சனி, 7 நவம்பர், 2020

குழந்தைகள் தினம்

 


                          

                  



                                     குழந்தைகள்  தினம் 
                
                 செடியில்  மலரும்  பூவும்  அழகு 
                  குழந்தைகளின் மழலை  அதை விட மிக அழகு 
                  கள்ளம், கபடம்  இல்லாத ஜீவன் ஒன்று 
                  புன்சிரிப்பால் நம்மை மகிழ்விப்பதும் ஒன்று 
                  குழந்தையும், தெய்வமும்  குணத்தால் ஒன்று,
                  குற்றங்களை, மறந்துவிடும் மனத்தால் ஒன்று 
                  குழந்தைகளை தனக்கு பிடிக்குமென நேருசொன்னாரே 
                  தன பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக அறிவித்தாரே!

                  வளர்ந்தால் தினமும் பள்ளிக்கூடம் செல்லவேண்டும் 
                  சுமையில்லா  புத்தகங்கள்   கொண்டு  செல்லவேண்டும் 
                  சுவையான பாடமும், கதைகளும்  வேண்டும் 
                  அடிக்காத  ஆசிரியர்  என்றும்  வேண்டும்     
                  பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் !
                   குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாடவேண்டும் !

                   

                    ரா.பார்த்தசாரதி 
 
                   


      

                    
                            
                                               

  

 

           

சனி, 19 செப்டம்பர், 2020

Poochudal and Semantham - Vijay and Reshmi


 

         பூச்சூட்டல் / சீமந்த  வாழ்த்து மடல் 

கடவுளுக்கும் பூச்சூடல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே 
கருவுற்ற மாதராசிக்கும்   பூச்சூட்டல் உண்டு  பாரினிலே 
பூச்சூட்டல்   என்பதே திங்கள் ஐந்தும், ஏழும் தொடக்கத்தினிலே 
சீர்மிகு சீமந்தமோ திங்கள் ஆறும்,எட்டின் முடிவினிலே ! 

பெண் கருவுற்று மகிழ்வதும்  தாய்மையாலே 
தாயாக  மாறுவதும்  அந்த தாய்மையாலே 
இறைவன் சேய்க்காக  தாயைப்  படைத்தான் 
தாய் சேய் உறவினை பாசத்தினால் பிணைந்தான் !

பூனேயில்  வாழும்  விஜய்யின் அன்பு மனைவி ரேஷ்மியாம் 
அன்பும், பண்பும், பாசமும், நேசமும் கொண்டவளாம் 
பூனேயில்  சிறப்புடன்  என்றும்  வாழ்பவளாம் 
இன்று, பூச்சூடலும்,  சீர்மிகு சீமந்தமும் நடைபெறுகின்றது 

ரேஷ்மிக்கு,  பூச்சூட்டல் ! வாருங்கள் ! வாருங்கள் !
பலவகை வளையல்கள் அணிவித்து மகிழ்விப்போமே,
நறுமணம் கொண்ட சந்தானம்,பன்னீர் தெளிப்போமே 
 பிறர்க்கும் அளித்து, தாய் சேய் வளமுற வாழ்த்துவோமே,
ஆண்டாள் நாச்சியார்  திருவாய்மொழியில் குறிப்பிட்டுளார்!
 
செண்பகம், மல்லிகை,  முல்லை, இருவாட்சியோடு 
பாதிரிப்பு, செங்கழுநீர்ப்பூ,  கருமுகை,குருக்கத்தி 
உகந்தி,சம்பங்கி  என என்பகர் கொணர்ந்து 
இன்று இவை  மாலையாய் ரேஷ்மிக்கு சூட்டவா !
என வில்லிபுத்தூர் கோமகள் சொன்ன பத்தே !

சீர்மிகு சீமந்தத்தில் மந்திரநீர் கொண்டு நீராட்டுவோமே
பெரியோர்கள் ஆசி கூறி தம்பதிகளை வாழ்த்துவோமே!
நண்பர்களும்,, உறவினரும், ஆன்லைனிலும் வாழ்த்துவோமே   
உற்றாரும், உறவினரும் விருந்துண்டு மகிழ்வோமே!

பூமிக்கு முகவரி வந்ததும்  பெண்ணாலே 
பூவிற்கு நறுமணம் வந்ததும்  பெண்ணாலே
பொன்மகள்  ரேஷ்மி பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
ரேஷ்மியும், விஜய்யும், நலம்பெற வாழ்த்துவோம் அன்பாலே !

ரா.பார்த்தசாரதி 







 




   

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

Kannadasan kavithaikal




  கண்ணதாசன்  கவிதைகள் 



''தேசத்தை காத்திடும் வீரர்கள் தினமும் 
தினமும் பொழியும் மேகங்கள் 

பள்ளிப்படிப்பினில்  மேதைகள் 
பக்குவம் வந்ததும் ஞானிகள் 

நல்ல வழிகளைத் தேடுங்கள் 
புதிய    உலகம்   காணுங்கள் 

நாளைக்கு தேசம்  உன்னிடம்
நம்பிக்கை கொள்வது  அவசியம் 

நெஞ்சம் வளர்ந்தால் லாபங்கள் 
வஞ்சம்  வளர்ந்தால்  பாவங்கள் ! 



பாரதியாரின் முயற்சி 


வாக்கினிலே  இனிமை வேண்டும் 
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும் 
கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும், இன்பமும் வேண்டும் 
தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும் 
காரியத்தில் உறுதி வேண்டும் 
பெண்ண விடுதலை வேண்டும் 
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும் 
வானகம் இங்கு தென்பட வேண்டும் 
உண்மை நின்றிட வேண்டும்.


ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

நாணமோ ! காதலோ !


                                         
    
                                                   
                                          நாணமோ ! காதலோ !

                                     
                 நாணம் என்பதே பெண்ணிற்கு அணிகலம்        
                 நாணத்தால் பெண் முகம் என்றும் சிவக்கும் 
                 நாணத்தினால் தரை குனிந்து மௌனம் சாதிக்கும் 
                 இனியவளே !  உன் விருப்பத்தினை கோடிட்டு காட்டுகிறாய் 

   
                 கருமேகங்கள் நிலவினை மறைக்கும் 
                 நாணமெனும் போர்வை முகம் மறைக்கும் 
                 நாணமென்பது பெண்டிர்க்கு மேலாடையோ 
                 இடையை மறைத்து கட்டும் நூலாடையோ       


                 நாணம் என்பது பருவத்தின் கண்ணாடியோ 
                 கடலில் முழுகுவதறஇவ்விரண்டும், கு  ஓர் முன்னோடியோ 
                 இலைமறை காயாய் வெளிப்படுத்தும் தன்மையோ , 
                 ஒன்று கலந்த நெஞ்சத்துடன் உறவாடும் தன்மையோ !


                 நாணத்தால்  உன் முகம் காதல் மொழி பேசுமோ 
                 முகத்தை மறைத்தாலும் என்னை நினைக்க தோனுமோ 
                 நாமத்தினால் முகம் சிவந்து காதல் வெளிப்படுத்துமோ 
                 அமுத நிலையடைந்து , இன்பநிலை எய்துமோ !


                  அச்சமும், நாணமும், காதலின் உடைமையோ 
                   இவ்விரண்டும் நாணயத்தின்   இரு பக்கமோ 
                   காதலில்  கண்கள் உறங்கிடுமோ? உறவை நாடிடுமோ 
                   காதல் உதயமாகி  ஊஞ்சல்  ஆடிடுமோ !


                   ரா.பார்த்தசாரதி 


                             
                         
                          
                         
                     
                             
   

சனி, 12 செப்டம்பர், 2020

Thirumana Vazhthukkal



                                                  திருமண வாழ்த்துக்கள் 


               திருமணம் என்ற பந்தத்தினால் 
               குடும்பம்  என்ற  ஒன்றிலே 
               இணையவிருக்கும் இந்த சிறப்பான 
               திருமண தின  திருநாள் !


               இரு உறவுகள் இதயங்களை 
                அன்பு பாச  நேசங்களால்
               இடம் மாறிக்கொள்ளும்  சிறந்த 
               நிகழ்வே  திருமண தின நாள் !
              ஆனந்தம் பொங்கி  நூறாண்டுகள் 
               நீடுழி  வாழ  திருமண வாழ்த்துக்கள் !

               
               சூரியனும், சந்திரனும்  சாட்சியாய் நின்று 
               சொந்தங்களும்,  பந்தங்களும்,
                மகனும், மக்களும், நெருக்கமான 
                 நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் 
                 பொன்னான திருமண நாள் 
                 உங்களுக்கு சிறப்புடையதாக இருக்கட்டும் !
                 

              
                 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

Home Remedies to control Diabetes-Natural Home remedies for Diabetes By ...

பழுதடைந்த சிறுநீரகம் புதிது போல் மாற,சிறுநீரகம் பாதுகாக்கப்பட இது மட்டும...

கால்வீக்கம்,காலில் நீர் கோர்த்துக், கணுக்கால் வீக்கம் சரியாக இது ஒரு கைப...

கால்வீக்கம்,காலில் நீர் கோர்த்துக், கணுக்கால் வீக்கம் சரியாக இது ஒரு கைப...

therthal kavithai




ஓட்டு திருடர்களே
சீக்கிரம் வாருங்கள்
எங்கள் ஓட்டு விற்பனைக்கு
காத்துக் கிடக்கிறது!

காத்துக் கிடக்கிறோம்

காத்துக் கிடக்கிறோம்
திருடர்கள் எப்போது
கதவை தட்டுவர் என்ற ஏக்கத்தில்!

முன்பு திருடர்களுக்கு பயந்து

கதவை மூடுவோம்...
இன்று
திருடர்கள் வருகைக்காக
காத்துக் கிடக்கிறோம்!

தெரியாமல் வரும் திருடனை

அடித்து விரட்டுகிறோம்...
தெரிந்தே வரும் திருடனுக்கு
ஆரத்தி எடுக்கிறோம்!

ஐந்து நாள் பணத்திற்கு ஆசைப்பட்டு

ஐந்து ஆண்டு நாட்டை
அடகு வைக்க காத்து கிடக்கிறோம்!

வழி விடுங்கள் வழி விடுங்கள்

காவலரின் துணையோடு 
கயவர்கள் வருகின்றனர் 
வழி விடுங்கள்!

கயவர்கள் என்று தெரிந்தும்

கதவை திறந்து விட
தேர்தல் வந்ததே 

     

Sattray Senthiyungal





                  சற்றே   சிந்தித்துப் பாருங்கள் ! 
  1.               ஞானத்தை  வளர்த்துகொள்ளுங்கள் 
           அது    சக்தியின்       பிறப்பிடமாகும் !
  1.                கடவுளின்  அருளை  வேண்டுங்கள்
         அது பக்தியின்  இருப்பிடமாகும்  !
  1.                 தியானம்  செய்ய  விரும்புங்கள்
         அது  மனஅமைதியின்  உறைவிடமாகும் !
  1.                யோகாசனங்களை செய்ய  பழகுங்கள் 
       அது    உணர்சிகளை நிலைநிறுத்தும்  இடமாகும் ! 
  1.              நினைவாற்றலை வளர்த்துக்  கொள்ளுங்கள் 
      அது அறிவு எனும் ஊற்று தோன்றும்  இடமாகும்  

\6 உடற்பயிற்சியும்,  நடை பயிற்ச்சியும் , முத்திரையையும் 
மூச்சு பயிற்ச்சி  கலைகளையும்    தினமும் கடைபிடியுங்கள                                                                                                         
அது  கொணரா வைரஸை எதிர்க்கும் இடமாகும்,
  1.                வாழ்வில்  பணத்தை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்     
                   எதிர் காலத்தில் உன்னை தாங்கும் தூண்னாகும் 
  2.               பிறர்க்கு நல்லதை  செய்ய  நினையுங்கள் 
      அது  உன்  புகழினை  பரப்பும்  இடமாகும்  

10          நாணயமாக இருக்க  முயற்சி  செய்யுங்கள் ,
             அது  உன் நேர்மைக்கு இடமாகும்  

           
11.        சிரித்து      வாழ      கற்றுக்கொள்ளுங்கள் 
            அது  நோயினை நீக்கும்  மருந்தாகும்  !
                                      ஆம்,
வாய்விட்டு சிரித்தால்  நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான்  !!
                                       
                                                               ரா. பார்த்தசாரதி 

Kadal



காதல்....

அழகைப் பார்த்து
காதலிப்பதா
காதல்...

ஆளைப் பார்த்து
ஆடையைப் பார்த்து
ஒப்பனை பார்த்து...

பட்டம் பார்த்து
பதவி பார்த்து
வருமானம் பார்த்து...

ஜாதி, மதம் பார்த்து
வயது பார்த்து
வசதி பார்த்து...

உருவம் பார்த்து
அளவு பார்த்து
நிறம் பார்த்து...

சுற்றம் பார்த்து
சூழல் பார்த்து
பின்புலம் பார்த்து...

சுற்றிச் சுற்றி வந்து
அலையாய் அலைந்து
தவியாய்த் தவித்து...

தாடி வளர்ப்பதும்
மனம் வெறுப்பதும்
கற்பழிப்பதும்...

ஆசிட் ஊற்றுவதும்
கொலை செய்வதுமா
காதல்...

இல்லவே இல்லை...
இதயம் நிறைந்து
முழு மனதோடு
'எங்கிருந்தாலும் வாழ்க'வென
வாழ்த்தி அனுப்புவது தானே
உண்மைக் காதல்!

சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.

சீரகத்துடன் இதை சாப்பிடுங்க.சிறுநீரகம் புதிது போல் மாறும்,KIDNEY DISEASE...

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

Poochuddal



ன்ன்`````
 
                                         மாலினியின்  பூச்சூட்டல்/சீமந்தம் 

கடவுளுக்கும்  பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே,
கருவுற்ற  மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு  பாரினிலே,
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும் , ஏழும்  தொடகத்தினிலே ,
சீர்மிகு சீமந்தமோ திங்கள்   ஆறும், எட்டின்  முடிவினிலே !

பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே 

நிக்கிலின்  மனைவி  மாலினிக்கு இன்று   பூச்சூட்டல்!
நிக்கிலின்    அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
அமெரிக்காவில்  இனிதே நிகிலுடன்  வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !

மல்லிகை, முல்லை, ரோஜா, என பல நறுமண மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனம் பூசி, பன்னீரும்  தெளித்து  வாழ்த்துவதே 
தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்வதே
வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற  தாயும் மகிழிச்சி அடையுதே
தானும் அணிந்து, பிறர்க்கும்  வெகுமதியாய் கொடுக்கப்படுகின்றதே  

வளைகாப்பும்,  வண்ண வளையல்களை கைய்யிலே அணிவிப்போமே ,
அவ்வளையல் ஓசை அவள் குழந்தைக்கும்,கணவனுக்கும்  சொந்தமே  
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகனை  பெற்று தர,
மாலினியை  நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் (மாலினி) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள்,  மாலினியை வாழ்த்திடுவோம் அன்பாலே !

ரா.பார்த்தசாரதி, கமலா பார்த்தசாரதி 

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

Nayagaarah Nathiye




                           நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !
             

        1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞனஇல்லை 
           நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பாரதில்லை 

       2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே 
           மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   

      3. மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே

          மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே

      4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ? 

          அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

      5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய்

        நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

     6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா
        எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
     
    7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய்         நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

    8.  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !

       நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !

   9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய

       நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய்

     நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி 

                        

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

சென்னையில் இரும்பு பாத்திரக்கடை Tour Video Part-2 | Parrys Corner Kandas...

தோசை கல்லில் இதுவரை யாரும் செய்யாத முதல் ஐடியா இதுதான்|unbelievable Nons...

கோயம்புத்தூர் நகரில் சிறுதொழில் இயந்திரங்கள் கிடைக்கும் முகவரிகள் முழு வ...

சிறியாநங்கை / Siriyanangai (Bio Name Andrographis paniculata) #ayurveda ...

சிறியாநங்கை / Siriyanangai (Bio Name Andrographis paniculata) #ayurveda ...

Yoga with breathing exercise | Sivakumar Amazing Speech | Pranascience

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

சனி, 25 ஜனவரி, 2020

Republic Day




                                                   குடியரசு தினம்

       சட்டங்களையும், மனித உரிமைகளையும் ஒரு குடைக்கீழ் வந்த தினம்
       நாட்டின் ஒருமை பாட்டிற்காக,சட்டங்கள் பிரகடன படுத்திய தினம்
       எல்லா மாநிலத்திற்கும் பொதுவான சட்ட திட்டங்கள் உண்டான தினம்
       ஜனநாயக  நாடு  ஒரு குடியரசு  நாடாய் அமல்படுத்திய   தினம்.!

       எங்கு சட்டம் முடிகிறதோ, அங்கே கொடுங்கோல் ஆரம்பமாகும்
       குடிநீர் பிரச்சனை,தீக்கமுடியாமல், குடியுரிமைக்கு தாவுவதா 
       அரசியல் சாசனங்களும், அரசியல் வாதிகளும் காரணமாகும்
       கொலைக்கும், கொடுங்கோன்மைக்கும் துணை நிற்பதாகும் !

       தீவிர வாதத்தையும், கருப்பு பணத்தையும், அறவே ஒழிக்கமுடிந்ததா
       நாட்டின் சட்ட திட்டங்களால் இவைகளை முழுதும் அழிக்க முடிந்ததா
       ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், இதற்கு துணைநிற்பதா
       எழுபத்து ஓராண்டுகள் ஆண்டுகள் ஆயினும் தீர்வு இல்லாமல் இருப்பதா !

       குடியரசு  நாடே ! இன்று பணக்காரர்கள் ஆட்டி வைக்கும் பொம்மையா
       ஏழைகளுக்கு  இன்று  சட்ட திட்டங்கள் ஓர்  எட்டா  கனியா
       நிதி கிடைத்தால் போதும் என்றெண்ணி நீதியை புறக்கணிக்கலாமா
       நடுநிலை கொண்டு நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்ட வேண்டாமா !

              ரா.பார்த்தசாரதி