செவ்வாய், 17 ஜூன், 2014

அன்புள்ள கணவா !


                                                  அன்புள்ள  கணவா !

                          அன்புள்ள  கணவா!  ,உன் நெஞ்சில் நான்  நிறைந்திருந்தாலும்
                         என் பெண்ணுள்ளம்  எதிரொலியாய்  இருந்தாலும்
                          நான் என்றும், நீ என்றும் இருவராக  இருந்தாலும் ,
                         நான்  வேறு,  நீ வேறு யார் சொன்னாலும் 

                         உந்தன் மனதினிலே நான்  என்றும்  இருந்தாலும் ,
                         சுகமும், துன்பமும், சரிபாதியாய்  இருந்தாலும் ,
                         பூவாகி, காயாகி , கனியாய்  இருந்தாலும் ,
                         நீயாகி,  நானாகி, நாமாய்     இருந்தாலும்,

                         சுகம், சுகம் அது துன்பமான இன்பமாய் இருந்தாலும்,
                         மனம்,  பேதை மனம், மாறாத  சொந்தம் இருந்தாலும், 
                         இனமாகிய, பெண்,  உனக்கே உரிமையாய் இருந்தாலும்,
                         அது  பூப்போல  மென்மையாய் பூத்திருந்தாலும் ,

                        உந்தன்  நிழலாக  நான் மாறும் நாள்  வந்தாலும்,
                       தேன்   உண்ணும் வண்டாய்  நீ இருந்தாலும்,
                        தெம்மாங்கு  பாட நீ நினைத்திருந்தாலும்,
                        தொலைவில் இருந்தும்,  என் நெஞ்சத்தில் மறைந்திருந்தாலும்,

                       கல்யாணம் முடிந்து , காதல்  மறைந்தாலும்,
                       பழமையான காதல் நினைவுகள் மறக்காமல் இருந்தாலும்,
                       நமது  வாழ்கை எனும்  ஓடம்  ஓடிக்கொண்டிருந்தாலும்
                        பொங்கும் நமது உள்ளமே, வாழ்வின் புது வெள்ளமே!

                                         
                        


                          

ராஜகோபாலன்

                                                           
                 திரு. ராஜகோபாலன் - அவர்களின் எழுபதாம் ஆண்டு விழா
                                      (பீமரத சாந்தி திருமண வாழ்த்து  மடல் )

 இறைவன் ராஜகோபாலன் வீற்றிருப்பதோ  மன்னார்குடியில்  
திரு. ராஜகோபாலன்  அவர்களுக்கு பீமரத சாந்தி நடந்ததோ பூனேயில்

அகவை அறுபதும், எழுபதும்  என்றும்  பெருமை  உடையதன்றோ !
இவ்விழாவை நடத்தும் மகனும்,மகளும் பாராட்டுக் குரிவர்களன்றோ !

அவனியில் ஆயிரம் பௌர்ணமி  கண்ட  இல்லறதம்பதிகளே,
திருவாசகம்  பாடி  என்றும் வாழ்த்துவோமே !

திருமணமே  இல்வாழ்க்கையின்  தொடக்கமாகும் 
இதற்குள்ளே  எல்லாமே   அடக்கமாகும் !

கணவன்  என்றாலே  (கண்+ அவன் ), கண்ணைப் போன்றவனாகும்,
அவர் வழியே  உலகை  காண்பவள்  மனைவியாகும் !

ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவனை மறைக்கமுடியுமா ?
ஆயிரம் உறவுகள், இருந்தாலும் மனைவி, கணவனை மறக்கமுடியுமா?

கண்ணின் அருகே இமைஇருந்தும், கண்கள் இமையை பார்ப்பதில்லை 
 மனைவி கண்ணின் இமையென இருந்து, கணவனைப்  பிரிவதில்லை !

காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் !
கணவன்,மனைவி உறவே என்றும் நிலைத்துவாழும் !

உலகில்  பிரிக்கமுடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில்  ஒதுக்கமுடியாதது   நட்பும்,  உறவும் !

அன்பும், அறனும் உடைத்தாயின் , இல்வாழ்க்கை 
பண்பும்   பயனும்  அது.              ( வள்ளுவன் வாக்கு)

ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு, பீமரத சாந்தி செய்துகொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு,  கமலா, பார்த்தசாரதி தம்பதிகளின்
 அனந்த கோடி  நமஸ்காரங்கள் .
   
21-08-2014  ஆங்கில பிறந்தநாள் வாழ்த்தாகவும் ,   பீமரத சாந்தி திருமண 
வாழ்த்தாகவும்  எடுத்துக்கொள்ளவும் .

ரா. பார்த்தசாரதி

     

வியாழன், 12 ஜூன், 2014

praveen thiruman vazthu madal

                பிரவீன் நாட், ஐஸ்வரிய   திருமண வாழ்த்து மடல்

மணமகன்:பிரவீன் நாட்                           இடம்: திருச்சி கலைவாணர் அரங்கம் 
மணமகள்:  ஐஸ்வரியா                             தேதி :07 - 07-2014

1. இன்று திருச்சி கலைவாணர்  அரங்கில் ஓர் கல்யாண  மேடை ,
    இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  மேடை

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. காதலை முடித்து, திருமணம் புரியும் பிரவீன் நாட் எனும் ஆடவனே !    
                                                                                                                                           
   என்றும் நீ  அமெரிக்காவில் வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே
 
4.  காதல் அழகாய் பூத்துதே,  சுகமாய்  தாக்குதே,
     இரு உள்ளங்கள் சொல்லாமல், கொள்ளாமல் பந்தாதுடுதே !

5. காதல் என்பது எது வரை? திருமணத்தில் முடியும் வரை,
    திருமணம் என்பது எது வரை? கழுத்தினில்  தாலி விழும் வரை !   

6. கல்யாணம்  என்றாலே,    என்றும்  வைபோகமே 
  * வாரணமாயிரம்  பாடி  வாழ்த்துவோமே !

7  திருமணம்  என்றாலே  உற்றார், உறவினர்களின் வாழ்த்துக்களே !
    அகிலத்தில்   சிறந்தது  தாய், தந்தையின்   வாழ்த்துக்களே !                                                                                                      
8. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

9. பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.திருமதி  ஒரு வெகுமதி  என்று  அழைப்பது  வழக்கம்
     திருமதியின்  பெயரோ  ஐ ஸ்வரியா என்று அழைப்பது  பழக்கம்! 

11.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
     அவன் வழியே  உலகை காண்பவளே   மனைவியாகும் !
 
12. காலங்கள், கோலங்கள்  என்றும்  மாறும்,
      கணவன், மனைவி  உறவே  என்றும்  நிலைத்து  வாழும் !

13. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

14. வேற்றுமையில்  ஒற்றுமை கண்டு,  விருந்துண்டோம், 
       மணமக்களை வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

15  மத்தளம் கொட்ட , மணமகன்  தாலியினை கட்ட,
     உடன் பிறந்தவள்  சேர்ந்தே  முடிச்சு  போட ,
     உற்றார் , உறவினர்கள்  சூழ்ந்து அக்ஷதை தூவி ஆசிர்வத்திட 
     இனிதே நடந்ததே  பிரவீன் நாட், ஐஸ்வரியா திருமணம்.

16.அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
     பண்பும், பயனும்  அது. -               (வள்ளுவன் வாக்கு)

       ரா.பார்த்தசாரதி .

திங்கள், 9 ஜூன், 2014






                             
அளவுக்கு மிஞ்சினால்...
- வசந்தா சுந்தரராஜன்|மார்ச் 2007||(3 Comments)
Share: 
Click Here Enlargeஉணவு அளவோடு உண்டால் ஆரோக்கியம்
அளவு மீறினால் அஜீரணம்
அளவுக்கு அதிகமானால் விஷம்தான்!

உடை அளவாய் உடுத்தினால் அழகு
அளவு குறைந்தால் அசிங்கம்
அரைகுறையானால் ஆபாசம்!

காற்று அளவாய் வீசினால் தென்றல்
அளவு அதிகமானால் புயல்
அளவை மீறினால் சூறாவளி!

கடல் அலைகள் அளவாய் இருந்தால் மியாமி
அதிகரித்தால் பெளர்ணமி
அளவைமீறி ஆர்ப்பரித்தால் சுனாமி!

நெருப்பு அளவாய் எரிந்தால் தீப ஒளி
அதிகம் எரிந்தால் தீப்பந்தம்
அளவை மீறினால் காட்டுத் தீ!

தானம் கொடுக்க மறுத்தால் கருமி
அதிகம் கொடுப்பவன் தருமி
பிறர் சொத்தைத் தன் பேரில் எடுத்தால் பினாமி!

எதையும் சுருக்கமாய்ச் சொன்னால் ஜோர்
சிரிப்பாகச் சொன்னால் ஒன்ஸ் மோர்
அடிக்கடி சொன்னால் போர்!

மனிதனே ! உறவையும், நடப்பையும் உதறிவிடாதே





                          மனிதனே !   உறவையும், நட்பையும்  உதறிவிடாதே                     


         பழகும்  விதத்தில்  பழகினால்  பகையும்  நட்பாகும்                           
        மண்   எனப்  பிரித்தால்,  மனிதம்  என்றும்  சாகும்

         
இனம்  எனப்  பிரித்தால் இனிமை  
இல்லாமல் போகும

          சொந்தம் என  வாழ்ந்தால்  என்றும் சுகமாகும் ! 
        மனிதநேயத்துடன்  வாழ்ந்தால்  என்றும் நலமாகும் !

          பாசத்தையும், நேசத்தையும்  பாலமாக அமைத்திடு
        சாதி மத  பேதத்தை  வேரோடு  அழித்திடு 

          வயதிற்க்கும்,படிப்பிற்க்கும் என்றும் மரியாதை கொடுத்திடு  

          நட்பும், உறவும்  உன்  உடன்பிறப்பு  என நினைத்திடு  
       
        மன்னிக்கத்  தெரிந்த  மனிதனை  நல்லவன் என கருதிடு !

          கோபத்தையும், ஆணவத்தையும் அடக்கி உறவினை காத்திடு !
  
          மனிதனே, உறவையும்,நட்ப்பையும்  உன் உடன் பிறப்பு  என !நினைத்துடு 

       மனிதனே, உறவும், நட்பும்  ஓர்  இருசக்கர   வண்டிதானோ ! 
       நட்பையும், உறவையும் நீ  பணத்தினால் மதிகாததும் ஏனோ !  

      இதை  படித்தபின்பும், உறவையும், நட்பையும் உதறிவிடாதே !  


     ரா.பார்த்தசாரதி 







Manithanay !!      Enrum    Natpaiyum,  Uravaiyum      Utharevedathey  !   
                               
Pazhakum  Vethathil  Pazhkinal    Pakaiyum  Natpakhum !!

Sontham Yena Vazhenthal Enrum Sukamaghum 
Mann Ena Perithaal Manitham Sakuhum !
Yenam Ena Perithaal Enemai Sakuhum !
Manitha Neyathudan Vazhenthal Enrum Nalamaghum !


Pasathaiyum, Nesathaiyum Palamagha Amaithedu !
Saathimatha Pethathai Vayrodu Azhithuvidu !
Vayathirkum, Padippirkum, Enrum Mariyathai Koduthidu !
Natpum, Oravum, Unn Udanpirapu Yena Nenaiithedu !


Mannika Therintha Manithan Nallavan Yena Karuthidu !
Kobhathaiyum, Aanavathaiyum, Adakki, Uravinai Kathidu !
Manithanay, Ooravum, Natpum, Oor Iru Chakkra Vandithano !
Natpaiyum, Uravaiyum, Nee Panathinaal Mathikathathum Yeyno !


ETHAI PADEETHAPINUM , NATPAIYUM, URAVIYM UTHAREEVIDATHAY !
R.Parthasarathy.



ஞாயிறு, 8 ஜூன், 2014

கடல் அன்னை



                                                   கடல்  அன்னை 

                          கடலும் ,  சமுத்திரமும்  ஒன்றே,
                          உலகமும்  கடலால்  சூழ்ந்திருபதும் தெரிந்த ஒன்றே        

                          கடலில்  என்றும் அலைகள் ஓய்வதில்லை 
                          மனித வாழ்க்கையிலும் இன்ப,துன்பங்கள் ஓய்வதில்லை!
                       
                          உலகிற்கே  மழை தந்து  தாகம்  தீர்க்கிறோமே
                          உப்புத் தண்ணீரையும்  குடிநீராய் மாற்றுகிறோமே

                          என்றும் பல உயிரகள் என்னுள் வாழ்கின்றதே
                          தேவை அற்ற கழிவுகளை செலுத்தி உயிர்கள் இறக்கின்றதே! 

                          நதிகள் பிறந்தாலும் எங்களிடம்  சேருகின்றதே 
                          நீ  இறந்தாலும் உன் சாம்பல் என்னுள் கரையுதே 

                          நான் கோபம் அடைந்தால்  சுனாமியாய் சீறுவேன் 
                          கடலோர  மக்களையும்  பழி  வாங்குவேன் !

                          சாக துணிந்தவனுக்கு  நான் முழங்கால்  அளவு 
                          என்னை  பற்றி உனக்கே  தெரியும்   என்  அளவு !

                          மனிதனே !  என்னால்  என்றும்  உலகிற்கு  நன்மையே !
                           மனிதனே! உன்னால்  என்றும்  எனக்கு  தீமையே!

                           என்  அழிவு  பிரளயத்தில்தான்   முடியும்
                           உன்  அழிவு  பொறாமை,பேராசையாலும் அழியும்

                          உப்பு நீரையும்,  குடிநீராய் உனக்கு அளிகின்றேன் 
                          காலம்  தவறாமல் மழை  பெய்விக்கின்றேன் 

                          உன் வளர்ச்சிக்கும், வளமைக்கும் நான் உற்றதுணை 
                          என்னிடம் கருணைகொண்டு  தாயென  அணை !

                          கடலும், கடலைச் சார்ந்த  இடமே  நெய்தல் என கூறுவோம் 
                          கடல் அன்னை பிறந்தநாளாக  வாழ்த்துவோம் ! 

                           ரா.பார்த்தசாரதி