வெள்ளி, 30 நவம்பர், 2012

நயகரா நதியே !

                                 நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !
1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  
   நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பார்பதில்லை

2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே
   மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   
      
3.
மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே 
    மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே!
 
 4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ?
    அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

 5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய் 
     நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

 6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா !
     எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
      

  7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய் 
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

8.  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !
      நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !


9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்

    நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய் 
      நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி 

                       

   


 
.         

seshasai

                                                                சேஷசாய்- மகன்

மகன் என்றும்,  மகள் என்றும், உரிமை  என்றும்,
மண்ணுலகத்தில் இல்லறத்தின் பயனாய் நின்றும்,
தகவுடைய குடிப்பெருமை தாங்க வந்த,
தகுதியின்   வடிவம்தான்,  மகனே ஆகும். 

பந்தங்கள், சொந்தங்கள் பெறுவதற்கே 
பாதையிட்ட  பெருமையெல்லாம் மகனால் அன்றோ,
நிறைவான பண்புகளால்  வாழ்க்கைத்  தேரை,
நேரியதோர் வழி  செல்லுதுவதும் மகன்   அன்றோ?

வளர்ந்த பின்னர்,  தந்தைக்கு  கால்களாக,
விளங்குகின்ற மகனேதான் சிறந்து நிற்பான்,
தளர்ந்து நிற்கும், பெற்றோர்க்கு  மருந்தாகி,
தன்னகத்தே உணவிட்டு நாளும் காப்பான் அன்றோ?

ஈன்றெடுத்த தாயானவளும்  கடமை செய்தாள்,
ஏற்றதோர்  கல்வி தந்து தந்தை நின்றான்,
சான்றோனாய் நிற்பதுதான் மகனின் ஆற்றல்,
சுமந்து நின்றே தாய்தந்தை வாழ்தல் வேண்டும்.

இருபத்து நான்கு வயதிற்குள் கல்வி முடித்தும்,
இருபத்து   ஐயிந்தில்   தொழில் கண்டும்,
குடும்பத்தில் கண்ணாகிய  கன்னியர்க்கு திருமணம் 
முடித்து வைத்து உதவுபவனும்  மகனே!!

அயல்நாட்டில் பெருமையுடன்  பணிபுரியும் நேசம்,
பணத்தையும், பாசத்தையும் ,பிரிக்கும் தேசம்,
மனம்சோர்ந்து  ஏங்கி தவித்திடும் தாய்தந்தையின் பாசம்,
என்றைக்காவது  குடிபுகுவாய் உன் தாய்நாட்டின் வாசம்.

விருப்பமுடனே பெற்றோர்  பார்த்த திருமகளை,
நன்றே  என நவின்றிடும் நற்புதல்வனே,
குலப்பெருமை காத்திடும், எங்கள் புத்திரனே,
சேஷசாய்  என்ற பெயருடன் இந்தியானபோலீசில் வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !!


kumar




இடம் :கடல்மங்கலம்   -2013                                                        தேதி : 21-07-2013

வியாழன், 29 நவம்பர், 2012

obama

                                                  
                                       ஒபாமா



மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு
முத்தமிழ் எனும் பெயருண்டு
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம்
குழந்தையின் சிரிப்பே மழலை
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்.
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
நம்மை வெற்றிப்பாதையில் அழைத்து செல்லும் நம் தலைவர்கள்
காண்பதோ வெற்றி
நம் வாழ்க்கையினை வளம்பெற செய்திடும் இந்நாடு,
நம் நாட்டிற்கும் உதவிக்கரம் நீட்டிடும் இந்நாடு,
அதுவே மூன்றெழுத்து கொண்ட U S Aஎனும் பொன் நாடு



இந்நாட்டில் வெற்றியுடன் உலா வரும் தானை தலைவரின்
 பெயரும்   மூன்றெழுத்து     கொண்ட  ஒபாமா       



ரா . பார்த்தசாரதி



தாயே தெய்வம்

                                              தாயே  தெய்வம்

கண்கண்ட தெய்வமென  நூலோர் சொன்னார் 
கண்மூடிச் சொல்லாம் தாயைக்  காட்டி,,
மண்ணுலகில் இறைவன்னில்லை , தாயின் அன்பை 
மதித்து  இங்கே உவமைச் சொல்ல சொற்க்கள்  இல்லை.

பத்து மாதம்  கருப்பையில்  சுமந்து பெற்று,
பக்குவமாய் வளர்த்தவளும்  தாயே ஆவாள் 
சொத்து என்றால் தாயேதான் ,  தாயின் மேலாம் 
சொத்துக்கள், சொந்தங்கள் ஏதும் இல்லை.

குடும்பத்தின் முழுநேர வேல்லைக்காரி,
குழந்தைகளின்  துப்புரவு பணியாள்,  என்றும்,
அடுப்படியில் சமைப்பதர்கே , கொஞ்சம்கூட 
அல்லுக்கதா  சலிக்காமல் சுழலும் பூமி !

மடிதன்னில்  குழந்தைகளே இல்லா நேரம் ,
மற்றவர்கள் தருகின்ற தீனி இட்டு ( சோறுண்டு}
விடியலுக்கு காத்திருப்பேன்  என்று சொல்லி,
விளக்கேற்றி மகிழ்கின்ற  " தாயே தெய்வம் "

ரா.பார்த்தசாரதி