நீதியைத் தேடி
குற்றங்கடிதல் எழுதிய வள்ளுவன்
நீதியை தேடி எழுதவில்லை அன்று !
ஆணுக்கு ஓர் நீதி, பெண்ணுக்கொரு நீதியா !
ஏன் என்று கேட்க தெரியவில்லையா ?
சட்டத்தின் முன் எல்லோரும் சமம்
நீதியை பாகுபடுத்தி பார்ப்பது எங்ஙனம் ?
நடுநிலைமையுடன் நீதி வழங்க வேண்டும்
நீயத்திற்கும், மனசாட்சியுடனும் நடக்க வேண்டும் ,
இன்று நீதிக்கே அநீதி இழைக்கப்படுகிறதே !
பணத்தினால் சாட்சிகள் மறைக்கப்படுகிறதே !
பணமிருந்தால் நீதியைக்கூட அடிமைபடுத்தமுடியும்
செய்யாத தவறுக்கு ஏழையை கூட சிறைபடுத்த முடியும் !
அவனியில் ஏழைக்கு ஓர் நீதியா
பணம் படைத்தவனுக்கு ஓர் நீதியா !
நீதி பணத்தால் தன்மானம் இழக்கின்றது
ஏழைக்கு எட்டா கனியாகிறது !
நீதியை உண்மையாக்கினான் மனுநீதி சோழன்
உண்மையை விலை பேசினான் இன்றைய நீதியரசன் !
நீதி பணத்தால் மௌனம் சாதிக்கின்றது ,
மனுநீதி சோழனும் நீதியை தேடியே இறந்தான்
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக