கடலோரக் கவிதை
நேரமும் அலையும் மனிதனுக்காக காத்திருக்காது
கடந்த காலமும், எய்த அம்பும் திரும்ப பெற முடியாது
ஆசையே அலைபோலே, எனப் பாடினான் கவிஞ்ன்,
அலையும் ஆசையும் செயலில் ஒன்றே என்றான் !
கடலைப் பார்த்தாலே, நெஞ்சினிலே எண்ண அலைகள் தோன்றிடுமே
காதலியின் முத்துச்சிரிப்பினை அலையென மனம் நினைத்திடுமே ,
முத்துசிரிப்பும், புன்னகையும்,வெண்ணிற அலையில் தோன்றிடுமே,
காதலி என்னை வருடியதுபோல் கடல் அலையும் அழைக்குமே !
கடலோர காற்றும்,சூழலும், கவிதை எழுதத் தோன்றும்
கவிஞனின் எண்ணங்கள் என்றும் சிறகடித்து பறக்கும்
கடல் அலைகள் கண்டு மனம் என்றும் பொங்கி எழும்
அவன் எழுதும் கவிதைக்கு தென்றல் வாழ்த்துப் பாடும் !
கடலோர கவிதைக்கு என்றும் சிறப்புண்டு
கடல் அலை அருகினில் மக்கள் செல்வதுண்டு
மகிழ்ச்சியுடன் கடல் அலையில் கால்களை நனைப்பதுண்டு
கால் தடத்தில் மண் பெயர்ந்து தடம் பதிப்பதுண்டு !
நிலவும், மேகமும் ஒன்றையொன்று தழுவும் காட்சி ,
கடல் அலைகளுக்கு இதனை காண்பதே மகிழ்ச்சி
கடற்கரையே காதலர்களுக்கு ஓர் சொந்த வீடு
தனியே கொஞ்சு மொழி பேசிட, அங்கில்லை கட்டுப்பாடு !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக