குடியரசு தினம்
சட்டங்களையும், மனித உரிமைகளையும் ஒரு குடைக்கீழ் வந்த தினம்
நாட்டின் ஒருமை பாட்டிற்காக,சட்டங்கள் பிரகடன படுத்திய தினம்
எல்லா மாநிலத்திற்கும் பொதுவான சட்ட திட்டங்கள் உண்டான தினம்
ஜனநாயக நாடு ஒரு குடியரசு நாடாய் அமல்படுத்திய தினம்.!
எங்கு சட்டம் முடிகிறதோ, அங்கே கொடுங்கோல் ஆரம்பமாகும்
குடிநீர் பிரச்சனை,தீக்கமுடியாமல், குடியுரிமைக்கு தாவுவதா
அரசியல் சாசனங்களும், அரசியல் வாதிகளும் காரணமாகும்
கொலைக்கும், கொடுங்கோன்மைக்கும் துணை நிற்பதாகும் !
தீவிர வாதத்தையும், கருப்பு பணத்தையும், அறவே ஒழிக்கமுடிந்ததா
நாட்டின் சட்ட திட்டங்களால் இவைகளை முழுதும் அழிக்க முடிந்ததா
ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், இதற்கு துணைநிற்பதா
எழுபத்து ஓராண்டுகள் ஆண்டுகள் ஆயினும் தீர்வு இல்லாமல் இருப்பதா !
குடியரசு நாடே ! இன்று பணக்காரர்கள் ஆட்டி வைக்கும் பொம்மையா
ஏழைகளுக்கு இன்று சட்ட திட்டங்கள் ஓர் எட்டா கனியா
நிதி கிடைத்தால் போதும் என்றெண்ணி நீதியை புறக்கணிக்கலாமா
நடுநிலை கொண்டு நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்ட வேண்டாமா !
ரா.பார்த்தசாரதி
ReplyForward
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக