையுண்டார்கள்

.தாமரை இலை தண்ணீர் போல் நிலையில்லாமலும் 
தண்ணீர் மட்டத்துக்கு மேல் வந்து மறையும் நீர்குமிழியானாலும் 
பத்து  தலைமுறைக்கு  கட்டிக்காத்த செல்வங்கள் யாவும் 
சல்லடையில் தேங்கிய நீர்போல  ஆகவும் 
 
தரை தட்டும் கப்பல்கள்
கரைசேரும் கட்டுமரங்கள்
யானைக்கும் அடி சறுக்கும்
எறும்பு ஊர கல்லும் தேயும்!.

எட்டுத் தலைமுறைக்கு
கட்டிக் காத்த செல்வங்கள்
சல்லடையில் தேக்கிய நீர் போல்
சடுதியில் மறைகிற வேகம்!

மாற்றங்கள் நிகழ்வதில்
மாற்றமேதுமில்லை
நிலையானது எதுவெனில்
நிலையாமையே என்றறிக!
 
.கங்காதரன், புதுச்சேரி.