மிச்சத்தை மீட்போம்
பழைய தலைமுறை பண்புகளை கைக்கொண்டோமா
இன்றைய தலைமுறைப் பண்புகளை மேற்கொண்டோமா
தலைமுறைகள் மாறினாலும் நமது பண்புகள் மாறுவதில்லை
தலைமுறைகள் விட்டுசென்றதை மனித மனங்கள் ஏற்பதில்லை !
வாழ்க்கை என்றும் ஒரு எந்திரியமயமாக கருதப்படுதே
நிற்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லமால் போனதே
பாவ புண்ணியங்களுக்கு சற்றே பயந்து நடப்போம்
வரும் தலைமுறைக்கு புண்ணியத்தை அளிப்போம் !
பசுவும், தன் பாலை மிச்சம் வைத்து தன் குட்டிகளை காப்பாற்றும்
அதனிடம் கருணை காட்டாது தன் பசிக்காக அதனை கொல்வோம்
ஆடு,மாடுகள் உண்ட மிச்சமே பூமிக்கு சத்துள்ள எருவாகிறது
மனிதனின் மிச்சமோ மனிதனையே தீண்டத்தக்கதாக அமைகிறது !
மனிதன் பல இனங்களானாலும் அவன் குருதி செந்நிறமே
பணத்தாலும் ,அறிவாலும் மனித இனமும் வேறுபட்டு நிற்குமே
ஏழை, பணக்கார ஜாதி என்றும் தலை தூக்கி நிற்குமே
பணக்காரர்கள் போட்ட மிச்சத்தை உண்டுவாழும் ஏழை இனமே !
ஏழை கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து இறக்கின்றான்
தன் ஏழ்மையை என்றும் தானமாக விட்டு செல்கின்றான்
பணக்காரகளின் செல்வம் அவன் தலைமுறைக்கேச் சேருகிறது
மடுவிற்கும், மலைக்கும் உள்ள இடைவெளியே உதாரணமாகிறது !
ஒருவன் நல்ல நிலையில் இருந்தால், முன்னோர் செய்த புண்ணியமா
ஏழையாய் இருப்பதும் முன்னோர் செய்த தீமையான காரியமா
வள்ளுவன் சொன்ன எச்சத்தாரால் மிச்சத்தை மீட்க முடியுமா
விட்டுச் சென்றதை நடுநிலைமை கொண்டுதான் தீர்க்கமுடியுமா !
ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக