நிலையாமை
நிலையாமை!
சொந்த, பந்தங்கள் யாவும் ,நன்மைக்காக ஏற்பட்ட உறவுகள்
அந்தந்த நேரத்தில் முகம் காட்டும் அடையாளங்கள்
உடன் வருவோரெல்லாம் ஊர் வரைக்கும் வருவதில்லை!
துன்படும்போது, உறவும், நட்பும் கண்டுகொள்வதில்ல
.நேற்று இருந்தவன் இன்று இல்லை
என்ற பெருமைதான் மனித வாழ்க்கை
நிலையாய் வாழ்ந்து அனுபவிக்க பேராசை படுபவன்
வள்ளுவனின் நிலையாமை நினைக்க தவறலாமா ?
பத்து தலைமுறைக்கு கட்டிக்காத்த செல்வங்கள் யாவும்
சல்லடையில் தேங்கிய நீர்போல ஆகவும்
போகும்போது கொண்டு செல்ல முடியுமா
யார் அனுபவிக்கிறார்கள் என பார்க்கமுடியுமா ?
வளர்பிறை காலமும், தேய்பிறை காலமும் உண்டு,
உயர்வு,தாழ்வு பகலிரவு போல் இருப்பதுண்டு
.தாமரை இலை தண்ணீர் போல் நிலையில்லாமல் ஆனதே
தண்ணீர் மட்டத்துக்கு மேல் வந்து மறையும் நீர்குமிழி போல் ஆனதே
பழமையும், சிறப்பும் வாய்ந்த அரண்மனைகள், கோட்டைகள்
இவை எல்லாம் காலம் தின்று அழித்த இடங்கள்
மிஞ்சியவைகள் இன்று சுற்றுலா தலங்களே
நமது சிறப்பைக் காக்கும் அடையாள ஏடுகளே !
இறைவா புகழ் பெற்று வாழ்பவர்கள் உண்டு
செருக்கடைந்தவர்கள் சேற்றில் புதைந்தவர்களுண்டு
மாற்றங்கள் நிகழ்வதில்லை என்றும் மாற்றமேயில்லை
நிலையானது எதுவெனில், நிலையாமையை என்றறிக
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
.
.இரவாபுகழ் பெற்று இன்னமும் வாழ்பவர்கள்
புகழ் போதைச் சேற்றில் புதையுண்டார்கள்
.தாமரை இலை தண்ணீர் போல் நிலையில்லாமலும்
தண்ணீர் மட்டத்துக்கு மேல் வந்து மறையும் நீர்குமிழியானாலும்
பத்து தலைமுறைக்கு கட்டிக்காத்த செல்வங்கள் யாவும்
சல்லடையில் தேங்கிய நீர்போல ஆகவும்
தரை தட்டும் கப்பல்கள்
கரைசேரும் கட்டுமரங்கள்
யானைக்கும் அடி சறுக்கும்
எறும்பு ஊர கல்லும் தேயும்!.
எட்டுத் தலைமுறைக்கு
கட்டிக் காத்த செல்வங்கள்
சல்லடையில் தேக்கிய நீர் போல்
சடுதியில் மறைகிற வேகம்!
மாற்றங்கள் நிகழ்வதில்
மாற்றமேதுமில்லை
நிலையானது எதுவெனில்
நிலையாமையே என்றறிக!
— அ.கங்காதரன், புதுச்சேரி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக