ஆசிரியர் தினம் - 5த் செப்டம்பர்,
மாதா,பிதா, குரு தெய்வம்
மூவரும் கண்கண்ட தெய்வம்,
அன்பிற்கு அன்னை, அறிவுக்கு தந்தை,
கல்விக்கு ஆசான் (குரு) என உலகம் அறிந்ததே !
மனித வாழ்கையில் கல்விக்கே முதன்மை ,
இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே பெருமை,
மாணவன் கல்வி உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணி,
மாணர்வர்களுக்கு ஏணியாய் இருந்தவர்கள் ஆசிரியரே !
இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே பெருமை,
மாணவன் கல்வி உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணி,
மாணர்வர்களுக்கு ஏணியாய் இருந்தவர்கள் ஆசிரியரே !
அறியாமையை அகற்றி , அறிவொளி ஏற்றுபவர்கள் !
கல்வி எனும் உலகிற்கு, ஒளி தருபவர்கள்
பாடம் மட்டும் போதிக்காமல், பண்பையும் புகட்டுபவர்கள்
மாணவனின் உயர்வு கண்டு பெருமிதம் கொள்பவர்கள்!
வாழ்க்கை தூணாய் என்றும் விளங்கும் ஆசிரியர்கள் !
அழியாத கல்விச் செல்வத்தை அள்ளித் தருபவர்கள் !
தன்னலம் துறந்துவிட்டு, உலகிற்கே ஒளி தருபவர்கள் !
ஆசிரியர்கள் சேவையை மனதிற் கொண்டு என்றும் மறவோம் !
ஆசிரியர் பணி மகத்தான பணியன்றோ,
அவர்களை நினவு கொள்வது நமது கடமையன்றோ,
ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே,
அவர்தன் பிறந்த நாளே ஆசிரியர் தினமாக அறிமுகபடுத்தினாரே !
அவர்களை நினவு கொள்வது நமது கடமையன்றோ,
ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே,
அவர்தன் பிறந்த நாளே ஆசிரியர் தினமாக அறிமுகபடுத்தினாரே !
ரா.பார்த்தசாரதி - 8148111951
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக