எங்கே நிம்மதி ?
தனிமையையும், நிம்மதியையும் தேடாத மனிதன் இல்லை?
எங்கே என்று பலரிடம் கேட்டும் சரியான பதில் இல்லை,
ஒவ்வொருவாறும் வாழ்க்கையில் நினைக்காத நாள் இல்லை
துறவிகள் காட்டிற்கு சென்றது தவத்திற்கா,தனிமைக்கா என்றறியவில்லை!
நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்குமென மனிதன் எண்ணினான் ,
அங்கே ஓர் இடம் தனக்கு வேண்டும் என்றான் ,
இருந்த இடத்தினிலே நிம்மதியும்,தனிமையும் கிடைக்குமா?
இவை இரண்டும் மனம் மௌனமாய் இருந்தால் ஈடேறுமா ?
நிம்மதியும், தனிமையும் அமைதியான இடத்தில்தான் தோன்றுமா ?
இதனை நாளும் தேடித்தேடி அலைவது வீண் என்று தோன்றுமா ?
யோகிகளையும் முனிவர்களையும்,கேட்டால் பதில் கிடைக்குமா ?
அவர்களும் அதை தேடித்தான் செல்கின்றனர் என கூறமுடியுமா ?
தனிமையிலே இனிமை இல்லை,நடு இரவில் பகலவன் தெரிவதில்லை ,
நிம்மதி என்பது நம் மனதிற்கு உட்பட்டதே என்று அறிவதில்லை ,
தனிமையும், நிம்மதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே ,
இவ்வுலகில் எதுவுமே தனிமையில்லை,அமைதிகொண்ட மனமே நிம்மதி!
ரா. பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக