நீதி ஏன் தூங்குகிறது
ஒரு பசுவிற்காக தன மகனே தவறு செய்தாலும்
தேரடியில் வைத்து கொன்று நீதி வழங்கினான்
பல நீதிபதிகள் சேர்ந்தும் தீர்வு வழங்கபடவில்லை
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என நினைப்பதா !
தவறு செய்தவனை தண்டிப்பதற்கே நீதிமன்றம்
தாழ்த்தப்பட்ட நீதி, தவறுகளை அழிப்பதர்காகவா
காவல் துறையும், நீதியும் பணத்திற்கு அடிமையா ?
கலியுகத்தில் இவையெல்லாம் நடக்குமென்பதா ?
எங்கே செல்கிறது நாடு, மக்கள் உணரவேண்டாமா
அநீதிக்கு உதவிக்கரம் நீட்ட விடலாமா ?
மக்களே, பணத்திர்க்காக தன்மானம் இழக்கலாமா?
சிறுதொகையை பெற்றபின் துன்பம் அடையலாமா ?
பெருந்தொகையை சிறுதொகை மூலம் அடைவதா?
வாக்கு சீட்டினை, பணத்திற்காக விற்பதா !
நன்மை செய்பவர்க்கே வாக்கு அளியுங்கள் !
ஆதாயத்திற்காக வருபவர்களை எதிர்த்திடுங்கள்
பணத்தால் முடியும்என்ற நிலைமை மாறவேண்டும்
வரும் தேர்தலில் நல்ல தீர்ப்பினை வழங்கவேண்டும்
மக்கள் மனம் மாறினால், மாற்றம் ஏற்படும்
நன்மை செய்வோரையே வரவேற்க வேண்டும் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக