புதன், 7 ஏப்ரல், 2021
ஞாயிறு, 4 ஏப்ரல், 2021
முதுமை
முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
உடலும் உள்ளமும் சற்றே அடையும் தளர்ச்சி
துணை தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
வீ ழ்ந்தாலும் கைகொடுத்து தூக்கிவிடும் முயற்சி !
அனுபவத்திற்கும், வயதிற்கும், மதிப்பு இல்லை
பெற்றதும் உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை,
ஏனோ கடனுக்காக உதவும் நிலைமை இக்காலத்திலே
உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எக்காலத்திலே ?
அடிபட்டு, இடம் தேடித், தட்டிதடும்மாறும் நெஞ்சங்கள்
பாசத்தினால் விடுபட முடியாத முதியோரின் எண்ணங்கள்
இளம் ஜோடிகள் போல் காதலும், காமமும் இல்லை
முதிர்ந்த காதல்தான், ஆனால் காமம் இங்கில்லை !
முதுமை காதல் என்பது தாஜ் மஹாலின் நினைவு
இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு !
இன்று முதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
இதனை மாற்றாதோ இளமையின் எண்ணங்கள் !
என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
இளமையின் முதிர்ச்சியே மனித இனத்தின் முதுமை
தன் வினை தன்னைச் சுடும் என்பதுதான் பொதுஉடைமை !
முதுமையை இளமையாக்கி நெஞ்சுரத்துடன் நடைபோடுங்கள்
நட்பையும், உறவையும் என்றும் தவிர்த்து விடாதீர்கள்
நடைப்பயிற்சியும், யோகாவும் செய்து உடலை பேணுங்கள்
எங்கே சென்றிடும் காலம் நம்மை, வாழ்விக்கும் என எண்ணுங்கள் !
ரா.பார்த்தசாரதி
.
PILAVA PUTHTHANDU
ஸர்வாரி வருடம் மக்களை ஏழ்மைப் படுத்திய ஆண்டு
தண்ட ஆண்டு மக்கள் உயிரை தின்ற ஆண்டு
கண்டம் யேழில் ருசித்த ஆண்டு
விண்டும் கேட்ட தில்லை இதுபோல்
வேண்டும் சுபிட்ச நல்லாண் டுவரும்
ஆண்டு இருபத் தொன்றும்
பிலவ ஆண்டே நல்லாண்டாய் இருந்திடுவாயே !
பிலவ புத்தாண்டில் ஒற்றுமைப் பூக்கள் மலராதோ! - 2021
\
பிலவ புத்தாண்டில் ஒற்றுமைப் பூக்கள் மலராதோ! - 2021
*புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்
புத்தாண்டே...
* பூமியெங்கும்
அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!
* மண்ணில் விழும்
மழைத்துளியும்
விண்ணில் வீசும்
காற்றும்
யாவருக்கும்
பொதுதானே
புத்தாண்டே!
* நதியால்
இணைந்த
மாநில மக்கள்
அணையால் பிரியும்
அவலமும்
அமிழ்ந்து போகாதோ
புத்தொளி பரப்பும்
புத்தாண்டே...
* பூமியெங்கும்
அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!
* மண்ணில் விழும்
மழைத்துளியும்
விண்ணில் வீசும்
காற்றும்
யாவருக்கும்
பொதுதானே
புத்தாண்டே!
* நதியால்
இணைந்த
மாநில மக்கள்
அணையால் பிரியும்
அவலமும்
அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே!
* சுயநலங்களும்
சூழ்ச்சிகளும்
சுவடு தெரியாமல்
மறையாதோ
புத்தாண்டே
* நாட்டுக்கு நாடு
சமாதானம் மட்டும்
தானமாய் கிடைக்காதோ
புத்தாண்டே!
* தேசங்களுக்கிடையே
மதப் பிரிவினைகள் சிதைந்து
ஒற்றுமை பூககள்
மலராதோ
புத்தாண்டே!
* ஆட்சியும்
அதிகாரமும்
விவசாயிகள்
ஏக்கம் தீர்க்காதோ
புத்தாண்டே!
* உலகெங்கும் கோரோனா அழிந்து
மக்கள் வாழ்வில் அமைதி
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!
ரா.பார்த்தசாரதி
V
வியாழன், 1 ஏப்ரல், 2021
verkalai vettividatheerkal
வேர்களை வெட்டிவிடா திர்கள்
விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !
இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்
இருட்டறை தான்.
திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதை நிலம்தான் !
தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?
கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?
குடும்பத்தின் ஆணிவேராய்
இருப்பதும் தாய்தானே !!
சற்றே சிந்தியுங்கள்
பெருமையினை எடுத்துரையுங்கள் !
ரா. பார்த்தசாரதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)