வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
வியாழன், 29 ஆகஸ்ட், 2013
கவனமாய் இருப்போம்
கவனமாய் இருப்போம்
வெள்ளிச்சம் வந்தால், இருள் விலகும் ,
தர்மம் செய்வதால், வந்திடும் இன்பம் !
இதயத்தில், அன்பு நிறைந்தால் , வன்மம் வெளியேறும்,
இரக்கம் நிரம்பினால் கோபம் வெளியேறும் !
பொறுமை நிரம்பினால், பொல்லாங்கு வெளியேறும் ,
பிறர்நலம், பேணினால், தன்னலம் வெளியேறும் !
இன்மொழி நிரம்பினால், வசைமொழி வெளியேறும்,
துணிவு ஏற்பட்டால் அச்சம் வெளியேறும்! ,
நேர்மை நிரம்பினால், கயமை வெளியேறும்,
திருப்தி அடைந்தால், பொறாமை வெளியேறும்!
முயற்ச்சி செய்தால், தடைகள் வெளியேறும்,
தோழமை கொண்டால், பகைமை வெளியேறும் 1
வெளியேற்றபட வேண்டியதை கணக்கில் எடுத்து,
நிரப்புவதிலே என்றும் கவனமாய் இருப்போம்!
ரா. பார்த்தசாரதி

திங்கள், 26 ஆகஸ்ட், 2013
வாலி
வாலி
புவியில் புனைபெயர் கொண்ட வாலியே ,
நின் புகழ் திரைஉலகில் ஓங்கியே !
உனது பாட்டெல்லாம் பாரினில் பரவியே,
உன்னால் பின்னணி பாடகர்களுக்கும் பெருமையே !
பதினைந்தாயிரதிற்குமேல் பாடல் எழுதிய பாடலாசிரியனே,
திரையுலகில் நீ ஒரு சகாப்தம்தானே !
இன்று நீ இல்லா தமிழ் நாடு
இன்று நிழல் இல்லாத வீடு !
நந்தா விளக்கே கவிஉலகின் ஒளிவிளக்கே!
உயர்ந்த சிந்தனை, அஞ்சாமை இவ்வுருவமே வாலி !
உன் திரைபட பாடல்கள் தலைமுறைக்கும் அவணி ஆளுமே!
உன் பாட்டென்றால் பாமரனின் நெஞ்சத்தையும் அள்ளுமே !
உன்னோடு முடிந்ததோ காதல் காவியம்
இனி எவர் படைப்பார் கவிதை ஓவியம் !
நீ கல்லறையில் தூங்கினாலும், உன் பாடல்கள் தூங்காது,
உன் பாடலின் இன்னிசையே என்றும் ஓயாது !
வாழ்க! வாலியீன் புகழ்!
ரா.பார்த்தசாரதி

வியாழன், 22 ஆகஸ்ட், 2013
சுதந்திர சிறகுகள்
சுதந்திர சிறகுகள்
மனிதனே, நம் சுதந்திரம் பிறர் பறப்பதற்கா
நம் சுதந்திரம், நம்மை பிறர் ஆள்வதற்கா ?
இளைஞ்ர்களே சிந்தனைச் சிறகுகள் பறக்கவா
காதல் சிறையினில் உன்னை பூட் டிடவா ?
நம் சுதந்திரம், நம்மை பிறர் ஆள்வதற்கா ?
இளைஞ்ர்களே சிந்தனைச் சிறகுகள் பறக்கவா
காதல் சிறையினில் உன்னை பூட் டிடவா ?
சிறுவர்களே, வசந்த சிறகுகள் பறக்கவா,
திரை அரங்கிலே என்றும் தொலைத்திடவா?
வாக்களர்களே, உங்கள் வாக்குசீட்டு எனும் அட்சயபபாத்திரத்தை ,
அரசியில்வாதியிடம் இலவசமாக கொடுத்துவிட்டிர்களா ?
பாட்டாளி, தோழனே உன் உழைப்புச் சிறகுகளை,
பண முதலைகளிடம் சேர்ந்தே அடகு வைத்துவிட்டிர்களா ?
இன்னும், இன்னும், உதிர்ந்திடாத சிறகுகளோ,
நம் நாட்டில், ஏராளம் , ஏராளம்!
இனியாவது, பெற்ற சுதந்திரந்திற்கான இனிப்போடு ,
பெறவேண்டிய சுதந்திரத்திற்கான கண்ணீரை பிரசிவிப்போம்!
ரா.பார்த்தசாரதி
புதன், 21 ஆகஸ்ட், 2013
காதல் உள்ளங்கள்
காதல் உள்ளங்கள்
உன்னாலே உயிர் வாழ்கின்றேன் ,
உன் நினைவாலே துடிக்கின்றேன் ,
உன்னை சந்திக்க விரும்புகிறேன் ,
முடியாவிடில், கனவில் சந்திக்கின்றேன் !
வானமெனும் வீதியிலே வரவேற்றேன் கனவிலே,
நிலவை, மறைத்தேன் உன்னை நினைத்தேன் நெஞ்சினிலே ,
தென்றலாய் வந்து என்னை அணைப்பாயா?
என் மனதினிலே வந்து கலந்துவிடுவாயா?
உன் விழிகளின் படபடப்பில் என் இதயம் சிறகடிகும்,
உன் பார்வையால் என் உயிர் துடிதுடிக்கும் ,
என் மனம் கடல் அலைப் போல் மோதுதே,
காதலால் நம் பார்வை ஒன்றோடுஒன்று உறவாடுதே!
காதல் அழகாய் பூக்குதே , சுகமாய் தாக்குதே,
நம் உள்ளங்கள் , சொல்லாமல்,கொள்ளாமல் பந்தாடுதே !

திங்கள், 19 ஆகஸ்ட், 2013
இதுதான் சுதந்திர தினமா ?
இதுதான் சுதந்திர தினமா ?
கைபேசி மூலம் ஏற்படும் காதல் சுதந்திரம்,
ஊழலையும், கொடுமைகளையும் கண்டு கொள்ளாத சுதந்திரம்,
பெண்மையை மதியாமல், கற்பை சூறையாடும் சுதந்திரம்,
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நினைப்பதில் சுதந்திரம்,
ஆடை மாற்றுவதுபோல், திருமண முறிவில் சுதந்திரம்,
தேசியகீதம் கேட்டும் அரை மனதுடன் நிற்கும் சுதந்திரம்,
மாநிலத்திற்கு, மாநிலம் சுய ஆட்சி சுதந்திரம்
கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், தொலைத்த சுதந்திரம்,
நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி கவலைபடாத சுதந்திரம்,
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை மறந்த சுதந்திரம்.
அறுபத்தெட்டு ஆண்டுகள் ஆனாலும், பொருள் காணமுடியாத சுதந்திரம்.
ஜனநாயகமே, இதுதான் சுதந்திர தினமா ?
ரா.பார்த்தசாரதி
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013
சுதந்திரம் எங்கே
சுதந்திரம் எங்கே
நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம்,
வெள்ளையனே வெள்ளியேறு என சொன்னோம்!
சுதந்திரம் எதில்? பெண்ணிடமா , பெண்ண்மையிலா ?
கற்பை சூறை யாடுபவர்களுக்கு சுதந்திரமா!
அரசியல்வாதிகள் ஊழலை மறைபதற்கு சுதந்திரம்
ஏன் என்று கேட்பவர்களுக்கு சிறையே அடைக்கலம்!
நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்தவர்கள் தியாகம் ,
இன்று கெடுதல் நடக்கா மலிருக்க ஓர் யாகம்!
ஆன்மிகவாதிகளுக்கும், அரசியல்வாதிக்கும் சுதந்திரம்,
நல்லதை செய்பவர்களை தடைசெய்யுதே சுதந்திரம்!
பறவைகள் பறப்பதற்கு என்றும் சுதந்திரம்
பாவைகளுக்கு எதிலே இன்று சுதந்திரம் !
அறுபத்தெட்டு ஆண்டுகள் ஆயினும் வறுமைக்கோடு,
இன்றோ ஏழை கூக்குரலின் கூப்பாடு !
கவிஞர்கள் முழக்கிய சுதந்திரம் எங்கே?
இன்றும் பெயரளவில் இயங்குது இங்கே ?
இளைஞ்சர்களே நீங்கள் சுதந்திரத்தை நெஞ்சினிலே நிறுத்துங்கள்
தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கு கடினமாய் உழைத்திதிடுங்கள் !
ஊழலையும், கொடுமைகளையும் எதிர்த்து போராடுங்கள்,
ஊக்கத்துடன் போராடி வெற்றி காணுங்கள் !
சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை என நினையுங்கள்,
அதுவே பல தியாகிகளின், தியாகம் என நினைந்திடுங்கள் !
இன்று சுதந்திரத்தின் உள்ளுணர்வு உன்னை தூண்டட்டும்,
இன்றைய பாரத இளைஞ்சர்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013
பெண்ணே பொங்கி எழு
பெண்ணே பொங்கி எழு!
வயது வந்த பெண் அவள்,
வரதட்சிணை இன்றி அழுகிறாள் !
வரதட்சிணை தந்து மணப்பவனோ,
வரட்டி போலங்கு எரிகிறாள் !
நங்கை எனும் பெண் அழுகிறாள்,
கண்ணீரை ஏனோ கங்கையாக கொட்டுகிறாள்,
ஏனோ இவ்வூலகில் ஆயிரம் பொன் தந்தாலும்,
இவ்வூலகில் மங்கை மண்னெண்ணைக்குள் மறைகிறாள்!
மண்ணாய் என்றும் இருந்துவிடாதே கண்ணே!
புதுமைப் பெண்ணாய் மாறிட வேண்டும்,
பொன், பொருள், ஊதியம் தந்து வாழ்கின்றாய்,
என்றுதான் உன் சுதந்திரத்தை நிலைப்படுத்துவாய் !
ஆணுக்கு நிகராய் படித்து பட்டம் பெற்றாய்,
உன் பெற்றோரை திருமணத்தோடு மறந்தாய்,
உனக்கு உயிரும் , உருவமும் தந்தவளை,
உதாசீனம் செய்ய எண்ணி விடாதே!
மதிப்பும், மரியாதையும், மனதிலே மட்டும்தானா !
பிறந்த வீட்டையும் சற்றே நினைக்க வேண்டாமா,
பல்லாயிரம் தொலைவில் இருந்தாலும் தாய்ப்பாசம் மாறுமா,
அவள் நிலைமை என்றும் உயர்த்த வேண்டமா!
ஆணுக்கு நிகராய் என்றும் இருந்திடுவாய்,
தர்மத்தையும், நியாத்தையும் என்றும் நிலைநாட்டிடுவாய்,
பெண்ணடிமை என்பதை வேரோடு அறுத்திடுவாய்,
ஞாலத்தில் புதுமைப் பெண் என்பதை பறைசாற்றிடுவாய்!
ரா.பார்த்தசாரதி
புதன், 7 ஆகஸ்ட், 2013
காதலுக்கு மருந்து
காதலுக்கு மருந்து
காதலே உனக்கு மருந்து போடுகிறேன் ,
உன் காதல் வியாதி நீக்கத்தான் !
மொழிகள் பிறக்கும் முன் பிறந்தாய் ,
வர்ணிக்க முடியாதபடி என்னை திணறச் செய்தாய்!
வார்த்தைகளை சிலையாக்கி உன்னை நான் செதுக்குவேன்,
கடவுளும், காதலும் வேறில்லை என நினைதிடுவேன் !
உன் கைப்பட்டால் இதயம் படபடக்கும் !
உன் கைப்பட்டால் தொட்டாசிணுங்கிக்கும் வலிக்கும்!
உனது விழிகள் எனது பார்வைதானே ,
எனது மனதில் உன் உருவம்தானே !
வலியால் துடிக்கின்றது என் மனம்,
உன் விழிக்கு மருந்திடும் போதேல்லாம் !
வள்ளுவன் காதலுக்குள் காமம் வைத்தான்,
காதலன் காமதிற்குள் காதலை வைத்தான் !
ஆதாமும், ஏவாளும், ஆக்கி வைத்த கூட்டான்சோறுதானே,
அரை வடிவ ஆப்பிள் வடிவமாய் காட்சி தரும் சின்னம்தானே!
காதல் என்பது தெளிந்த நீரோடை அக்காலத்தில் ,
கலங்கிச் செல்லும் கழிவு நீரோடையானதே இக்காலத்தில்!
அடுத்த தலைமுறையிலும் உன்னை தீண்டுவேன்,
அதற்கான மருந்து ஒன்றினை கொடுத்திடுவேன்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)