எச்சில்
தேனீயின் எச்சிலிலே சுமைமிகுந்த தேன்
மகரந்தத்தை அளித்து மலர்கள் பூக்கிறது
இரு எச்சிலின் சேர்க்கையே ஓர் உயிர் ஜனிக்கிறது
இதை அறியா மானிடம் தவிக்கிறது !
தாயே ! விளை நிலமாம் தந்தையே வித்தாம்
குலம் தழைக்க வந்ததோர் சொத்தாம் !
ஓர் உயிர் உண்டாக மற்றறொன்று தேவை !
ஓர் இனப் பெருக்கத்திற்கும் மற்றொன்று தேவை !
சிலந்தி தன் எச்சிலால் கூடு கட்டுமே,
எச்சிலுடன் அருந்திய தாய்ப்பால் நோய்தடுக்குமே
எச்சிலே உமிழ்நீராகி, செரிமானம் சரியாகுமே
எச்சிலே உடலின், நோய்த்தடுக்கும் மருந்தாகுமே !
உமிழ்நீர் கலந்த திரவம் என மறவாதே !
கண்ட இடத்தில் துப்பாதே,நோயினை பரப்பாதே
உமிழ் நீரை உயிராய் காத்திடு,
நோய் தீர்க்கும் மருந்தாய் நினைத்திடு !
இயற்கை அளித்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமே
எனது, உனது என்பது இடையில் மாறும் பந்தமே !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக