தண்ணீரும் இரத்தமும்
உலகில் மூன்று பங்கு தண்ணீரால் நிரம்பியதே
ஏனோ மாநிலத்திற்கு, மாநிலம் கலகம் ஏற்பட்டதே ,
வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய்யானதே,
தண்ணீரால் மாநிலத்தில் ரத்தவெள்ளம் ஆனதே !
சுதந்திரம் அடைந்ததது முதல் நதிநீர் இணைப்பு
இன்னும் இவை காகித திட்டமே என மக்களின் நினைப்பு,
நதிநீர் மாநிலத்தின் வேளாண்மைக்கு முக்கியத்துவம் ஆனதே
விவசாயிகளின் கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டமும் நீயமானதே !
வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெடுவதில்லை
இது மாநிலத்திற்கும், மத்திய அரசிற்கும் பொருந்தாமலில்லை
நீதி கேட்டும், சமரசம் செய்தாலும், பிரச்சனை தீர்ந்தபாடில்லை
வன்முறையால் எதையும் தீர்க்க முடியாது என தெரியாமலில்லை !
நடுவர் சொல்லுக்கும், நீதிபதி தீர்ப்புக்கும் மதிப்பு அளிக்கவேண்டும்,
நீதியை நிராகரித்தால் எந்த மாநிலமும் துன்பப்படவேண்டும்
இருவர் கூடி சமரசத்தால் ஓர் சமாதானம் ஏற்படவேண்டும்
இதனால் இருவர்க்கும் பயன் உள்ளதாக இருக்கவேண்டும் !
மக்களின் பொதுநலம் கருதியே நதிநீர் தீட்டப்படவேண்டும்
ஜாதி, அரசியல் போன்றவை கலவாமல் இருக்கவேண்டும்
மாநிலங்களிடையே இனவெறி நீங்கி, ஒற்றுமை நிலவ வேண்டும்
ஜாதி, இனம் இவற்றிற்கு ஊறு விளையாமல் இருக்கவேண்டும் !
நதிநீர் பங்கீடு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலாக்கவேண்டும்
மாநிலங்களின் பிரச்சனைகளை ஒன்றுகூடி தீர்மானிக்கவேண்டும்
நீரின்றி அமையாது உலகம் என்பது ஆன்றோர் மொழியாகும்
நீரே மக்களின் தேவைக்கும், உணவிற்கும் இன்றியமையாததாகும் !
ரா.பார்த்தசாரதி
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக