பூச்சூட்டல் / சீமந்த வாழ்த்து மடல்
கடவுளுக்கும் பூச்சூடல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே
கருவுற்ற மாதராசிக்கும் பூச்சூட்டல் உண்டு பாரினிலே
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும், ஏழும் தொடக்கத்தினிலே
சீர்மிகு சீமந்தமோ திங்கள் ஆறும்,எட்டின் முடிவினிலே !
பெண் கருவுற்று மகிழ்வதும் தாய்மையாலே
தாயாக மாறுவதும் அந்த தாய்மையாலே
இறைவன் சேய்க்காக தாயைப் படைத்தான்
தாய் சேய் உறவினை பாசத்தினால் பிணைந்தான் !
பூனேயில் வாழும் விஜய்யின் அன்பு மனைவி ரேஷ்மியாம்
அன்பும், பண்பும், பாசமும், நேசமும் கொண்டவளாம்
பூனேயில் சிறப்புடன் என்றும் வாழ்பவளாம்
இன்று, பூச்சூடலும், சீர்மிகு சீமந்தமும் நடைபெறுகின்றது
ரேஷ்மிக்கு, பூச்சூட்டல் ! வாருங்கள் ! வாருங்கள் !
பலவகை வளையல்கள் அணிவித்து மகிழ்விப்போமே,
நறுமணம் கொண்ட சந்தானம்,பன்னீர் தெளிப்போமே
பிறர்க்கும் அளித்து, தாய் சேய் வளமுற வாழ்த்துவோமே,
ஆண்டாள் நாச்சியார் திருவாய்மொழியில் குறிப்பிட்டுளார்!
செண்பகம், மல்லிகை, முல்லை, இருவாட்சியோடு
பாதிரிப்பு, செங்கழுநீர்ப்பூ, கருமுகை,குருக்கத்தி
உகந்தி,சம்பங்கி என என்பகர் கொணர்ந்து
இன்று இவை மாலையாய் ரேஷ்மிக்கு சூட்டவா !
என வில்லிபுத்தூர் கோமகள் சொன்ன பத்தே !
சீர்மிகு சீமந்தத்தில் மந்திரநீர் கொண்டு நீராட்டுவோமே
பெரியோர்கள் ஆசி கூறி தம்பதிகளை வாழ்த்துவோமே!
நண்பர்களும்,, உறவினரும், ஆன்லைனிலும் வாழ்த்துவோமே
உற்றாரும், உறவினரும் விருந்துண்டு மகிழ்வோமே!
பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே
பொன்மகள் ரேஷ்மி பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
ரேஷ்மியும், விஜய்யும், நலம்பெற வாழ்த்துவோம் அன்பாலே !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக