நாணமோ ! காதலோ !
நாணம் என்பதே பெண்ணிற்கு அணிகலம்
நாணத்தால் பெண் முகம் என்றும் சிவக்கும்
நாணத்தினால் தரை குனிந்து மௌனம் சாதிக்கும்
இனியவளே ! உன் விருப்பத்தினை கோடிட்டு காட்டுகிறாய்
கருமேகங்கள் நிலவினை மறைக்கும்
நாணமெனும் போர்வை முகம் மறைக்கும்
நாணமென்பது பெண்டிர்க்கு மேலாடையோ
இடையை மறைத்து கட்டும் நூலாடையோ
நாணம் என்பது பருவத்தின் கண்ணாடியோ
கடலில் முழுகுவதறஇவ்விரண்டும், கு ஓர் முன்னோடியோ
இலைமறை காயாய் வெளிப்படுத்தும் தன்மையோ ,
ஒன்று கலந்த நெஞ்சத்துடன் உறவாடும் தன்மையோ !
நாணத்தால் உன் முகம் காதல் மொழி பேசுமோ
முகத்தை மறைத்தாலும் என்னை நினைக்க தோனுமோ
நாமத்தினால் முகம் சிவந்து காதல் வெளிப்படுத்துமோ
அமுத நிலையடைந்து , இன்பநிலை எய்துமோ !
அச்சமும், நாணமும், காதலின் உடைமையோ
இவ்விரண்டும் நாணயத்தின் இரு பக்கமோ
காதலில் கண்கள் உறங்கிடுமோ? உறவை நாடிடுமோ
காதல் உதயமாகி ஊஞ்சல் ஆடிடுமோ !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக