வியாழன், 5 ஜூலை, 2018

Nayaghara Nathiye




                          நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !

1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  
   நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பார்பதில்லை 

2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே
   மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !    
       
3.
 மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே 
    மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே!
  
 4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ?
    அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

 5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய் 
     நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

 6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா ! 
     எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
      

  7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய் 
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

8.  நதியே  !  நின் அணையினால்  மின் சக்தி    தருகின்றாய்   !
      நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !


9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்

    நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய் 
      நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி 

திங்கள், 25 ஜூன், 2018

Face Book Message




  Face Book Message Sent by Mr.Shankar  - Advocate


தொடர்புகளுக்கு அனுப்பவில்லை என்றால், இந்த செய்தியை அனுப்பாமல் உங்கள் தொடர்புகள் அனைத்தையும் இழந்து வருவதால் உங்கள் கணக்கு செயலற்றதாக இருக்கும். உங்கள் ஸ்மார்ட்போன் அடுத்த 24 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்படும், புதிய வடிவமைப்பு மற்றும் அரட்டைக்கு ஒரு புதிய வண்ணம் இருக்கும். பேஸ்புக் பயனர்களே, நாங்கள் பேஸ்புக்கு புதுப்பித்து 23:00 p.m. இந்த நாளில் 05:00 a.m. வரை. உங்கள் எல்லா தொடர்புகளுக்கும் இதை அனுப்பவில்லை என்றால், புதுப்பிப்பு ரத்துசெய்யப்படும். உங்கள் பேஸ்புக் செய்திகளுடன் அரட்டை செய்ய உங்களுக்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் அடிக்கடி பயனாளராக இல்லாவிட்டால் நீங்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும். உங்களிடம் குறைந்தபட்சம் 10 தொடர்புகளை வைத்திருந்தால், இந்த SMS அனுப்பவும், நீங்கள் ஒரு பயனர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் குறிக்க லோகோ சிவப்பு நிறமாக மாறிவிடும் ... நாங்கள் அதை இலவசமாக முடிக்கிறோம். நாளை அவர்கள் 0.37 சென்ட்டுகளில் ஃபேஸ்புக்கிற்கான செய்திகளை சேகரிக்கத் தொடங்குகின்றனர். இந்த செய்தியை உங்கள் 9 க்கும் மேற்பட்ட தொடர்புகளுக்கு அனுப்புவதோடு, உங்களுக்காக வாழ்வதற்கு இது இலவசமாக இருக்கும். பார் மற்றும் பந்து பச்சை மாறும். அதை நீங்கள் பேஸ்புக் இப்போது இலவசமாக பார்க்க வேண்டும். செலவில்லாமல் உங்கள் சேவையை மீண்டும் செயல்பட 10 நபர்களுக்கு அனுப்பவும்.

ஞாயிறு, 24 ஜூன், 2018

Thirumana Naal




                                                            

                                                                  திருமண நாள் 



உற்றவர் பெற்றவர் ஆசிகள் சூழ 
இலத்தரசனும்அரசியுமாக
மங்கலநாண் பூண்டிடும்
திருநாளே திருமண நாள்

திருமணம் என்பது இரு மனம் அல்ல 
அதுவே இரு மனம் கொண்ட ஒரு மனம்.
இருமனமும் புரிதலோடு வாழும்வாழ்க்கை 
வருடா வருடம், நினைத்து பெருமிதம் கொள்ளும் திருமணநாள் . 

வேறு வேறு மண்ணில் மலர்ந்தாலும்
ஆயிரங்காலப் பயிராக 
கிளை பரப்பி செழித்து நிற்க
அஸ்திவார நாளே திருமண நாள்


கண்ட கனவுகள் நனவுகளாக 
மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறக்க
சமூகத்தில் புது அந்தஸ்து 
பெறும் நாளே திருமண நாள்

சுற்றம் வளர்த்து நட்பு வட்டம் பெருக்க
வாழ்க்கை என்னும் பாதையில் நடக்க 
இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில்
நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட
கருத்தொருமித்து மேன்மையான 
எதிர்காலம் சமைத்திட
அடிகோலும் பெருநாளே
திருமணநாள்

ரா.பார்த்தசாரதி  - 8148111951

சனி, 23 ஜூன், 2018

மிச்சத்தை மீட்போம்





                                                    

                                                         மிச்சத்தை மீட்போம் 


           பழைய  தலைமுறை பண்புகளை கைக்கொண்டோமா 
           இன்றைய தலைமுறைப் பண்புகளை  மேற்கொண்டோமா 
           தலைமுறைகள்  மாறினாலும் நமது பண்புகள் மாறுவதில்லை 
          தலைமுறைகள் விட்டுசென்றதை மனித மனங்கள் ஏற்பதில்லை !

           வாழ்க்கை என்றும் ஒரு எந்திரியமயமாக கருதப்படுதே 
           நிற்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லமால் போனதே
           பாவ புண்ணியங்களுக்கு சற்றே பயந்து  நடப்போம்
           வரும்  தலைமுறைக்கு புண்ணியத்தை அளிப்போம் !

          பசுவும், தன் பாலை  மிச்சம் வைத்து தன் குட்டிகளை காப்பாற்றும்
          அதனிடம் கருணை காட்டாது  தன் பசிக்காக அதனை கொல்வோம்
           ஆடு,மாடுகள் உண்ட  மிச்சமே பூமிக்கு சத்துள்ள எருவாகிறது
          மனிதனின் மிச்சமோ மனிதனையே  தீண்டத்தக்கதாக அமைகிறது !

         மனிதன் பல இனங்களானாலும் அவன் குருதி செந்நிறமே
        பணத்தாலும் ,அறிவாலும் மனித இனமும் வேறுபட்டு நிற்குமே
        ஏழை, பணக்கார ஜாதி என்றும்  தலை தூக்கி  நிற்குமே
         பணக்காரர்கள் போட்ட  மிச்சத்தை உண்டுவாழும் ஏழை இனமே !

         ஏழை கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து  இறக்கின்றான்
         தன் ஏழ்மையை  என்றும் தானமாக விட்டு செல்கின்றான்
         பணக்காரகளின் செல்வம் அவன்  தலைமுறைக்கேச்  சேருகிறது
         மடுவிற்கும், மலைக்கும் உள்ள இடைவெளியே உதாரணமாகிறது !
       
         ஒருவன் நல்ல நிலையில் இருந்தால், முன்னோர் செய்த புண்ணியமா
         ஏழையாய்  இருப்பதும் முன்னோர் செய்த தீமையான காரியமா
         வள்ளுவன் சொன்ன எச்சத்தாரால் மிச்சத்தை மீட்க முடியுமா
         விட்டுச் சென்றதை நடுநிலைமை கொண்டுதான் தீர்க்கமுடியுமா !
       
         
         
         ரா.பார்த்தசாரதி 
           

Padakkavithai Potti 166




                                              படைக்கவிதை போட்டி 166


                தன்  மகனுக்கோ, கணவனுக்கோ
                தேநீர்  ஆற்றும்  பெண்மணியே !

                வாய் பொறுக்கும் சூட்டிற்கு குடிக்க ஆற்றுகின்றாய்
                உன் தாகத்தை மறந்து குடும்பத்திற்காக பணிசெய்கின்றாய் !

                கொடுத்திடும்  உன் தாயன்பிற்கு  ஈடு இணையில்லை
                உன் அருமை அறியாத மனிதனும் பெருமையடைவதில்லை !

                இன்முகம் காட்டி, பாசத்தை தேநீரில் கலந்து, மகிழ்ந்து
                கொடுப்பதற்காக எதிர்நோக்கும் குடும்ப பெண்மணியே !

                களைப்புடன் வீடு திரும்புவனுக்கோ இது உற்சாகப் பானம்
                உன் கையால் கொடுப்பது அன்பும், பாசமும் கலந்த உறவாகும் !


                 ரா.பார்த்தசாரதி


              

வியாழன், 14 ஜூன், 2018

டி .ஜே ஸ்ரீதரன் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா





                                              

டி .ஜே  ஸ்ரீதரன் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா 
Awarded by Indian Virtual Academy for peace and Education

கவிபரணி ஏறி, கலிங்கத்து பரணி கூறுகிறேன்
கேளுங்கள், கேளுங்கள் 

மூன்றெழுத்திற்கு  ஓர் சிறப்புண்டு 
முத்தமிழ் எனும் பெயருண்டு 

தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
                       தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
               குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
                                     வாசமுள்ள  மலர்களின் சிரிப்பே மணம்
                             கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பே மழலை 
                     மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
                  மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
   நல்வழிக்கும் , அமைதிக்கும், மக்கள் சேவையில் ஈடுபடும்  
                                                நம் தலைவர்  காண்பதோ  வெற்றி
    ஆம் நம் விஷ்ணுசஹஸ்ரநாம  மண்டலியின்  தளபதி 
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற  மூன்றெழுத்து   ஸ்ரீதர்
ஆம், ஸ்ரீதர் என்ற பெயரும் மூன்றெழுத்து 
================================ரா.பார்த்தசாரதி 
ஜே .பி .என் விஷ்ணுசஹஸ்ரநாம மண்டலி  


ஞாயிறு, 10 ஜூன், 2018

ஸ்ரீ கிருஷ்ணர் vananguvathu




ஸ்ரீ கிருஷ்ணர் யார் யாரை வணங்குகிறார் ?


                     1.            நித்ய அன்னதானம் செய்பவன்

                    2.             இளம் வயதில் திருமணம் எல்லா கர்மாக்களையும்
                                    ச்ரத்தையுடன் தவறாமல் அனுஷ்டிப்பவன்

                    3.            வேதம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவர்கள்

                    4.             கற்புடைய உத்தம ஸ்தி

                   5.              காயத்ரி, சந்தியாவந்தனம் மற்ற தேவ பூஜாக்களை
                                    ச்ரத்தையுடன் அனுதினம் அனுஷ்டித்து அதன் பின்
                                   அதிதிகளுக்கு அன்னம்மிடுபவன்.

                  6.             ஆயிரம் பௌர்ணமி கண்ட, இல்லற தம்பதிகளையும்
                                  நான் வணங்குகிறேன்.
                                  ------------------------------------------------------------------------------------