எழுத்து
எண்ணும், எழுதும் இரு கண்கள் என்றான்
எண்ணிற்கு பிறகே எழுத்தை வைத்தான்
எண்ணிற்கும் எழுத்திற்கும் ஓர் உறவு வைத்தான்
இரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததே என்றான்
எண்ணால் விண்ணையும்,மண்ணையும் அளக்கலாம்
எழுத்தால் மட்டுமே அவைகளின் தன்மையை பார்க்கலாம்
எழுத்தறிவித்தவன் இறைவன் எனக் கூறுவர் சான்றோர்
நான்கெழுத்து படிக்காதவனின் செல்வமும் பயனற்றது என்பர்!
ஓம் என்ற எழுத்திலிருந்து பிரணவம் பிறந்ததே
ஓங்கார சக்தியுடன் சமயமும்,பக்தி பாடல்களும் தோன்றியதே .
தாய்மொழி உயிரும்,மெய்யும் சேர்ந்து உயிர்மெய்யெழுத்தானதே
நமது உயிரும், உடலும் சேர்ந்து ஆன்மா ஆனதே !
எழுத்து என்பது, உயிர்மெய் எழுத்துக்களின் கூறியீடுகளே,
இவைகளே வார்தைகளாகி, நூல்களின் தோற்றங்களே
நூல்கள் எழுத்து, மற்றும் ,வார்த்தைகளின் கோர்வையே ,
உலகெங்கும் பலவடிவில் செய்தியாக உலா வருபவையே !
மனிதன் கையால் எழுதும்போது, கையெழுத்து என்கிறான்
அவன் விதி முடிந்தால் அவன் தலையெழுத்து என்கிறான்.
எண்ணையும், எழுத்தையும் எழுதாமல் இருக்கமுடியாது
இவ்விரண்டும் வாழ்வின் கண்கள் எனில், அது மிகையாகாது!