வெள்ளி, 6 அக்டோபர், 2023
செங்கோல் ஆட்சியா ! சிதைக்கும் ஆட்சியா !!
வியாழன், 5 அக்டோபர், 2023
தமிழனே விழித்திரு எதிர்த்திடு
தமிழனே விழித்திரு எதிர்த்திடு
ஞாயிறு, 1 அக்டோபர், 2023
Thaimai enrum thuzmai
தாய்மை என்னும் தூய்மை
மலையிலிருந்து நதிகள் பல பிறக்கின்றன
நதிகளை அன்னைக்கு நிகர் என சொல்கிறோம்!
நன்முறையில் அணை போடுவது நல்லதே,
கழிவுநீரை கலக்குவது என்றும் தீமையானதே!
வாழும் உயிரினம் வாழா வேண்டுமே
நீரை குடிபவர்களுக்கும், கேடு விளையுமே
பயிர்களை அழிப்பதா , மக்கள்நலம்கெட வைப்பதா !
தெரிந்தும் தண்ணீரை அசுத்தபடுத்துவதா !
இன்று நதி நீரை மனசாட்சியின்றி கலங்கப்படுத்துகிறோம் ,
தூய்மை என்பது தாய்மையின் வடிவமே
தாய்மை என்னும் தூய்மையாய் காக்கபடவேண்டுமே
இதனை நன்முறையில் அரசே நிறைவேற்றவேண்டுமே !
ennamum sinthanaiyum
எண்ணமும், சிந்தனையும்!
எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்!
மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்!
நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!
சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!
நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும்
நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !
ரா.பார்த்தசாரதி
சனி, 30 செப்டம்பர், 2023
Pongalin Vannagolangal
பொங்கலின் வண்ணக்கோலங்கள்
புள்ளியிலே ஆரம்பித்து புள்ளியிலே
முடியும் புள்ளிக் கோலங்கள்,
கோடுகளை இணைத்துப் போடும் கோலங்கள்,
புதுமையாக நாம் காணும் வடிவங்கள் !
கோலங்கள் பண்டிகைகளுக்காக மாறும் வண்ணங்கள்,
அதுவே பெண்களுக்குரிய கை வண்ணங்கள் !
இதயத்தையும் , மனதையும் கவர்ந்திடும் கோலங்கள்,
மகாலட்சுமி அழைப்பதர்கான விடியற்காலை கோலங்ககள் !
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !
இல்லத்தில் கோலம் போடுவதே மகாலக்ஷ்மியின் தரிசனம்
மனித வாழ்கையில் சலனம் போக்குவதே தெய்வதரிசனம் !
வெள்ளிகிழமை. விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்,
இறைவன் பெயரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்!
பொங்கலன்று மெட்ரோஸ்னில் பல வண்ண கோலங்கள,
மனிதனின் மனதில் தோன்றிடுமே நல்ல எண்ணங்கள் !
ரா. பார்த்தசாரதி
Neethi yean thongukirathu
எச்சில்