சனி, 18 ஜனவரி, 2014

கண்கண்ட தெய்வம் பாபா

                                                  கண்கண்ட  தெய்வம் பாபா
 
கிழக்கிலே  ராமகிருஷ்ண பரமஹம்சர்  தோன்றினாரே 
தெற்கிலே  ரமணமகரிஷி , ராமலிங்க ரும் தோன்றினரே
மேற்கில்  ஒரு  ஷீரடி  பாபா  தோன்றினாரே 
அவணியிலே  தெய்வ அருள்பெற்றனரே !

ஷீரடிலே  ஓர்   ஷீரடி  பாபா ,
சாந்தமும்,  அன்பின்  உருவமே பாபா,
சாய்பாபாவின்  கருணை  கவலைகள் தீர்க்குமே ,
சமரசமும், தெய்வீகமும்   கொண்ட   ரூபமே !

அவர்  அடிமலரே  நமக்கு  சரணாலையம் 
அவர்   மக்களின்  மனதில்   நெஞ்சில் ஓர்  ஆலயம்,
அவர் கமலபாதம்  பணிந்தாலே பாவங்கள் தீருமே 
அவரை அனுதினம் வழிபட்டாலே நன்மை அடைவோமே !

பாபாவின்  பாதமே  நமக்கு  துணை 
அவர்  நாமம்  சொல்வதே உற்றத்துனை 
அன்பே கடவுள் , அருளே  அவர் வடிவம்.
அவரே  ஞாலத்தின்  கண்கண்ட  தெய்வம்!


ரா. பார்த்தசாரதி

செவ்வாய், 14 ஜனவரி, 2014

பொங்கலின் வண்ணக்கோலங்கள்

                                         பொங்கலின்  வண்ணக்கோலங்கள்

                                புள்ளியிலே  ஆரம்பித்து  புள்ளியிலே        
                                                   முடியும்    புள்ளிக்  கோலங்கள்,
                                
                                கோடுகளை  இணைத்துப்  போடும் கோலங்கள்,
                                புதுமையாக  நாம் காணும்  வடிவங்கள் !
                              
                                கோலங்கள்   பண்டிகைகளுக்காக மாறும் வண்ணங்கள்,
                                அதுவே  பெண்களுக்குரிய  கை  வண்ணங்கள் !

                                இதயத்தையும் , மனதையும் கவர்ந்திடும் கோலங்கள்,
                                 மகாலட்சுமி அழைப்பதர்கான விடியற்காலை கோலங்கள் !

                                 காலங்களும், கோலங்களும் என்றும் மாறும்,
                                 கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

                                 
                                 இல்லத்தில்  கோலம்  போடுவதே மகாலக்ஷ்மியின் தரிசனம்
                                  மனித  வாழ்கையில் சலனம் போக்குவதே  தெய்வதரிசனம் ! 

                                 வெள்ளிகிழமை. விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்,
                                 இறைவன் பெயரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்!

                                 பொங்கலன்று  சென்னையில் பல வண்ண கோலங்கள,
                                  மனிதனின்  மனதில் தோன்றிடுமே  நல்ல  எண்ணங்கள் !

                                 ரா. பார்த்தசாரதி

                                 


                                   

திங்கள், 30 டிசம்பர், 2013

puthaandu

                                         புத்தாண்டில்  ஒற்றுமைப் பூக்கள் மலராதோ!
                                 

*புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்

புத்தாண்டே
...

* பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

* மண்ணில் விழும்
மழைத்துளியும்

விண்ணில் வீசும்

காற்றும்

யாவருக்கும்

பொதுதானே

புத்தாண்டே
!

* நதியால்
இணைந்த

மாநில மக்கள்

அணையால் பிரியும்

அவலமும்

அமிழ்ந்து போகாதோ

புத்தாண்டே
!
* சுயநலங்களும்
சூழ்ச்சிகளும்

சுவடு தெரியாமல்

மறையாதோ

புத்தாண்டே
!










* நாட்டுக்கு நாடு
சமாதானம் மட்டும்

தானமாய் கிடைக்காதோ

புத்தாண்டே
!

* தேசங்களுக்கிடையே
பிரிவினை

முட்கள் சிதைந்து

ஒற்றுமை பூக்கள்

மலராதோ

புத்தாண்டே
!

* ஆட்சியும்
அதிகாரமும்

ஏழைகள்

ஏக்கம் தீர்க்காதோ

புத்தாண்டே
!

* பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!



R.Parthasarathy

வியாழன், 26 டிசம்பர், 2013

Mr.Mohan

                                     ஆர். மோகனின் 64 காம்  ஆண்டு விழா
                
இன்று  சவேரா ஹோட்டலில்  ஓர்  பிறந்தநாள்  மேடை
திரு. மோகனின்  64 காம் ஆண்டு விழா மேடை !

அகவை அறுபத்து நான்கும்,  ஆய கலைகள் அறுபத்து நான்கும்
                                                                                                       சிறப்புடையதன்றோ  !
இவ்விழாவை தலைமையேற்றி நடத்தும் மகன்களும், மருமகள்களும்
                                                                                      பெருமைக் குரியவர்களன்றோ ! 

இந்திய பிஸ்டனில்  வைஸ் ப்ரெசிடெண்டடாக  இருந்து ஒய்வு பெற்றவரே
 நிறுவனமே அவர் திறமை கண்டு பகுதி நேர  கன்சல்டண்டாக வேலை
                                                                                                                      அளித்தனரே !

மூர்த்தி சிறிதெனினும் ,  கீர்த்திப்  பெற்றார் 1
திறமையுடன் கடினமாக உழைத்து புகழ் பெற்றார் !

வாழை  தன்  கன்றுகளை  விட்டுப்  பிரிவதில்லை 1
இருமகன்களும்  தந்தை  தாயை  விட்டு பிரிவதில்லை !

குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தாங்கும் பரந்த மோகன் உள்ளம் !

காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !

கணவன்  என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் 1

ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !

மூன்று எழுத்திற்கு  ஓர்  சிறப்புண்டு ,
முத்தமிழ்  எனும்  பெயருண்டு !

மோகனை கைப்பிடித்த சாந்தாவிற்கு  மூன்று எழுத்து ,
சாந்தவை கைப்பிடித்த  மோகனுக்கும்  மூன்று எழுத்து !

உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் பிரிக்க முடியாது  நட்பும், உறவும் 1

உற்றாரும், உறவினரும்  ஒன்று கூடி விருந்துண்போம்
திரு மோகன், திருமதி சாந்தாவின்  ஆசி பெறுவோம் !



                                                                   
.
                                                                                       .

புதன், 9 அக்டோபர், 2013

அன்புள்ள காதலியே

                                                            அன்புள்ள  காதலியே


சொல்லவரும்  வார்த்தைகள் காணமல் போகிறது ,
பெண்ணே உன் கண்ணைக்   காணும்போதெல்லாம்!


காதலித்து  கணவனை  கைபிடித்த  நீ வாழ்க பல்லாண்டு,
உன் மனம்  அறியுமோ  நான்  பட்ட  பாடு!

என்னிடமே  தேவையெற்ற   ஊடல் ஏனோ?
உன்னிடம்  மயங்கினாலும் உள்ளத்தால் தடுமாறு கின்றேனோ! 

உன் முல்லை சிரிப்பை உதிர்பாயா
என் நெஞ்சில் ஆசையினை  தூண்டுவாயா?

உன் விழியின்  ஈரம்   சொல்கிறது ,
என் மேல் உள்ள  காதலை !

நெஞ்சில்  காதல் அழகாய்  பூத்ததே , சுகமாய் தாக்குதே
சொல்லாமல் , கொள்ளாமல் மனதில் பந்தாடுதே!

என்னைத்  தேடி  அலையும் உனது ஈரவிழியில்,
வாழ்கிறது நம் காதல், அதிலும் சுகமான காதல்.

ரா.பார்த்தசாரதி

anbulla kanavaney